1. நண்பனின் பண்பு
அய்யாவு என்பவர் ஒரு தொழிலாளி.அவர் மனைவி ராமக்காவும் ஒரு தொழிலாளிதான்.அய்யாவு ரயில்பாதையை செப்பனிடும் பணியில் இருந்தார். ராமக்கா வீட்டு வேலை செய்து பணம் சம்பாதித்தார்.
இவர்களுக்கு ஒரேமகன் கந்தசாமி. ஆறாம் வகுப்பில் படித்து வந்தான்.தினமும் அதிகாலையிலேயே ராமக்கா சமையல் செய்து வைத்து விட்டு வேலைக்குச் சென்றுவிடுவார். பிறகு அப்பாவும் மகனும் எழுந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிடு வார்கள் அய்யாவு மதிய உணவு கையிலும் கட்டிக் கொண்டு புறப்படுவார். அதற்கு முன் கந்தசாமிக்குஎன்ன தேவை என்பதைப் பார்த்துச் செய்து வைப்பார்.கதவைப் பூட்டிக் கொண்டு அய்யாவு வேலைக்கும் கந்தசாமி பள்ளிக்கும் புறப்படுவார்கள். மாலையில் வீடு திரும்பியவுடன் அனைவரும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியாகப் பேசிக் களிப்பார்கள்.
அந்த வருடம் பொங்கல் பண்டிகை வந்தது. வழக்கம்போல பண்டிகையைக் கொண்டாடுவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கந்தசாமி அம்மாவின் மடியில் படுத்தவாறே "அம்மா, இந்த வருஷம் எனக்கு செகப்புச் சட்டைதான் வேணும் என்றான்.உடனே அவன் அப்பா அய்யாவு,"டே, போயும் போயும் செகப்புச் சட்டையா வேணும்.நல்ல கலரிலே ஒரு கட்டம் போட்டது பூப்போட்டது எல்லாம் கேக்க மாட்டியா" என்றார் மெதுவாக.
"உனக்கு எந்த கலர் பிடிக்குதோ அதையே நீ வாங்கிக்க. நாளைக்கி ஒரு நாள் பொறுத்துக்க மறு நா அல்லாருக்கும் லீவு. அன்னிக்கிப்போயி துணிமணி வாங்கலாம் என்ன? என் ராசா. போயி படி கண்ணு."என்று அவனை எழுப்பி அனுப்பினாள் ராமக்கா.
பாதையிலேயே குதித்துக் குதித்து நின்றான் தூரத்தில் ரயில் வருவது தெரியாமல் ஏதேதோ வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். சற்று தூரம் சென்றான். மீண்டும் திரும்பி வந்தான். சற்று நேரம்
"நான்தான் செகப்பு முண்டாச கட்டிக்கிட்டு தண்டவாளத்துமேலே வேலை செய்யிறேன்னா இந்தப் பய செகப்புச் சட்டை கேக்கறானே.நீயும் வாங்கித்தாறேன்னு சொல்றே." சற்றே மனத் தாங்கலுடன் கூறினார் அய்யாவு.
"சின்னப்பிள்ள ஆசைப்படுது அதுக்கு எது புடிக்குதோ அத வாங்கிக்குடுத்தா அப்பதான் அதுக்கும் சந்தோஷம் நமக்கும் சந்தோஷம்.வேணுமின்னா இன்னொரு சட்டை உங்களுக்குப் புடிச்சதா வாங்கிடுங்க."என்றாள் சிரித்தவாறே.
இருட்டிவிடவே அய்யாவு தலையை அசைத்தவாறே படுக்கைக்குச் சென்றார்.
மூவரும் கடைக்குச் சென்று துணிமணி புதுப்பானை அரிசி தேங்காய் பழம் என்று பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தனர்.கந்தசாமிக்கு ஒரே சந்தோஷம். அவன் விரும்பியவாறே அழகான சிவப்புக் கலர் சட்டை கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.தன சட்டையை அவன் அருகிலேயே வைத்துக் கொண்டான் தூங்கும்போதும் தன தலையணைக் கரு.கிலேயே வைத்துக் கொண்டான். அவன் மகிழ்ச்சியைப் பார்த்து அய்யாவு.ராமக்கா இருவருக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி.
பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.அன்று மாலை கந்தசாமி அவன் அப்பாவந்ததை அறிந்தவுடன் வீட்டுக்கு ஓடிவந்தான்.அவன் அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஆசையுடன் அருகே அமர்ந்து கொண்டான்.
ராமக்கா குடிக்கத் தண்ணீர் கொடுத்துவிட்டு "ஏங்க, பொங்கலுக்கு ரெண்டு நாள் லீவு போடக்கூடாதா?" என்றபடியே அருகே அமர்ந்தாள்.
"நீ வேறே.ஆபீசுல இஞ்சினீயரு லீவு நாளிலே கூட வேல செய்யணும்னு சொல்றாரு. அதுக்குதான் ரெட்டைச் சம்பளம் தராங்களே."
"அதனால?"என்று ராமக்கா நீட்டியவுடனே, கந்தசாமி குறுக்கிட்டு "கரெக்டுப்பா. எல்லாரும் வீட்டுல இருந்திட்டா முக்கியமான வேலையெல்லாம் எப்படி நடக்கும்? ரயில்பாதை சரியா இருக்குதான்னு பாத்தாதானப்பா ரயிலு பத்திரமாப் போக சவுகரியமாயிருக்கும்."என்றான்.
"என் ராசா, நீ அறிவாளிடா."என்றபடியே அவனை திருஷ்டி கழித்தாள் ராமக்கா.
"அப்படின்னா பொங்கலுக்கு நா வேலைக்கு போகட்டா?"
"அப்பா, பொங்கலன்னிக்கி அம்மா வடை பொங்கல் எல்லாம் செய்யட்டும் நானும் நீங்களும் ர்யில்பாதையைப் பாத்துக்கிடுவோம்
"என்னாது நீ வாரியா".
"ஆமாம்பா.உங்ககூட இருக்கறதுதான் எனக்குப் பொங்கலு.ஜாலியா பேசிக்கிட்டே நடப்போம் அப்பா." என்ற தன மகனைக் கட்டிக்கொண்டார் அய்யாவு.
அன்று போகிப்பண்டிகை.ஊரெல்லாம் ஒரே கூட்டம் கடைகளில் வியாபாரம் தெருவெங்கும் டமடமசத்தம் விற்போரும் வாங்குவோருமாக தெருவெங்கும் கூட்டம்.அய்யாவு வேலைக்குக் கிளம்பினார்.அன்று பள்ளி விடுமுறை அதனால் கந்தசாமியும் அப்பாவுடன் புறப்பட்டான். "டேய் , நீ விளையாடிக்கிட்டிரு கண்ணு. இப்போ ஒரு ரவுண்டு பாத்திட்டு வந்திடுறேன். நாளைக்கு நீ வருவியாம்." என்றார் கனிவோடு.
"அப்பா, அம்மாவும் வீட்டில இல்ல விளக்கு வைக்கும்போதுதான் வருவாங்க.நான் தனியா இருக்கணுமே அப்பா"
"சரி நீயும் கூட வா."
அன்று பண்டிகை ஆதலால் தனக்குப் பிடித்த சிவப்புக்கலர் சட்டையை மாட்டிக் கொண்டு அப்பாவுடன் நடந்தான் கந்தசாமி.
நடந்துகொண்டே அப்பாவிடம் கேட்டான் கந்தசாமி. "ஏம்பா நீ படிச்சிருந்தா ஆபீசுல வேலை செய்யலாமில்ல.ஏம்பா படிக்கல"
கண்ணு,எங்கப்பா குடிகாரர்.வீடே கவனிக்கமாட்டாரு.அதனால பள்ளிக்கூடம் போவமுடியாம ஆபீசரய்யா வீட்டுல வேலை செஞ்சேன். அவருதான் இந்த ரயில்ல தண்டவாளம் சீர் பாக்கற வேலையை வாங்கிக் குடுத்தாரு.அப்பா சீரா இருந்திருந்தா நானும் படிச்சு நல்ல வேலைக்குத்தான் வந்திருப்பேன். அதனாலதான் உன்னை நிறைய படிக்கவைக்கப் போகிறேன்.
நல்லாப் படிச்சு பெரிய இஞ்சினீயரா வருவியா ராசா?"
"கண்டிப்பா வருவேம்பா."சட்டென தொலைவில் "ஏ அய்யாவு" என அழைக்கும் குரல் கேட்டது.
தன்னுடன் பணிபுரியும் சங்கரன் நிற்பதைப் பார்த்தார் அய்யாவு.
டேய் கந்தா, சங்கர் வந்திருக்காரு பேசிட்டு சீக்கிரம் வந்திடுறேன் என்று சொல்லிவிட்டு சங்கரிடம் சென்றார். அவருடன் பேசிக்கொண்டே நின்றார்.கந்தசாமி இங்கும் அங்கும் நடந்தும் குதித்தும் விளையாடிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு அதற்குமேல் பொறுமையில்லை எனவே ரயில்
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கதையின் முடிவினை நன்றாகவே யூகிக்க முடிகிறது.
பதிலளிநீக்குஇருப்பினும் கதை முழுவதும் வெளியிடப்படாமல் கடைசியில் கீழே உள்ளதுடன் மொட்டையாக நிற்கிறதே !
//பாதையிலேயே குதித்துக் குதித்து நின்றான் தூரத்தில் ரயில் வருவது தெரியாமல் ஏதேதோ வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு நின்றான். சற்று தூரம் சென்றான். மீண்டும் திரும்பி வந்தான். சற்று நேரம் //
சிகப்புச் சட்டையால் ஓடிவரும் ரயிலே நிற்கப்போகிறது, கதை நின்றால் என்ன என்று கேட்கிறீர்களோ !! :)
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
கதை நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதை அருமை...
பதிலளிநீக்குதொடருமா அம்மா...?