வெள்ளி, 17 ஜூன், 2011

அறிமுகம்

 
அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். பாட்டிசொல்லும் கதைகளை கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் படித்து எனக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தக் கதைகள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குப் பயன்பட்டிருக்குமேயானால் அதுவே எனக்கு மிக்க மகிழ்ச்சி. குழந்தைகளுக்காக எழுதிவந்த நான்இப்போது என்னையொத்த அன்புச் சகோதரர்களுடன் பேசுவதற்காகவும் என் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மணி மணியாய் சிந்தனை என்ற புதிய தளத்தைத் தொடங்கியுள்ளேன். இதில் நான் அடைந்த அனுபவங்கள், நான் ரசித்த காட்சி, நான்படித்த புத்தகம் என்ற என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விழைந்துள்ளேன்.
பாட்டி சொல்லும் கதைகளுக்கு அளித்த ஆதரவைப் போலவேஇந்த  மணி மணியாய் சிந்தனை என்ற தளத்துக்கும் ஆதரவு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் அனைவரின் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன் சகோதரி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

2 கருத்துகள்:

 1. நிச்சயம் எங்கள் ஆதரவு உண்டு அம்மா. உங்களது வலைப்பூ எங்களுக்கு நல்ல விஷயங்களைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உங்களது புதிய வலைப்பூ மணிமணியாய் செல்ல சுட்டி [லிங்க்] தரவும்.

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்
  புது தில்லி
  www.venkatnagaraj.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பாக என் ஆதரவு உண்டு உங்களுக்கு பாட்டி.....

  பதிலளிநீக்கு