சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்யத் தக்க இடத்தில் ஒரு பள்ளம் தோண்டிப் பார்க்கச் சொன்னதும் வெங்கண்ணா திகைத்து நின்றார்.அவரைப் புன்னகையுடன் பார்த்த சுவாமிகள் "வெங்கண்ணா இந்த இடத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என நினைக்கிறாயா?இதுதான் நான் சென்ற பிறவியில் பிரஹ்லாத ராஜராக இருந்த போது யாகம் செய்த இடம்.இங்குதான் எனக்கான பிருந்தாவனம் அமையவேண்டும்" என்றார்.
சுவாமிகள் சொன்ன இடத்தைத் தோண்டியபோது ஆறடி ஆழத்தில் ஒரு பீடம் இருக்கக்கண்டார்.கண்டு திகைத்தார் "வெங்கண்ணா.இதேஇடத்தில் எனக்கு பிருந்தாவனம் தயாராக வேண்டும்" என கட்டளை பிறப்பித்தார் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்ன இடத்தைத் தோண்டியபோது ஆறடி ஆழத்தில் ஒரு பீடம் இருக்கக்கண்டார்.கண்டு திகைத்தார் "வெங்கண்ணா.இதேஇடத்தில் எனக்கு பிருந்தாவனம் தயாராக வேண்டும்" என கட்டளை பிறப்பித்தார் சுவாமிகள்.
"அருகே மாதாவரம் எனும் கிராமத்திலிருந்து நான் குறிப்பிட்டபடி இருக்கும் கல்லையே பயன்படுத்த வேண்டும்"என்றபோது சற்றே சிந்தனை வடிவானார் வெங்கண்ணா.
"எந்தக் கல்லின்மீது அமர்ந்து ஸ்ரீராமன் விஸ்ராந்தி செய்து கொண்டானோ அந்தக் கல்லா"ல்தான் எனக்கு பிருந்தாவனம் அமையவேண்டும்"குருகளின் இந்த வார்த்தையைக் கேட்ட வெங்கண்ணா அவர் விருப்பப்படி குறிப்பிட்ட கல்லைக் கொண்டுவந்து சேர்த்தார். ஸ்ரீ ராகவேந்திரர் கூறிய படியே எங்கெங்கு என்னென்ன உருவங்கள் இருக்கவேண்டும் என்பதைக் கவனமாக கேட்டுக் கொண்டு அதேபோல் செய்தி முடித்தார் வெங்கண்ணா.
மாஞ்சாலம்மனின் விருப்பத்திற்காக பிருந்தாவனத்துக்கு எதிரில் ஆட்டுத்தலை உருவங்களையும் ஆஞ்சநேயர் விக்ரகம் பிருந்தாவனத்துக்கு எதிரிலும் இருக்கும்படி அமைத்தார். பின பிருந்தாவனத்தை நிரப்ப 1200 லக்ஷ்மி நாராயண சாலிக்ராமங்களையும் கொண்டு வந்து சேர்த்தார்.
அன்று பிருந்தாவன வேலைகளைப் பார்க்க திவான் வெங்கண்ணா வுடன் நவாப் சித்தி மசூத்கானும் மாஞ்சால கிராமத்துக்கு வருகை தந்தார். துங்கபத்திரையின் அழகையும் அங்கு நடைபெறும் கட்டிட வேலைகளையும் பார்த்தார். ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்த்து மண்டியிட்டு வணங்கினார்.அவரை அன்புடன் பார்த்த சுவாமிகள் நலம் விசாரித்தார்.
"நீயும் உன் நாட்டு மக்களும் நலமா?"
"நலமே சுவாமி. தாங்கள் இங்கு வந்தபின் என் நாடு மிகுந்த சுபிட்சமாக இருக்கிறது சுவாமி."
"எல்லாம் அந்த மூலராமரின் அருள்தான்"
"சுவாமி, தாங்கள் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபின் தங்களைப் பார்க்க இயலாதேஎன கலங்கி நிற்கிறேன்."
நாங்கள் எப்படி ஒரு ஹிந்து கோவிலுக்குள் வர இயலும் ?"மிகுந்த விசனத்தோடு கேட்டார் நவாப்.
"நவாப் என்னை எப்போது நினைத்தாலும் நான் அருள்புரிவேன்.அன்பும் பக்தியும் போதும்.நமக்குள் பேதமில்லை.எனக்கு இந்த கிராமத்தை ஒரு நவாபான நீகொடுத்துதுள்ளாய்.ஜகத்குரு என்ற பட்டத்தையும் அரச
சின்னமான வெண்கொற்றக் குடையையும் அடில்ஷா தானே கொடுத்துள்ளார். மேலும் ஏராளமான நிலங்களையும் முகமதியர்கள் தானே எனக்குத் தானமாக வழங்கியுள்ளனர்.எனவே நான் அனைவ்ருக்கும் பொதுவானவன. எந்த எல்லையும் எனக்கு இல்லை.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
அம்மா உங்கள் கதைகளை தொகுக்க விருப்பம் , நீங்கள் அனுமதித்தால்.
பதிலளிநீக்குஉங்கள் பதிலை guru.r5686@gmail.com ல் தெரிவிக்கவும்.. நன்றி
இப்படிக்கு ,
ராஜகுரு