ஞாயிறு, 6 அக்டோபர், 2019

Fwd: madhwachariyar.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Mon 23 Sep, 2019, 5:47 PM
Subject: madhwachariyar.
To: <rukmani68sayee.avva@blogger.com>



                                                                                                 மத்வாச்சாரியார்.
         உலக நன்மைக்காகப் பிறவி எடுத்து உலக மக்களை உய்விக்க வந்த ஒவ்வொருவரும் மகான்களே. செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வாக்கிற்கிணங்க செய்தற்கு அருமையான செயல்களைச் செய்து தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. இங்கு அவதரித்து மக்களுக்கு நல்லுபதேசம் செய்த மகான்களின் வரிசை மிக நீண்டது.அது காலத்திற்குக் காலம் வேறு பட்டாலும் உலக நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது.அப்படிப்பட்ட மகான்களின் வரிசையிலே பதினான்காம் நூற்றாண்டிலே அவதரித்த மகான் மத்வாச்சாரியார் என்னும் புனிதர்.
         கர்நாடகத்தின் தெற்குப் பகுதியிலிருக்கும் உடுப்பி என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகே ஏழாவது மைலில் உள்ள "பாஜக" என்னும் இடத்தில்தான் இம்மகான் பிறந்தார். இங்குதான் இவர் ஓடியாடி விளையாடி லீலைகள் பல புரிந்தார்.இவரது லீலைகளே இவர் ஒரு அவதார புருஷர் என்பதற்குச் சான்றாக அமைந்திருந்தன.
         திரேதாயுகத்தில் அஞ்சனாதேவியின் புத்திரன் ஆஞ்சநேயனாக அவதரித்து தன் பராக்ரமத்தைக் காட்டி ராமகாதையில் பெரும் பங்கு வகித்தார்.அடுத்து த்வாபர யுகத்தில் குந்திதேவிக்கு மகனாக அவதரித்து பீமசேனன் என்ற பெயர் தாங்கி கிருஷ்ணனுக்கு உற்ற தோழனாக இருந்து தருமருக்கு சிறந்த சகோதரனாகவும் திகழ்ந்தார். கலியுகத்தில் பக்தியைப் பரப்பவும் தீய எண்ணங்களை ஒழிக்கவும் கிருஷ்ண ஆராதனையின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றவும் மத்வாச்சாரியாராகத் தோன்றி த்வைதமதத்தையும் ஏற்படுத்தினார். வாயு தேவரே இந்த மூன்று அவதாரங்களாகத் தோன்றினார் என்பதற்கு அவர்களது புஜ பல பராக்ரமமே சாட்சியாக நிற்கிறது. ஆஞ்சநேயனும் பீமசெனனும் ஆற்றிய அருஞ்செயல்களை இராமாயண, மகாபாரதக் காவியங்களின் மூலம் அறிந்துள்ளோம் மத்வரின் வாழ்க்கை வரலாற்றிலும் அத்தகைய பல செயல்களை நாம் காணலாம்.
மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே ஒரு பானை நிறைய வேகவைத்த கொள்ளை உண்டு ஜீரணித்தவர்.
நான்கு பேறாகத் தூக்கினாலும் தூக்க முடியாத கல்லாலான பலகையை அநாயாசமாகத் தூக்கி தயிர்ப் பானையை மூடியது.பால் பானையை பெரும் பாறையால் மூடியது. போன்ற அதிசயங்களை இவர் நிகழ்த்தியதால் இவர் பீமனின் அவதாரம் என்று நிரூபித்தார். ஒரு முறை பாம்பு ரூபத்தில் வந்த அசுரன் இவரை வழிமறிக்க அவனது தலையைத் தன் காலில் வைத்து அவனை நசுக்கிக் கொன்றார்.இப்போதும் இந்த அடையாளங்கள் எல்லாம் "பாஜக" க்ஷேத்திரத்தில் காணலாம்.
              வாயு தேவரின் மூன்று அவதாரங்களாக அனும பீமா மத்வா என த்ரேதா யுகம், த்வாபரயுகம், கலியுகம் என்ற மூன்று யுகங்களிலும் நிகழ்ந்ததாக நம்பப் படுகிறது.
              சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் உடுப்பி அனந்தேஸ்வரரின் அருளால் திரு மத்யகேகய பட்டருக்கும் 
வேதவதி தேவிக்கும் மகனாக அவதரித்தவர் மத்வாச்சாரியார்.வாசுதேவன் என்ற திருநாமம் சூட்டப்பெற்றார். திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையிலிருந்து துறவறம் செல்லாமல் திருமணத்தன்றே துறவறத்தை நாடிப் புறப்பட்டுவிட்டார். "பூரணப் பிரக்ஞர்" "ஆனந்த தீர்த்தர்" முதலிய பல பெயர்களைப் பெற்றுத் திகழ்ந்தார்.சிறந்த ஹரிபக்தியில் திளைத்தார்.பிரகல்லாதனைப் போல் பக்தி செலுத்தி அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினார்.ஒவ்வொரு த்வாதசியன்றும் அருகிலிருந்த குஞ்சாறு என்ற குன்றைச் சுற்றியிருந்த நான்கு தீர்த்தங்களில் நீராடி வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் மத்தியகேகய பட்டர். அன்று அவரால் சென்று தீர்த்தமாட முடியவில்லை. அதனால் வருத்தத்துடன் காணப்பட்டார்.இதைப் பார்த்த மத்வர் தன் தந்தைக்காக நான்கு தீர்த்தங்களின் புனிதம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தங்களின் வீட்டின் பின்புறமே "வாசுதேவ தீர்த்தத்தை"
நிர்மாணித்தார்.அதன் புனிதத்தை நிரூபிக்கும் பொருட்டு அங்கிருந்த ஆலமரத்தைப் பெயர்த்து தலைகீழாக நட்டு இந்த தீர்த்தத்தின் நீரை விட்டு வர வேரிலிருந்து துளிர் விட்டு கிளைகள் விழுதுகள் எனப் படர்ந்து வளர்ந்தது.அந்த மரமும் வாசுதேவ தீர்த்தமும் இன்றும் சாட்சியாக உள்ளன.
               இவர் சிறுவனாக இருந்த போது தந்தையின் கடனைத் தீர்க்கும் பொருட்டுக் கடன்காரருக்குப் புளியங் 
கொட்டையைக் கொடுத்தாராம். அவரும் அதை எடுத்துச் சென்றார். சில நாட்களிலேயே அவர் பெரும் தனவந்தர் ஆகிவிட்டதாகக் கூறி மகிழ்ந்து மத்திய கேகய பட்டருக்கு மரியாதை செய்தாராம்.இப்படிப் பல லீலைகளைப் புரிந்த 
மத்வர் உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் பார்ப்போம்.
மல்ப்பே கடற்கரை அழகும் செழுமையும் நிறைந்தது.வரலாற்றுப் பெருமை மட்டுமல்லாது ஆன்மீகச் சிறப்பும் கொண்டது. அது ஒரு இயற்கைத் துறைமுகமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. படகுகளும் சிறு கப்பல்களும் 
சூராவளியினின்றும் தப்பிக்க இந்தத் துறைமுகத்தில்தான் ஒதுங்குவது வழக்கம். அப்படிப்பட்ட கடற்கரையில் மத்வாச்சாரியார் தியானத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது பெரும் சூறாவளி ஏற்பட்டது. கடலில் வந்த சிறிய கப்பல் ஒன்று அந்தச் சூறாவளியில் சிக்கித் தடுமாறியது. கடற்கரை நோக்கி நகரமுடியாதபடி  பெரும் காற்று அந்தக் கப்பலை அலைக்கழித்தது. மூழ்கி விடும் போலத் தள்ளாடியது கப்பல்.
             அதில் பயணம் செய்த வணிகர்கள் உயிருக்குப் பயந்து பெரும் கூச்சலிட்டனர். வெகு தொலைவில் கரையையும்  அங்கு அமர்ந்திருக்கும் ஒரு சந்நியாசியையும் கண்டனர். கப்பலில் இருந்த பலரும் அவரை நோக்கிக் காப்பாற்றும் படி கூவினர். கண்களைத் திறந்த மத்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். காற்றுக்கு அதிபதி வாயுதேவர்.அவரை எண்ணி வாயுஸ்துதி செய்தார் மத்வர். தனது காவி வஸ்திரத்தை அசைத்தார். காற்றும் நின்றது கப்பலும் கரையை அடைந்தது.அந்தக் கப்பலிலிருந்த வணிகர்கள் மத்வரைப் பணிந்து காணிக்கை கொடுக்க முன் வந்தனர் ஆனால் அதை ஏற்காத மத்வாச்சாரியார் அவர்கள் கப்பலைத் தாங்குவதற்காக சுமைக்காக வைக்கப் பட்டிருந்த கோபிச்சந்தனக் கற்களைத் தருமாறு கேட்டார்.
           அவரது விருப்பப் படியே அந்தக் கட்டிகளைக் கொடுத்தார் கப்பல் தலைவர்.மத்வர் அந்தக் கட்டியை உடைக்க அதற்குள் கையில் மதத்துடன் நிற்கும் கிருஷ்ணா விக்கிரகம் காட்சியளித்தது.அந்த விக்கிரகத்தை அனந்தேஸ்வரர் கோயிலின் அருகே பிரதிஷ்டை செய்தார்.அந்த இடம் இன்று உடுப்பி என்ற புண்யக்ஷேத்திரமாக விளங்குகின்றது.(தொடரும்)





Fwd: மத்வாச்சாரியார்.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu 5 Jan, 2017, 10:32 PM
Subject: மத்வாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>


                                                              ( காட்சி--1)

 (அழும் குழந்தையை கல்யாணி  மடியில் வைத்துக் கொண்டு சமாதானம் செய்கிறாள்.)

கல்யாணி ;  அழாதேடா குழந்தாய். அம்மா வந்துவிடுவாள். பசிக்கு பால் தருவாள்.அழாதே வாசு.

இரு உனக்கு தின்ன ஏதாவது தருகிறேன்.(குழந்தையைக் கீழே விட்டுவிட்டு உள்ளிருந்து ஒரு பாத்திரத்திலிருந்து வேகவைத்த பயறு கைப்பிடி எடுத்துத் தருகிறாள். அதைக் குழந்தை மடியில் வைத்துத் தின்கிறான். அழுகை நின்றபின் கல்யாணி உள்ளே செல்கிறாள் பயறு தின்ற பின் மீண்டும் பாத்திரத்திலிருந்து பயறை எடுத்துத் தின்கிறான். பின் பாத்திரத்தோடு தின்றுவிட்டு பாத்திரத்தை உருட்டிவிடுகிறான்.)
வேதவதி ; (வந்துகொண்டே)குழந்தாய் வாசு பசிக்கிறதா?ரொம்ப நேரமாகிவிட்டதா, இரு பால் தருகிறேன் வா. குழந்தையைநெருங்கிப் பார்த்து அவன் சிரிப்பதைப் பார்த்து அதிசயத்துடன் நின்றவள் பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து துடிக்கிறாள்.
ஐயோ இதிலிருந்த பயறு என்னவாயிற்று? கல்யாணி! சீக்கிரமாக வா.இதிலிருந்த பயறு என்னவாயிற்று?

கல்யாணி ஓடி வருகிறாள் 
ஐயோ அம்மா தம்பி முழுவதையும் தின்று விட்டானம்மான்ன செய்வேன்.

வேதவதி;குழந்தைக்கு வயறு வலிக்காமல் இருக்கவேண்டுமே அப்பனே அனந்தேஸ்வரா நீதான் துணை.(குழந்தையின் வயிற்றைத் தடவிக்கொடுக்க அவன் சிரித்துக் கொண்டே வெளியே ஓடுகிறான்.)

                                                               (காட்சி--2)

(வேதவதி நீர்தெளித்து இலைபோட்டு பலகையை போட்டுக் காத்திருக்கிறாள்.அங்கு  வாசு வருகிறான்)

வாசு;அம்மா, எனக்குப் பசிக்கிறது அப்பா எங்கேயம்மா?
வேதவதி ; குழந்தாய். உணவு தயாராக இருக்கிறது போய்  அப்பாவை அழைத்து வா. சாப்பிடலாம் .

வாசு ;இதோ வருகிறேன் அம்மா.(அப்பா என அழைத்தவாறே ஓடுகிறான்.

                                                                   

                                                                  ( காட்சி--3) 
(ஒரு மரத்தடியில் எருது வியாபாரி  அமர்ந்திருக்கிறார்.அருகே மத்ய கேக பட்டர் கவலையுடன் நிற்கிறார்.அவரருகே வந்து கையைப் பற்றுகிறான் வாசு) 

வாசு ;அப்பா, வாருங்கள் சாப்பிடலாம். எனக்கு நிரம்பப் பசிக்கிறது.
பட்டர்; வாசு இந்த மனிதருக்குக கடனைத் திருப்பிக் கொடுத்த பின்னர்தான் நான் சாப்பிடவேண்டும். உனக்குப் பசிக்கும் நீ போய்ச் சாப்பிடு.
வாசு; இல்லையப்பா. நாம் இருவரும் சேர்ந்தேதான் சாப்பிட வேண்டும்.கொஞ்சம் இருங்கள் 
(எருது வியாபாரியிப் பார்த்துக் கூறுகிறான்) 
ஐயா, என் அப்பாவைச் சாப்பிட அனுமதியுங்கள்.அவருடன்தான் நான் சாப்பிடுவேன். எனக்குப் பசிக்கிறது.
வியாபாரி;குழந்தாய், உன் அப்பா எருது விற்ற தொகை ஐம்பது வராகன் தரவேண்டும். அதைக் கொடுத்துவிட்டால் நான் போய்விடுவேன். பிறகு நீ உன் அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடலாம்.(சிரிக்கிறார்)
வாசு;அப்பா, நீங்கள் உள்ளே செல்லுங்கள். இவர் கடனை நான் தீர்த்துவிட்டு வருகிறேன்.
பட்டர்; நீ குழந்தையல்லவா.நீ எப்படியப்பா இவர் கடனைத் தீர்ப்பாய்?
வாசு;( வியாபாரியின் கையைப் பற்றி சற்றுத் தொலைவு அழைத்துச் செல்கிறான் ) ஐயா, தந்தையின் கடனைத் தீர்ப்பது ஒரு தனயனின் கடமை.இந்தாருங்கள்.(கீழே குனிந்து புளியங்கொட்டைகளைப் பொறுக்குகிறான் அதை வியாபாரியின் கையில் தருகிறான்)
ஐயா, இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வியாபாரி;கனிவுடன் )குழந்தாய் தந்தையின் கடனைத் தீர்ப்பது தனயனின் கடமை என்ற உன் நல்ல உள்ளத்திற்காக இதைப்  பெற்றுச் செல்கிறேன். 
நீ  உள்ளே போய்ச் சாப்பிடு..
(பட்டரைப் பார்த்து )பட்டரே , உங்கள் கடன் தீர்ந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.நான் வருகிறேன்(போகிறார்)
வாசு;(திகைத்து நின்ற பட்டரின் கைகளை பற்றி )வாருங்கள் அப்பா, சாப்பிடப் போகலாம்.(போகிறார்கள்)
                                                                                  (காட்சி --4)
(வேதவதி கையில் இலையுடன் வருகிறாள்.அப்போது வாசு ஓடிவருகிறான்.)
வாசு; அம்மா, எனக்குப் பசிக்கிறது.சீக்கிரம் சாதம்  பரிமாறுங்கள அம்மா. அப்பா எங்கேயம்மா?
வேதவதி; வாசு சற்று நேரத்தில் அப்பா வந்துவிடுவார். பொறு.
வாசு; அப்பா எங்கேயம்மா.
வேதவதி; அவர் பரசு தீர்த்தம், தனுசு,பண தீர்த்தம், கட தீர்த்தம் ,அனைத்திலும் ஸ்நானம் செய்துவிட்டு வர சற்று நேரமாகும் அதுவரை நீ பொறுமையாக இரு.
வாசு; அம்மா, இந்த குஞ்சார் மலையைச் சுற்றியுள்ள அத்தனை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு வர நேரம் மட்டுமல்ல ரொம்ப சிரமமும் அல்லவா?
வேதவதி ;ஆனால் உன் தந்தை அந்தத்தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யாமல் வரமாட்டார்.சாப்பிடவும் மாட்டாரே.
(அப்போது ஈரத்துண்டுடனும் கையில் சொம்பில் நீருடனும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே உள்ளே வருகிறார் மத்ய கேக பட்டர்.)
வாசு;அப்பா நான்கு தீர்த்தங்களில் நீராடி வருவது உங்களுக்கு சிரமமாக இல்லையா அப்பா.
(.பட்டர் சிரிக்கிறார்)
பட்டர்; இருந்தாலும் அந்த தீர்த்தங்களில் ஸ்நானம்சரிசெய்வது என் வழக்கமாகிவிட்டதப்பா.தீர்த்த ஸ்நானம்  செய்தபின்னர் சாப்பிட்டால்தான் என் மனம் திருப்தியடைகிறது.
வாசு; ஏனப்பா நமது வீட்டின் பின்புறம் இருக்கும் கேணியில் அந்த நான்கு தீர்த்தங்களின் புனித நீரும் இருக்கிறது என்றால் அதில் குளித்தால் போதுமல்லவா.
பட்டர்; போதும்தான் ஆனால் கேணிநீரில் புனித தீர்த்தம் கலந்துள்ளது என்பதை எப்படி ஒப்புக் கொள்வது?
வாசு;என்னுடன் வாருங்களப்பா (அவர் கையைப்பிடித்து பின்புறம் அழைத்துச் செல்கிறான்.)(ஒரு ஆலமரத்தைக் காட்டி)
அப்பா இந்த ஆலமரத்தை தலைகீழாக நட்டு அதைஇந்த நீரை விட்டு வரலாம். நான்கு நாட்களில் இந்த மரம் துளிர்விட்டு வளர்ந்தால் அப்போது இந்த கேணியில் புனிதநீர் இருக்கிறது என்று நம்புவீர்களா அப்பா?
பட்டர்; (சிரித்து)என்னப்பா சொல்கிறாய்?தலைகீழாக நட்ட ஆலமரம் துளிர்விட்டு வளர்வதாவது.உன் விளையாட்டை உன்போன்ற பிள்ளைகளிடம் வைத்துக் கொள்ளடா.
வாசு; இல்லையப்பா. உண்மையாகச் சொல்கிறேன்.இதோபாருங்கள்.(அங்கிருக்கும் ஒரு சிறிய மரத்தைப் பிடுங்கி  தலைகீழாக .
நடுகிறான்.கேணி நீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறான்.
அப்பா இன்னும் இரண்டு நாட்களில் இந்த மரம் துளிர்க்கும்.அப்போது நான் சொன்னதை நம்புங்கள்.இப்போது சாப்பிடப் போகலாம் வாருங்கள்.(அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறான் வாசு.)
ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com