நம்பினால் நடராசன்.
ஆண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளெல்லாம் ஒருமாதம் விடுமுறை அறிவித்து விட்டார்கள். பல மாணவர்கள் ஊருக்குப் போவதைப் பற்றியும் அவரவர் கிராமத்தைப் பற்றியும் சொந்த ஊர் பற்றியும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டே நடந்தனர்.ரவியும் சேதுவும் அவர்கள் பேச்சை ரசித்தபடி நடந்தனர்.சேதுவும் ம் ஊரில் இருக்கும் தன மாமா பற்றியும் பாட்டி தனக்கு கதை சொல்வதைப் பற்றியும் பேசிக் கொண்டே வந்தான்.
ரவிக்கு தான் எப்போதும் ஊருக்கே போவதில்லை. எப்போதாவது கோயில்களுக்குப் போவதோடு சரி என்பதை நினைத்து மௌனமாகவே வந்தான்.
சற்றுநேரம் கழித்தே அவனைக் கவனித்த சேது "ஏண்டா, நீ எங்கேயும் போவதில்லையா?உனக்கு பாட்டி மாமா என்று யாரும் இல்லையா?'என்றான் சற்றே தலைகுனிந்து ரவி வருத்தத்தோடு தலையை அசைத்தான்.
"கவலைப்படாதேடா. இந்தமுறை என்கூட எங்க ஊருக்குப் போகலாம் நான் உங்க அப்பாகிட்ட கேட்கிறேன்."என்றான் உற்சாகத்தோடு.
அதைக் கேட்டதும் சற்றே உற்சாகமானான் ரவி.
சேது தன தந்தையிடம் கேட்கும் வரை ரவிக்கு இருப்பே கொள்ளவில்லை.அவ்வளவு ஆர்வமாக இருந்தான்.
சேது சொல்வதைக்கேட்ட ரவியின் தந்தை ரவியிடம்"ஏண்டா, அங்கே போய் ஒழுங்கா இருந்து நல்ல பெயர் வாங்கி வருவாயா/'என்றார்."ஓ ஓ" என்று தலையை ஆட்டினான் ரவி.
அவர் சேதுவைப்பார்த்து "உங்கப்பாகிட்டே சொல்லிட்டியா ரவியும் வருவான்னு?என்று கேட்டார்.
"சொல்லிட்டேன் மாமா.அவரும் சரின்னு சொல்லிட்டார்."
அதன்பின் என்றைக்கு கிளம்புகிறார்கள் எத்தனை நாள் இருப்பார்கள் என்ற விவரத்தையெல்லாம் கேட்டுக் கொண்டார்.
ஆயிற்று.ரவியும் சேதுவும் புறப்பட்டார்கள்.சேதுவின் அப்பா இருவரையும் அழைத்துக் கொண்டு பயணமானார்.இரண்டு சிறுவர்களும் பயணத்தில் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.இரவு ரயிலை விட்டு இறங்கி பேருந்தில் அவர்களின் சொந்த கிராமத்தை அடைந்தனர்.இரவு வெகுநேரம் ஆகியிருந்தது.வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் படுத்தனர்.நண்பர்கள் அருகருகே படுத்துக்க கொண்டு பேசிக்கொண்டே இருந்தனர்.திடீரென்று சற்றே அமைதியானான் ரவி.
"டேய் என்னடா?"என்றான்சேது.
"அது என்ன சத்தம் என்னவோ ஓ ஓ ன்னு கேக்குதே?"
அதுவா பின்னாடி ஆறு ஓடுது.
அதுவா இந்த சத்தம்?
"ஆமா. அதுல எப்பவானும் தண்ணி வரும் சுத்துப்பட்டு ஊர்கள்ல மழை வந்தால் இந்த ஆத்துல தண்ணி வரும்.மத்தபடி அது நமக்கெல்லாம் பீச்சுதான்.'
"டேய் பசங்களா. என்னடா பேச்சு நேரமாச்சு தூங்குங்கடா"என்ற அப்பாவின் குரல் கேட்டு அமைதியானார்கள் சேதுவும் ரவியும்.
ஒருவாரம் மிகவும் மகிழ்ச்சியாய் கழிந்தது.அந்த கிராமத்தில் குரங்குகள் அதிகம்.அவை செய்யும் சேட்டைகளை பார்ப்பதே மிகவும் பிடித்தமாயிருந்தது இருவருக்கும்.ஆனால் ரவி அந்தக் குரங்கைப் பார்த்தாலே கல்லெடுத்து அடிப்பான். அந்தக் குரங்கு ஈ என்று பல்லை இளித்துக் கொண்டு குரல்கொடுத்து மரத்தில் தாவுவதை ரசிப்பான். சேது "டேய் ரவி அடிக்காதடா.பாவம் "என்பான்.விலங்குகள் நண்பர்கள்னு நமக்கு ஸ்கூல்ல சொல்லியிருக்காங்கல்ல .சில சமயம் அதுங்க கூட நமக்கு உதவி செய்யும்."என்றான் சேது.
"ஆமா குரங்குதான் வந்து உதவி செய்யுதாக்கும்" என்று சிரித்தான் ரவி.
ஒருவாரத்தில் ஆற்றில் வெள்ளம் வடிந்து நீரே இல்லாமல் இருந்தது.. நல்ல வெய்யில் அடித்ததால் நீர் வற்றிப்போய் ஆறு காலியாக இருந்தது.மத்தியான நேரம்.எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்திருந்தனர்.சேதுவுக்கும் தூக்கம் வந்துவிட்டது.ஆனால் ரவிக்குத் தூக்கம் வரவில்லை.அவன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான். தெரு வெறிச்சோடி இருந்தது.
ரவி மெதுவாக தெருவில் நடந்தான். ஒருவார பழக்கத்தில் இடம் நன்கு தெரிந்திருந்தது. மெதுவாக ஆற்றுப் பக்கம் வந்தான்.ஆற்றில் பாதம் நனையும் அளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது.அதில் காலை வைத்து விளையாடிக் கொண்டே சற்று தூரம் சென்று விட்டான். அவனைத் தெடிக் கொண்டு அப்போது சேது அங்கே வந்தவன் ஆற்றில் நிற்கும் ரவியைப் பார்த்தான்.சற்று நேரத்தில் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடத தொடங்கியது. சேது அலறினான்.
" டே ரவி ஓடிவா. வெள்ளம் வர போகுது. வந்துடு" ரவியின் காதில் சேதுவின் சத்தம் விழவில்லை.வெள்ளம் வேகமாக வரவே ரவி அதில் அடித்துச் செல்லப் பட்டான்.அவனால் நிற்க முடியவில்லை வெள்ளம் இழுத்துச் சென்றது. நீரில் மூழ்கி மூழ்கி எழுந்தான். மூச்சு முட்டியது.
அவனுக்கு பயம் வரவே தெய்வங்களையெல்லாம் துணைக்கு அழைத்தான்
அவன் தலை மேலே எழும்பியபோது ஆற்றின் கரையிலிருந்த ஒரு பெரிய மரத்தின் கிளை தண்ணீரில் மூழிகியிருப்பதைக் கண்டான்.மனம் கடவுளை வேண்டியது."
'சாமி. அந்தக்கிளை கீழாய் என் கைக்கு எட்டனும் என்று வேண்டிக் கொண்டான்.ஆனால் திடீரென்று அந்தக் கிளை அவன் கைக்கு எட்டாதவாறு மேலே எழும்பியது.திடுக்கிட்ட ரவி 'அய்யோ கிளை மேலே போயிட்டுதே.நான் கிட்ட வரும்போது மீண்டும் அது நீருக்குள் விழணுமே.சாமி"என்று மனம் உருக வேண்டினான்.அப்போதுதான் கிளையின் அடிபாகத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருப்பதையும் அது முன்னே வரும்போது கிளை நீருக்குள் விழுவதையும் குரங்கு ஆற்றில் நீர் அருந்தி செல்வதையும் பார்த்தான் கிளையில் அமர்ந்து குரங்கு மேலும் கீழும் குதித்து விளையாடுவதைப் பார்த்தான் அதற்குள் தண்ணீர் அவனை அடித்துச் செல்லவே அவன் குரங்கை வேண்டிக் கொண்டான்.
இப்போது என்ன தோன்றிற்றோ குரங்கு கிளையின் நுனிக்கு வந்தது அதே சமயம் ரவியும் அதன் அருகே வரவே சட்டென்று கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் கிளை வழியே ஆற்றை விட்டு கரைக்கு வந்தான். இப்போது குரங்கைப் பார்த்து இரண்டு கைகளையும் கூப்பி ஆஞ்சநேயா நன்றி.என்றான். அதே சமயம் சில ஆட்களுடன் தந்தையை அழைத்துக் கொண்டு கரையோரமாகவே சேது தேடிவந்தான். நண்பனைக் கட்டிக்க கொண்டு ஆனந்தக கண்ணீர் விட்டான்ரவி.
சேதுவின் அப்பா "ரவி இது காட்டாறுப்பா. அதிலெல்லாம் எப்போ வேணும்னாலும் தண்ணி வரும் இப்படியெல்லாம் தனியா புது இடத்தில போயி ஆபத்துல மாட்டிக்கலாமா?"
பயம் தெளியாத ரவியை அணை த்து ஆறுதல் சொன்னார் "இனி இதுபோல் மிருகங்களை துன்புறுத்த மாட்டேன் இப்போ அந்தக் குரங்குதான் என்னைக் காப்பாத்துச்சு" என்று சேதுவிடம் மெதுவாகச் சொன்னான் ரவி அவனை அணைத்தபடி வீடு வந்து சேர்ந்தான் சேது...
நல்லதொரு கதை. பட்டபிறகு தான் புத்தி வருகிறது - சிறுவர்களுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் என்பதை உணர்ந்திருக்கிறேன்!
பதிலளிநீக்குகதை அருமை...
பதிலளிநீக்கு