சிந்தனையில் ஆழ்ந்திருந்த தோழியின் தோளைத் தட்டி எழுப்பினாள் கலா.
"ரொம்ப யோசிக்காதே.நானே சொல்றேன்.நாம ஆசைப் பட்டதைக் கேட்கும்போது அப்பாகிட்டயோ அம்மாகிட்டயோ பணம் இல்லேன்னா அவங்க நம்ம குழந்தை கேட்டதை வாங்கி குடுக்க முடியலைன்னு நெனச்சு வருத்தப் படுவாங்க இல்லையா?அந்த வருத்தம்தான் கோபமா நம்ம மேலயே திரும்புது நாம் பிடிவாதம் பிடிக்கும்போது இன்னும் கோபம் அதிகமாகுது. அதனால நம்ம கிட்ட இருக்கிறதையே உசத்தியா நெனச்சு திருப்தி பட்டு சந்தோஷமா இருந்தோமுன்னா அவங்களும் நிம்மதியாவும் சந்தோஷமாகவும் இருப்பாங்க இல்லையா?"
ஆமாம் என்பதைப் போல தலையசைத்தாள் சரளா.ஏதோ புரிந்ததைப் போல அவள் முகம் சற்றே புன்னகையைக் காட்டிற்று.கலா தொடர்ந்தாள்
"இப்போ எங்க வீட்டுக்கு வந்தியே எங்கம்மா எப்படி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க அதைப் பார்த்து நமக்கும் சந்தோஷமா இருந்ததில்லையா. என்ன காரணம் இருக்கிறதையே உசத்தியா நினைக்கிற பழக்கம்தான்.சரி வீட்டுப் பாடம் முடிச்சிட்டேன். நான் வீட்டுக்குப் போறேன் நாளை க்குப் பார்க்கலாம்."என்றபடியே புத்தகங்களை பையில் போட்டுக் கொண்டு ஓடினாள் கலா.
அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் சரளாவின் பெற்றோர்.பெருமூச்சுடன் தன வீட்டுக்குள் ஓடினாள் சரளா."
"மெதுவா வாம்மா, பட்டுப் பாவாடை தடுக்கிடப் போகுது "என்றார் அப்பா சிரித்தபடியே.
"ஆமாண்டி பளிங்குத்தரையில பார்த்து நட வழுக்கி விட்டுடும் " என்றபடியே புன்னகையுடன் வந்தாள் அம்மா. ஒரு நிமிடம் திகைத்து நின்ற சரளா மறுகணமே கலகலவென்று சிரித்தாள் அவளுடன் சேர்ந்து அவள் பெற்றோரும் சிரித்தனர். மகிழ்ச்சி இருக்கும் இடம் மனம்தான் என்பதைப் புரிந்து கொண்ட அந்த குடும்பத்தினர் இனி என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?
அருமை...
பதிலளிநீக்குசிறப்பான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா.
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்கு