ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

Fwd: பாட்டி சொன்ன கதைகள்.---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 16 Feb 2019 at 12:43
Subject: பாட்டி சொன்ன கதைகள்.
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>


         11.குல்லாய் வியாபாரியும் குங்குகளும்.
                   ஒரு ஊரில் ஒரு குல்லாய் வியாபாரி இருந்தான்.குலாம் என்று அவனுக்குப் பெயர்.அவன் தினமும் குல்லாய்களைத் தைப்பான். தைத்த குல்லாய்களை ஒரு மூட்டையாய்க் கட்டிக்கொண்டு பக்கத்து ஊர்களுக்கெல்லாம் கொண்டு போய்  விற்றுவிட்டு இரவில் ஊர் திரும்புவான்.
          ஒரு நாள் குல்லாய்களை மூட்டையாய்க் கட்டிக் கொண்டு 
ஊருக்குள் தெருக்களில் அலைந்தான். ஊருக்குள் யாரும் வாங்காததால் வழக்கம்போல் பக்கத்து ஊருக்குச் செல்ல எண்ணினான். அப்போது நல்ல வெய்யில்  அடித்தது.குலாமுக்கு உடல் முழுவதும் வியர்த்து வழிந்தது.மிகவும் களைத்து விட்டான்.
வழியில் ஒரு பெரிய ஆலமரம் கிளைகளை பரப்பிக் கொண்டு மிகுந்த நிழலைக் கொடுத்தபடி நின்றிருந்தது.
           அந்த நிழலில் தன மூட்டையை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.சற்று நேரத்தில் தூக்கம் கண்களைச்  சுழற்றியது. குளிர்ந்த ஆலமர நிழலும் இதமான காற்றும் அவனை சுகமாகத் தூங்க வைத்தது. தன மூட்டையைத் தலைக்கு வைத்தபடி அயர்ந்து உறங்கிப்போனான் குலாம் 
            வெகுநேரம் கழித்துக் கண்களைத் திறந்த குலாம் திடுக்கிட்டான். அவன் தலைக்கடியில் இருந்த குல்லாய் மூட்டை காலியாக இருந்தது.யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி ப்  பார்த்தான்.யாரையும் காணவில்லை.தலையில் கையை வைத்தபடி மரத்தின் வேர்மீது அமர்ந்துவிட்டான்.
             திடீரென்று மரத்தின் மேலிருந்து கீச்கீச்சென்று சத்தம் வருவதைக் கேட்டான் மரக்கிளை வேகமாக அசைவதையும் பார்த்தான் மரத்தின் மீது நிறைய குரங்குகள் அமர்ந்துகொண்டும் அங்குமிங்கும் அலைந்து கொண்டும் இருந்தன.அவற்றின் தலையில் தன்னுடைய குல்லாய்கள் அலங்கரித்தபடி இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
              குலாமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தன தலையிலிருந்த குல்லாயைக் கையில் எடுத்துத் தன தலையைச் சொரிந்து கொண்டான்.சில குரங்குகள் அதேபோலக் குல்லாயைக் கையில் வைத்துக் கொண்டன.அதைப் பார்த்த குலாமுக்கு மனவேதனையிலும் சிரிப்பு வந்தது.
              என்ன செய்வது என்று தோன்றாமல் அமர்ந்திருந்தான் சற்று நேரம் கழித்து மீண்டும் எழுந்து இங்குமங்கும் நடந்தான். கைகளைப் பிசைந்து கொண்டான்.
குரங்குகளும் அசைவதைப் பார்த்தான்.சற்று நேரம் கழித்துத்தான் 
அவைகள் தான் செய்வதைப் போலச்  செய்வதைக் கண்டான்.
தொடர்ந்து பலவிதமாகச் செயல்களை செயது காட்டினான்.குரங்குகளும் அவன் செய்வதைப் போலச்  செய்தன.
              கடைசியில் தன தலையில் இருந்த குல்லாயைத் தரையில் எறிந்தான்.எல்லா குரங்குகளும் குல்லாயைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு சுழற்றிவிட்டு மீண்டும் தலையில் வைத்துக் கொண்டன.குலாம் திகைத்தான்.
"நம்மைப் போலக் குரங்குகள் குல்லாயைத் தரையில் எறிந்து விடும் என்று தாத்தா சொன்னாரே, ஆனால் இவை அப்படிச் செய்யவில்லையே"என்றபடி சிந்தித்தான்.
ஒரு பெரிய குரங்கு அருகில்  இருந்த கிளைக்குத் தாவி அமர்ந்தது.
"என்ன, குல்லாய் வியாபாரி, நாங்கள் எல்லாரும் குல்லாயைக்  கீழே போடவில்லையே என்று பார்க்கிறாயா?என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். அவர் செய்தது போல நாங்களும் செய்யமாட்டோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்."
குரங்கு சொன்னதைக் கேட்டுகுலாம்  திகைத்து நின்று விட்டான்.
அவன் கண்களில் நீர் ததும்பியது.பலநாள் உழைப்பில் தயாரான குல்லாய்கள் எல்லாம் போய்விட்டதே  இந்த நஷ்டத்தை எப்படி சரி செய்வது/ என்று வருத்தத்துடன் மீண்டும் பெரிய வேரின் மீது அமர்ந்து கொண்டான்.
         அவன் நிலையைப் பார்த்த எல்லாக் குரங்குகளும் கீச் கீச்சென்று கத்திக் கொண்டே அருகில் வந்தன.பெரிய குரங்கு அவன் அருகே அமர்ந்தது.அவன் கையைப் பிடித்து அவன் கையில் குல்லாயை வைத்தது. எல்லாக் குரங்குகளும் அவன் மூட்டையில் குல்லாய்களைப் போட்டன.
"வியாபாரியே , கவலைப் படாதே.உன் குல்லாய்களை எடுத்துச் செல். நாங்கள் ஏமாந்து போனதாக எண்ணாதே.உன்மீது இரக்கம் கொண்டு உன் குல்லாய்களைத் திருப்பிக் கொடுக்கிறோம்.நாங்கள் உங்கள் நண்பர்கள் என்று எண்ணிக் கொள் சென்று வா."என்றதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட குலாம் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி குல்லாய்களை மூட்டையாகக் கட்டினான்.
"மிக்க நன்றி உண்மையாகவே நீங்ககள் என் நண்பர்கள்தான். உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். வருகிறேன்."என்றபடி மூட்டையைச் சுமந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com