"என்பிலதனை வெயில் போல காணுமே
அன்பிலதனை அறம்."
ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சதிஷ் மிகவும் கெட்டிக்காரன். வகுப்பில் முதல் மாணவனாகவும் இருந்தான்.அத்துடன் எந்த பிராணியைக் கண்டாலும் அதனுடன் கொஞ்சி விளையாடுவான். அத்தனை பிரியம்.
அவன் தினமும் பள்ளிக்கு வருவான்.மாலையில் தாத்தாவின் கையைப்பற்றிக் கொண்டே கதை பேசியபடி வீட்டுக்கு வருவான்.
ஒருநாள் தாத்தாவுக்கு முடியவில்லையென்று வேலைக்காரி மாரி அவனைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்தாள்.அவளுடன் வரும்போது வழியில் ஒரு குட்டிப் பூனை கருப்பும் வெளுப்பும் கலந்த நிறத்தில் அழகாக இருந்தது. ஒரு மரத்தடியில் பயந்தவாறு ஒடுங்கி கொண்டு அமர்ந்திருந்தது. அத்துடன் மியாவ் மியாவ் என்று குரல் கொடுத்தபடி இருந்தது. அதைக் கண்ட சதீஷ் தன கையைப் பற்றியிருந்த மாரியின் கையை விடுவித்துக் கொண்டு ஓடி அந்தப் பூனைக் குட்டியை எடுத்து அணைத்துக் கொண்டான்.
உடனே மாரி "வேண்டாங்க சாமி அதை விடுங்க சாமி. தாத்தாவுக்குப் புடிக்காதுங்க.என்னையைத்தான் திட்டுவாரு."என்றாள் அன்போடு.
"ஆன்டி, பாவம் ஆன்டி எப்படி நடுங்கிக்கிட்டு இருக்கு பாருங்க பசிபோல இருக்கு. பாவம் அம்மாவத் தேடி அலையுது போல இருக்கு."
"சரிதான் கண்ணு. தாத்தாவுக்குப் புடிக்காதே. திட்டினா என்ன செய்யறது?"
"தாத்தா கண்ணுல படாம நான் பாத்துக்கறேன்.நீங்க பயப்படாதீங்க."
என்று சொன்னபடியே அந்த அழகிய குட்டியைத் தன மார்போடு அணைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாகச் சென்று அங்கிருந்த பூத்தொட்டிகளின் இடையே வைத்தான். பின் வேகமாக உள்ளே ஓடி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்து பூனை முன் வைத்து அது ஆவலோடு குடிப்பதை ஆசையோடு பார்த்தான்.அதற்குள் வீட்டின் உள்ளிருந்து தாத்தா" கண்ணா, சதீஷ், வந்துட்டியா?"என்று அழைக்கும் குரல் கேட்கவே உள்ளே வேகமாக ஓடினான்.
அன்புடன் தாத்தாவின் அருகே அமர்ந்து வழக்கம்போல பள்ளிக் கதைகளை சொல்லத தொடங்கினான்.தாத்தாவும் மிகவும் ஆசையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.சற்று நேரத்தில் சதீஷின் அம்மா அழைக்கும் குரல் கேட்கவே, " நீ இன்னும் பால் குடிக்கலையா?அம்மா குரல் கேக்குதே.போ, போய் பால் குடிச்சுட்டு வா."என்றார்.
இப்போது சதீஷுக்கு தாத்தாவை விட தன பூனைக்குட்டிதான் மிகவும் முக்கியமாகத் தெரிந்தது. எனவே வேகமாக பாலை வாங்கிக் கொண்டு பின் புறம் ஓடினான்.
எப்படியோ இரவு வரை பூனையை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றி விட்டான்.படுக்கையில் படுத்ததும் அந்தப் பூனையின் மியாவ் குரல் அனைவரையும் எழுப்பிவிட்டது.எப்படியோ ஒரு இடுக்கு வழியாக உள்ளே புகுந்த பூனை சதீஷின் அருகே வந்து ஒண்டிக் கொண்டது.
இரவு முழுவதும் சதீஷும் தூங்க முடியாமல் வெகுநேரம் கழித்துத் தூங்கினான் காலையில் எழுந்தபோது அருகே பூனைக்குட்டியைக் காணாமல் பின்புறம் ஓடினான்.அங்கே அருகம் புல்லை மேய்ந்தவாறு விளையாடிக் கொண்டு இருந்தது.அது.உள்ளே ஓடிய சதீஷ் தன பாலக் கையில் எடுத்துக் கொண்டு பூனைக்குத் தேவையான பாலை அதன் பிளாஸ்டிக் கிண்ணத்தில் ஊற்றினான் அதனுடன் சேர்ந்தே தானும் பாலைக் குடித்தான்.
அன்று தாத்தாவுடன் மனமில்லாமல் பள்ளிக்குச் சென்றான்..
மாலை வந்தவுடன் தாத்தாவுடன் வீடு திரும்பும் போதே அவரிடம் பூனையைப் பற்றி எப்படிக் கேட்பது என்று தவித்தவாறே வேகமாக நடந்தான்.அவன் மனம் என்ன நினைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார் தாத்தா. அவனிடம் மெதுவாக "சதீஷ் கண்ணா, நம்ம வீட்டுக்குப் பூனையெல்லாம் சரிப்படாதுடா.அதனுடைய தொந்தரவு தாங்க முடியாது.அதனால "அதனால என்ன பண்ணினீங்க பூனையை?"என்று இடைமறித்துக் கேட்டான் அழுகையுடன்.
"ஒண்ணும் பண்ணலை. நீயே வந்து உன் கையாலேயே அதைக் கொண்டு போய் விட்டுவா.இப்போ அழாம நட "என்று சற்று கண்டிப்புடன் சொன்னார் தாத்தா.வீட்டுக்குவந்தவன் அழுகையுடன் பூனையை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.அம்மா என்ன சொல்லியும் பால் குடிக்கவோ டிபன் சாப்பிடவோ வரவில்லை.அவன் அழுகையைப் பார்த்து அம்மா தாத்தாவுக்குத் தெரியாமல் பூனைக்குப் பால் ஊற்றினாள் அதைப் பார்த்து மகிழ்ந்த சதீஷ் தானும் சாப்பிட்டான்.அதன் பின் தாத்தாவின் முன் பூனை வராமல் அம்மாவும் சதீஷும் பார்த்துக் கொண்டார்கள்.
ஒருநாள்மாலை . நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. விரைவிலேயே தாத்தா சாப்பிட்டுவிட்டுப் படுக்கஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.சதீஷும் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு சாப்பிடப் போனான்.திடீரென்று விளக்குகள் எல்லாம் அணைந்து போக ஒரே இருள் சூழ்ந்தது.அம்மா இரண்டு மூன்று கைவிளக்குகளை ஏற்றி அங்கங்கே வைத்தார்.அதே சமயம் சதீஷின் அணைப்பிலிருந்து பூனை தாவி தாத்தாவிடம் சென்று நின்றது.அவரைச் சுற்றி மியாவ் மியாவ் என்று கத்திக் கொண்டுசுற்றி வந்தது.இதனால் கோபமடைந்த தாத்தா
"டேய் சதீஷ் இந்தச் சனியன்என் பிராணனை வாங்குகிறது பார். வந்து தூக்கிப்போ" என்று கத்தினார். அவர் கையில் தலையணையை வைத்துக் கொண்டு கட்டிலருகே நின்று கொண்டு பூனையைத் துரத்திக் கொண்டிருந்தார். பூனையோ அவரது காலைச் சுற்றிக் கொண்டு நகர மறுத்தது. பயந்துபோன சதீஷ் ஓடிவந்து பூனையைத் தூக்கிக் கொண்டான். தாத்தா த்லையணையைக் கட்டிலில் போட்டவுடன் சதீஷின் கையிலிருந்த பூனை திமிரிக் கொண்டு பாய்ந்து கட்டில் மீது தாவியது அதைத் தடுத்த தாத்தா தன அருகே இருந்த வாக்கிங் ஸ்டிக்கை எடுத்து அதன் காலில் போட்டார்.காலில் அடிபட்ட பூனை மியாவ் என்று கத்தியபடியே மீண்டும் தாத்தாவைப் படுக்க விடாமல் படுத்தியது.அதேநேரம் மின்சாரம் வந்துவிடவே தாத்தா தலையணையைச் சரியாக உதறிப் போட்டவுடன் உள்ளிருந்து ஒரு கருந்தேள் மெதுவாக நகர்ந்து தலையணை உறைக்குள்ளிருந்து வெளியே வந்தது.அதைப் பார்த்துத் தாத்தா பயந்து போய் அலறினார்.
எல்லோரும் ஓடிவருவதற்குள் பூனை பாய்ந்து அதைக் கடித்துத் துண்டாக்கி விட்டு சாதுவாய் அமர்ந்து கொண்டது.
"டேய் சதீஷ், இதற்காகத்தானடா இந்தப் பூனை என்னைப் படுக்க விடாமல் தடுத்திருக்கிறது. இது தெரியாமல் அதை அடித்து நொண்டியாக்கிவிட்டேன் பாவம் காலுக்கு மருந்து போடு சதீஷ்."என்று சொன்ன தாத்தாவை அதிசயத்துடனும் மகிழ்ச்சியுடனும் பார்த்தான் சதீஷ்.
தன பூனையை அணைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
இரவு முழுவதும் அந்த வாயில்லா ஜீவனை அடித்து விட்டோமே.என்று மிகுந்த வருத்தத்துடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் தாத்தா. பொழுது விடிந்ததும் அந்தப் பூனையை எடுத்துத் தடவிக் கொடுத்து அதன் கால் நொண்டுவதைப் பார்த்து மிகவும் வருந்தினார்.அறமற்ற காரியத்தைச் செய்தோமே என்று மனம் வருந்தினார்.
காலையில் சதீஷும் பாடம் படிக்கையில் "என்பிலதனை வெயில் போல காயுமே
அன்பி லதனை அறம்" என்று படிக்கும்போது தாத்தா வள்ளுவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.அன்பில்லாமல் தான் நடந்து கொண்ட செய்கையால் இரவு முழுவதும் எப்படிப் பாடுபட்டோம்.எவ்வளவு மனம் வருந்தினோம். இனி அவசர பட்டு எந்த உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என முடிவு செய்து கொண்டார்.அவர் முடிவு சரிதானே?
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot. com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.b