சரவணன் மிகவும் நல்லவன். ஏழைகளுக்கு உதவும் பண்புள்ளவன்.இரக்க குணமும் ஈகைக் குணமும் உடைய அவனை
எல்லோருக்கும் பிடிக்கும்.ஆறாம் வகுப்புப் படிக்கும் சரவணனின் அப்பா ஒரு விவசாயி.எளிமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்
சரவணன் தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்யத் தயங்க மாட்டான்.அவன் தந்தையுடன் விவசாயத் தொழில் செய்யும்
ரங்கசாமிக்கு சிறுவயதிலிருந்தே படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் பள்ளி சென்று படிக்க இயலாத சூழ்நிலையால் அவர்
படிப்பறிவே இன்றி அறுபது வயதையும் கடந்து விட்டார்.
ஒருநாள் மாலைநேரம்.கழனி வேலைகளை முடித்துவிட்டு சரவணன் அருகே வந்து அமர்ந்தார்.சரவணன் தன்
நோட்டுப்புத்தகத்தில் வேகமாக எழுதிக் கொண்டிருந்தான்.அருகே அமர்ந்த ரங்கசாமியைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு மீண்டும்
எழுதத் தொடங்கினான். சிறிது நேரத்தில் எழுதி முடித்த சரவணன் புன்னகைத்தபடியே. " என்னதாத்தா,உங்களுக்குப்படிக்கத்தெரியுமா?"என்றான்.
"தெரியாது தம்பி."
"பின்னே இவ்வளவு நேரமா நோட்டுப்புத்தகத்திலே எதைப் பார்த்துகிட்டு இருந்தீங்க?"
"நீ வேகமா எழுதறதப் பாத்துகிட்டு இருந்தேன்"
"அப்போ படிக்கத்தெரியாதா?"
"தெரியாதுப்பா. ஆமா என்ன எழுதுன இதுல ?"
"வரலாறு தாத்தா"
சரவணன் வரலாறு பற்றி விளக்கிவிட்டு" உங்களுக்குப் படிக்கணு முன்னா நான் கத்துக் குடுக்கறேன் தாத்தா"என்றான் உற்சாகத்தோடு.
"படிச்சா நிறைய விஷயம் தெரியும் இல்லையா தம்பி?"
"" .நாளையிலிருந்து நான் உங்களுக்குப் படிக்கக் கத்துக் குடுக்கறேன் தாத்தா.""
"தம்பி நான் கத்துக்கறது யாருக்கும் தெரிய வேணாம் தெரிஞ்சா சிரிப்பாங்க.
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக