வந்தான் வடிவேலன்.
வள்ளியூர் ஒரு சிற்றூர்.அந்த ஊரில் சுமார் நான்கு தெருக்கள் இருந்தன.அனைவரும் ஆடுமாடு வைத்தும் வயல்வெளிகளில் வேலை செய்தும் வாழ்க்கை நடத்துபவர்கள்.ஆறுமுகம் என்பாரும் அப்படி வாழ்பவர்தான்.அவருக்கு செந்தில் என்ற ஒரு மகன் இருந்தான்.அவன் அப்பாவுக்கு உதவியாக ஆடுகளை மேய்த்துவந்தான்.
அந்த ஊரில் ஒரு முருகன் கோவில் இருந்தது.மிகவும் பழமையான கோவில்.யார்கட்டினார்கள் என்பதே தெரியாது.ஊரின் எல்லையில் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது.உள்ளே கையில் வேலுடன் அழகாகசிரித்தபடி முருகன் நின்றிருந்தான்.அவனைக்கவனிப்பார் யாருமில்லை.
ஆனால் தினமும் ஆடுகளை மேய்த்தபடி வரும் செந்தில் அந்தக் கோவில் வாசலில் அமர்ந்துதான் ஆடுகளைக் கவனித்தபடி அமர்ந்திருப்பான்.ஒருநாள் கையில் கொம்பனு வைத்துத் தட்டிக் கொண்டே அமர்ந்திருந்தவர் முன் ஒரு சிறுவன் வந்து சிரித்தபடி நின்றான்.அவனைப் பார்த்த செந்திலுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும் ஏற்பட்டது.எவன் எங்கிருந்து வந்தான் என்பது ஆச்சரியம் விளையாட ஒரு நண்பன் கிடைத்தானே என்ற ஆனந்தம்.
வந்தவனைப் பார்த்து "ஏய் யார்நீ? எங்கிருந்து வந்தே?"என்றான் .புன்னகைத்த சிறுவன் "நான் இங்கேதான் இருக்கேன்.உன்னைத் தினமும் பார்க்கிறேன் .இன்னைக்கி உன்கூட விளையாடலாமேன்னு வந்தேன்.என்றான்.
மிகுந்த மகிழ்ச்சி கொண்டான் செந்தில்.
"வாவா எனக்கும் விளையாட ஆசைதான்."என்றபடி அவனை வரவேற்றான்.
"ஆமா...உன் பேர் என்ன?"
"என்னை வேலய்யா வேலா அப்படின்னு கூப்பிடுவாங்க."
"
அருமை...
பதிலளிநீக்கு