மாணவச் செல்வன்
Inbox | x |
| 18 Aug 2020, 13:24 (2 days ago) | |||
அனைவரும் ஒன்றும் புரியாமல் ஆசிரியர் பின் சென்றனர்.அனைவரையும் நிற்கச் சொன்ன துரோணர் துரியோதனனை மட்டும் அழைத்துக் கொண்டு மரத்தின் மறுபக்கம் சென் றார்.அங்கு தரையில் ஒரு மந்திரத்தை எழுதிக் காட்டி படிக்கச் சொன்னார்.துரியோதனனும் அந்த மந்திரத்தைப் படித்துவிட்டு குருவைப் பார்த் தான்."இப்போது ஒரு அம்பை இந்த மரத்தின் உச்சியைப் பார்த்து விடு" என்று கட்டளையிட்டார்.
துரியோதனனும் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.என்ன ஆச்சரியம் அந்த அம்பு எங்கு மறைந்ததோ ஆனால் மரத்தின் ஒவ்வொரு இலையிலேயும் ஓட்டை விழுந்திருந்தது.
"துரியோதன, இந்த அஸ்திரத்தை நீ படைக்களத்தில் பிரயோகித்தால் ஆயிரக்கணக்கான வீரர்களை இது பலிவாங்கும் "
துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி.அர்ச்சுனனுக்குத் தெரியாத ஒரு அஸ்திர பிரயோகம் தனக்கு மட்டும் தெரிந்து விட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டான். மிக்க நன்றி குருவே என்று அவர் கால்களில் பணிந்தான்.
அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார் துரோணர்..சற்று நேரத்தி ல் அங்கு வந்த அர்ச்சுனன் அவரிடம் மேலாடையை பணிவுடன் அளித்தான்.அனைவரும் நீராடிப் புறப்பட்டனர்.
வரும் வழியில் அதே ஆலமரத்தடிக்கு வந்தனர். துரோணர் சற்று நின்று அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தார்.துரியோதனனும் பார்த்தான்.என்ன ஆச்சரியம் ஒரே ஓட்டை இருந்த இலைகளில் இப்போது இரண்டாவது ஓட்டை விழுந்திருந்தது.இது எப்படி சாத்தியமாயிற்று.குரு தனக்கு மட்டும்தானே இந்த அஸ்த்திரத்தைக் கூறினார். சற்றே சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான் துரியோதனன்.
அப்போது துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அவரை வணங்கிய அர்ச்சுனன்,"ஸ்வாமி தங்களின் வஸ்த்திரத்தை எடுத்துக் கொண்டு நான் வரும்போது இந்த ஆலமரத்தடியில் பல காலடித் தடங்களைப்பார்த்தேன் அதோடு இரண்டு பேரின் காலடிகள் மட்டும் தனியே போயிருப்பதைப் பார்த்து அதன் பின் சென்றேன்.அங்கே ஒரு மந்திரம் கீழே எழுதியிருப்பதைப் பார்த்தேன் அதோடு மரத்திலுள்ள ஆயிரக் கணக்கான இலைகளிலும் ஓட்டை விழுந்திருப்பதையும் பார்த்தேன்.
இது ஏதோ அஸ்திரம்தான் என்று புரிந்து கொண்டேன்.அதை நானும் பிரயோகித்துப் பார்த்தேன்."
"அப்படியானால் என் மேலாடையைக் கீழே வைத்துவிடட்டாயா?"
"இல்லை குருவே, இந்த மேலாடையை ஆகாயத்தில் தூக்கிப் போட்டேன் அது மேலே சென்று திரும்பி கீழே விழுவதற்குள் இந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துவிட்டேன் தங்களின் உத்தரீயமும் கீழே விழாமல் கைகளில் தாங்கி கொண்டேன்.என் அஸ்திர பிரயோகம்தான் இலைகளில் இரண்டாவது ஓட்டை.முதலில் இருக்கும் ஒட்டையைப் போட்டவர் யாரென்று அறியமாட்டேன் ஸ்வாமி.".
மாணவர்களே பார்ப்பதையெல்லாம் குற்றமில்லாமல் கற்று மனதில் நிறுத்திக் கொள்பவனே உண்மையான மாணவன் தனக்கு உகந்தவை என்று தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளும்
பண்பு யாரிடத்தில் உள்ளதோ அவனே உண்மையான மாணவச் செல்வன்.அர்ச்சுனன் உண்மையான மாணவன்.அவன் திறமைசாலி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை " என்று முடித்தவர் துரியோதனனைப் பார்த்து ஆசிரியர் காட்டிய வழியைப் பின்பற்றி தாங்களாகவே முனைந்து கற்பதே அறிவு. இதை உணர்ந்து கொண்டாயா துரியோதன "என்றார் து ரியோதனனும் அதை ஒப்புக் கொண்டவன்போல் தலைகுனிந்து நின்றான்.
ராமசாமி கதையை முடித்தார்.
"தெரிந்து கொண்டாயா பாலு.ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். அதை நல்ல முறையிலே மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது மாணவன் கடமை.அவனைத்தான் மாணவச் செல்வன் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் புரிந்ததா?"என்றவாறு படுத்துக்க கொண்டார். "சரிப்பா நானும் இனி அருச்சுனனைப் போலவே படிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொள்வேன்."என் றான் உறுதியோடு.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.
அருமை...
பதிலளிநீக்குஎன்னவாயிற்று... பதிவு ஏன் இவ்வாறு அம்மா...?
பதிலளிநீக்குபதிவை படிக்க முடியலையம்மா
பதிலளிநீக்குபுதிய முறை தவறிவிட்டது.இனி சரியாக வரும்.தொடர்ந்து கருத்து கூறவும்
பதிலளிநீக்குமிக்க நன்றி.