புதன், 26 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி

நேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன்.

அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.

உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.

தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.

11 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுங்கள் அருமையான கதைகள் மற்றும் சிறப்பு மிக்க எழுத்துக்களை கொண்டு உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. Please remove word verification in comment settings this will help to post comments soon.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் இந்த கதை சொல்லும் முயற்சி தொய்வடையாமல் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. please do the changes in comment settings.


    settings-comments>

    comment form placement- full page

    comment moderation- never


    show word verification for comments- No

    this will help you to get more commets

    பதிலளிநீக்கு
  5. பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.]]

    நல்ல மெஸேஜ் ...

    பதிலளிநீக்கு
  6. திறமை உள்ளவன் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வான். இந்த கதையிலும் அப்படித்தான். தவறு நேர்ந்தாலும் கலங்கிப் போகாமல் அடுத்த முயற்சியை மேற்கொண்ட அந்தச் சிறுவன் பாராட்டுக்குரியவன். பரிசுக்குரியவனும்தான். நல்ல நீதிக்கதை. அறிமுகப்படுத்திய சக்கரை சுரேஷ்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பேரண்ட்ஸ் கிளப்பில் உங்கள் வலைப்பூவிற்கு லிங்க் கொடுத்துவிடுகிறேன். தொடந்து எழுதுங்க

    பதிலளிநீக்கு
  8. நல்ல கருத்துடன் கதை சொல்லும் பாங்கும் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
  9. அக்கா ...கதை மிகவும் நன்றாக உள்ளது,தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு