வெள்ளி, 19 அக்டோபர், 2018

சிங்கமும் சுண்டெலியும்

              ஒரு காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து கிட்டிருந்துச்சு..அந்த காட்டுக்கே அது ராஜாவா சுத்திகிட்டிருந்துச்சு .அந்தக் காட்டில் புலி கரடி மான் போல  பல மிருகங்களும் வாழ்ந்து கிட்டு இருந்துச்சு.எலி முயல் போல சின்னச் சின்ன பிராணிகளும் இருந்துச்சு. மயில் குருவி மைனா போல நிறையபறவைங்களும் மரத்துக்கு மரம் பற ந்துகிட்டு சந்தோஷமா இருந்துச்சுங்க.
          ஒருநாள் காலநேரம்.சிங்கராஜா தன்னோட வீட்டுல அதுக்குப் பேருதான் குகை அப்படீன்னு சொல்லுவாங்க.பெரீய்ய மலைக்குள்ள ஒரு பெரீய்ய ஓட்டை இருக்கும் அதுதான் சிங்கத்தோட வீடு. அந்த வாசல்ல சிங்கம் சுகம்மா தூங்கிகிட்டு இருந்துச்சு.அப்போ அங்க வந்த ஒரு சின்ன சுண்டெலி அங்கேயும் இங்கயுமா ஓடி விளையாடிக்கிட்டிருந்துச்சு.அந்தப் பெரிய சிங்கத்து மேலயும் ஓடி விளையாடத தொடங்கிச்சு.சிங்கத்துக்கு முழிப்பு வந்துடுச்சு. அது கோபமா எலிக்குஞ்சைப்  பார்த்து பெரிசா கர்ஜனை பண்ணிச்சு. தூக்கம் கெட்டுப் போச்சேன்னு அதுக்கு ஒரே கோபம்.தன முன்னால ஒடின அந்த சுண்டெலியப்பிடிச்சுக்கிட்டு கோவமா பார்த்துச்சு. அப்பதான் எலிக்குஞ்சுக்குப் பயம் வந்துச்சு.திருதிருன்னு முழிச்சுது.அப்போ சிங்கம் சொல்லிச்சு," 
ஏ சுண்டெலியே,என்னை ப்  பாத்தா எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கும் உனக்கு என்ன தயிரியம் இருந்த எம்மேலேயே விழுந்து விளையாடுவே உன்னை அப்படியே தின்னுடறேன் பாரு"அப்படீன்னுச்சு.உடனே அந்த சுண்டெலி "என்ன மன்னிச்சுடுங்க தெரியாம விளையாடிட்டேன். "அப்படீன்னு கெஞ்சிச்சு.சிங்கம் பேசாமே இருக்குறதைப்பார்த்து "சிங்கராஜா என்னிக்காச்சும் உங்களுக்கு உதவுறேன். நான் இத்துனூண்டு இருக்கேன் உங்க பல்லுக்கு கூட காணமாட்டேன்.என்ன விட்டுடுங்க "அப்படீன்னு கெஞ்சுனதும் சிங்கராஜா "போ தூரப்போயி விளையாடு"அப்படீன்னு சொல்லி விட்டவுடன் சுண்டெலி ஒரே ஓட்டமா மலை இடுக்கில்  ஓடிட்டுது 
           கொஞ்ச நாளாச்சு. ஒருநாள் சுண்டெலி விளையாடிக்கிட்டிருந்துச்சு. அப்போ திடீருன்னு சிங்கத்தோட கர்ஜனை கேட்டுது. சுண்டெலி உடனே அது சிங்கராஜா கர்ஜனைன்னு புரிஞ்சிக்கிடுச்சு.ஒரே ஓட்டமா அந்தக் குரல் வந்த இடத்தைப்பார்த்து ஓடிச்சு.பாத்தா அந்த  சிங்கத்தைப் பிடிக்க சர்க்கஸ்காரன் விருச்ச வலையில அது  மாட்டியிருந்துச்சு.உடனே சுண்டெலி அந்தச்சிங்கத்து முன்னால போயி நின்னுச்சு.
"சிங்கராஜா பயப்படாதீங்க நா இந்த வலய அறுத்து உங்கள விடுதலை பண்றேன். நீங்க என்னை  உயிரோட விட்டீர்களே அதனால நான் உங்களுக்கு உதவுறேன்."அப்படீன்னு சொல்லி வலய பல்லால கடிச்சுக் கடிச்சு தூளாக்கிடுச்சி.இப்போ சிங்கம் வெளிய வந்து 
"சுண்டெலியே உனக்கு ரொம்ப நன்றி "அப்படீன்னு சொல்லிட்டுக் காட்டுக்குள்ள ஓடிப் போயிடுச்சு.
சுண்டெலியும் சந்தோஷமா தன்னோட வீட்டுக்கு ஓடிடுச்சு. எப்படி சிறு துரும்பும் பல் குத்த உதவும் அப்படீன்னு பெரியவங்க சொன்னாங்களே அது நெசம்தானே.











ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

பாட்டி சொன்ன கதை

          அன்புள்ள பேரக் குழந்தைகளே பாட்டியின் நல்வாழ்த்துக்கள் 
இதுவரை உங்கள் அக்காக்கள் அண்ணன்களுக்கு கதை சொல்லி வந்தேன்.இனி எங்கள் தாத்தா பாட்டி எங்களுக்குச் சொன்ன கதைகளை உங்களுக்குச்  சொல்லப் போகிறேன். இந்தக் கதைகளை உங்கள் பாட்டி தாத்தாக்கள் படித்து உங்களுக்குச் சொல்வார்கள்.இவை எல்லாமே பழைய கேட்ட கதைகள்தான்.ஆனாலும் புதிதாகக் கேட்கும் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும் என்று நம்புகிறேன்.
உங்கள் அன்புப் பாட்டி

ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com