பெயர் ருக்மணி சேஷசாயீ. தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளேன். ஐம்பது ஆண்டுகளாக எழுத்துப்பணி புரிந்து வருகிறேன். மேல் நிலைப்பள்ளியில் சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழாசிரியராகப பணி புரிந்துள்ளேன்.
வெளியிடுகள் மற்றும் ஊடகம்
கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன், தினமணி, கண்ணன், முதலான பல வார மாத இதழ்களில் எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நாவல் சிறுகதைத் தொகுதி சிறுவர்நூல்என இருபத்தைந்து நூல்களுக்குமேல் வெளிவந்துள்ளன. ஆகாசவாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.
பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன்அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உரத்தசிந்தனை இலக்கியவட்டம் போன்ற சங்கங்களில் அங்கம் வகித்து வருகிறேன்.
விருதுகள்
எழுத்தாளர் சங்கம் 'பாரதி பணிச்செல்வர் ' என்ற விருதினையும் உரத்தசிந்தனை சிறந்த வாசக எழுத்தாளர் என்ற விருதினையும் அளித்து என்னை கௌரவித்துள்ளன.
சுட்டி கதையின் நோக்கம்
சிறுவர்களுக்கு எழுதுவதில் மிகவும் விருப்பம் உண்டு. பலரும் படிக்கவேண்டும் என்பதற்காகவே 'சுட்டிக்கதை' என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளேன்.வளரும் சமுதாயம் இதன் மூலம் நல்ல பண்பினைப்பெருமாயின் அதுவே என் வெற்றி எனக்கொள்வேன்.
அன்புடன் உங்கள் பாட்டி,
ருக்மணி சேஷசாயீ
ருக்கும்மா,உங்கள் வலைப்பூ பார்த்து மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குருக்மிணி(அம்மா)
19,01,2013(75 வது பிறந்த நாளில் 16 செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்கள் அம்மா உங்களின் வலைப்பக்கம் பார்த்தாள் மிக அருமையான பதிவுகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா ...
பதிலளிநீக்குஉங்களின் 75 வயது நிறைவுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஉங்களுக்காக நான் ஒரு சிறப்பு பதிவு என் தளத்தில் போட்டிருக்கிறேன்.
இணைப்பு: http://wp.me/p244Wx-rn
எனது ப்ளாக்ஸ்பாட்டிலும் இந்தப் பதிவைப் படிக்கலாம்:
http://thiruvarangaththilirunthu.blogspot.in/2013/01/blog-post_18.html
விரைவில் உங்கள் சந்திக்கிறேன்.
உங்களுக்கு மனோபலமும், உடல் பலமும் 'ஆழி கடந்தான்' கொடுக்கட்டும்.
சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு! நீங்கள் உங்கள் பதிவில் ருக்மணி சேஷசாயீ அவர்கள் பதிவின் பக்கமாக Thursday, July 9, 2009 என்ற இணைப்பு கொடுத்து விட்டீர்கள். பின்னர் 2013 சென்று வந்தேன். ஒரு தகவலுக்காக மட்டுமே இது!
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபிறந்தநாள் இன்று பிறந்தநாள்
பதிலளிநீக்குநாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்தநாள்
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
ஹாப்பி பார்த்டே ட்டு யூ
- பாடல்: கவிஞர் வாலி ( படம்: நாம் மூவர் )
மறக்க முடியாத இலங்கை வானொலியில் அன்று அடிக்கடி கேட்டு மகிழ்ந்த வரிகள்! சகோதரி ரஞ்சனி நாராயணனின் திருவரங்கத்திலிருந்து உங்கள் வலைப்பதிவு வந்துள்ளேன்.! உங்களின் 75 வயது நிறைவுக்கு எனக்கு வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇன்று போல் என்றும் சுறு சுறுப்புடன் நீங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.
ரஞ்சனி அவர்கள் அவர்கள் தளத்தில் உங்கள் பிறந்தநாளை நினைவு படுத்தினார்கள்.
அவர்களுக்கு நன்றி.
உங்களுக்கு வணக்கங்கள்.
உங்கள் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்கிறோம்.
அநேக நமஸ்காரம். பிறந்த நாளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள், ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களின் வலைத்தளத்தின் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன். .
பதிலளிநீக்குவாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகளையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் சேவை இப்பொழுது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது....
பதிலளிநீக்குநீங்கள் இனையத்திர்க்கும் தமிழிருக்கும் ஒன்றாக செய்யும் தொண்டு மேமேலும் வளர வாழ்த்துக்கள் :)