பல்லவி
வினையைத தீர்க்கும் விக்ன விநாயகனே
வேண்டும் வரம் தரும் வேத முதல்வனே (வினை)
அனுபல்லவி
வளமுடன் நலமும்வாழ்வும் உயர்வும்
வளரும்படியாய் வரந்தனை அருள்வாய் (வினை)
சரணம்-1
வேதவ்யாசரின் வேண்டுதல் ஏற்றாய்
பாரதம் எழுதி ஒற்றைக்கொம்பன் ஆனாய்
காவிரி விரைந்திட சாகசம் புரிந்தாய்
யாவரும் பணிந்திட தத்துவம் ஆனாய் (வினை)
சரணம்-2
சந்திரன் சாபம் நீங்கிடச் செயதாய்
சங்கரன் மைந்தனே சங்கடம் தீர்ப்பாய்
ஐந்து கரத்தனே ஆதிமுதல்வனே
வந்து பணிந்தோம் வாழ்த்தி அருள்வாய் (வினை)
---------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக