செவ்வாய், 2 மே, 2023

paatti sollum kadhaigal - பெற்றோரே தெய்வம்

 பெற்றோரே தெய்வம்.

கைலாயத்தில் பார்வதியுடன் அமர்ந்திருந்த சிவபெருமான் விநாயகரின் அறிவு  திறமையை  உலகுக்கு காட்ட விரும்பினார்.உடனே தன கையில் ஒரு  மாம்பழத்தை வரவழைத்தார்.அதைத் தன மக்களான விநாயகருக்கும் முருகனுக்கும் காட்டினார்.அதைப் பார்த்த இருவருமே தனக்குத் தான் அப்பழம் வேண்டும் என போட்டியிட்டனர் 

           இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது எனத்  தெரியாமல் பார்வதி திகைத்தாள்.சிவபெருமானிடம் தன சங்கடத்தைத் தெரிவித்தாள்.இருவருக்கும் ஒரு போட்டி வைத்து யார் வெல்கிறார்களோ அவருக்கே அந்தப்பழத்தைக் கொடுப்பதே சரி என்று கூறவே அவரையே  போட்டி வைக்குமாறு பார்வதி வேண்டிக்கொண்டாள்.

          சிவபெருமானும் தன பிள்ளைகளிடம் யார் முதலில் இந்த உலகைச் சுற்றிவருகிறார்களோ அவருக்கே இந்தப் பழம் உரியது என்று கூறினார்.உடனே மயில்வாகனனாகிய முருகப் பெருமான் தன வாகனத்தின் மேலேறி உலகை வலம் வர புறப்பட்டார்.விநாயகர் சற்றே சிந்தித்தார்.

        அவர் சிந்தனையில் ஒரு உண்மை பளிச்சிட்டது.உடனே அப்போது அங்குவந்த நாரத முனிவரிடம் உலகில் ஒவ்வொருவருக்கும் உலகம் எது எனக்கேட்டார்.கலகத்துக்கே காத்திருந்த நாரதர் இந்த சமயத்தை நழுவ விடுவாரா உடனே சட்டென்று அம்மையும் அப்பனும்தான் உலகம் என்று கூறிவிட்டுச் சிரித்தார்.

உடனே விநாயகரும் தன பெற்றோராகிய சிவா பார்வதியைச் சுற்றி வலம் வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.உலகைச் சுற்றி விட்டு வந்த முருகனுக்கு கோபம் வந்து மலைமீது அமர்ந்து கொண்டார்.விநாயகர் முருகனிடம் பழத்தை நீயே பெற்றுக் கொள்  எனக் கூறினார்.

        விநாயகர் கூறியதைக் கேட்ட முருகன் அண்ணா நீயே இந்தப் பழத்தைப் பெற்றுக் கொள் ஞானப் பழத்தைப் பெற்று ஞானவிநாயகன் என்று உலகோர் போற்றி வணங்கட்டும்.உன்னால் இந்தப் பூவுலகில் பெற்றோரே முதல் தெய் வம் என்பதைப் புரிந்து நடந்து கொள்ளட்டும்.இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டவே சினம் கொண்டதாகத் தோற்றம் கொண்டேன் என்று தெரிவித்தார் முருகப் பெருமான். 

         முருகப் பெருமான் சொன்னதைகே கேட்ட விநாயகரும் மிக்க மகிழ்ச்சி தம்பி உலகில் அனைவரும் தம் பெற்றோரே தெய் வம் என்பதைப் புரிந்து நடந்து கொள்வது  மிகவும் அவசியம் என்று கூறினார். இருவரும் சேர்ந்து பெற்றோரை வணங்கினர். சிவனும் பார்வதியும் மகிழ்ந்து தம் மக்களுக்கு ஆசி கூறினர்.






    



3 கருத்துகள்: