ஞாயிறு, 23 டிசம்பர், 2012
புதன், 21 நவம்பர், 2012
100- உண்மை நண்பன்
அன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் கூறியும் விமரிசித்தும் வந்த அன்பர்களுக்கு எனது நெஞ்சம் கனிந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தக் கதைகள் மூலம் உங்களின் இல்லத்துச் சிறுவர்களின் மனம் மகிழ்ந்திருக்குமாயின் மனம் பண் பட்டிருக்குமாயின்
அதுவே உங்கள் பாட்டிக்கு நீங்கள் அளித்த பரிசு என மகிழ்வேன்.
தொடர்ந்து படித்து கருத்துகள் கூறவும்.உங்கள் நண்பர்களுக்கும் கூறி அவர்களையும் படிக்குமாறு கூறவும்.
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆதரவை விரும்பும் உங்கள் அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.
உண்மை நண்பன்
ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர்.இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர்.ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு.இருவரில் சோமு பாலுமீது உண்மையான அன்பு கொண்டிருந்தான்.எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான்.ஆனால் பாலு தன நட்புதான் உயர்ந்தது.தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான்.
ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போகவேண்டி இருந்தது.அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர்.ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
திடீரென்று ஊஊ என்று சோமு குரல் எழுப்பினான்.
அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான்.திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் "பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா?"
"இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா?இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்?"
இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் சோமு மெளனமாக நடந்தான்.அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில்.'தன்னைத் தன நண்பன் அடித்து விட்டான்' என்று எழுதினான்.அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான்.
அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.
நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த சோமு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான்.அதைப் பார்த்த பாலு அவனைக் காப்பாற்ற தவித்தான். சோமு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து சோமுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக சோமு ஆயிரம் முறை நன்றி சொன்னான்.உடையைச் சுத்தம் செய்துகொண்டு தொடர்ந்து நடந்தனர்.
சற்று த் தொலைவு சென்றவுடன் சோமு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் பாலு..
நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் பேசிச் சிரித்தவாறே காட்டுக்குள் நடந்தனர். பாலு கேட்டான்."சோமு இப்போது பழைய கதையில் வருவது போல் கரடி வந்தால் என்ன செய்வாய்?"
"எனக்குத்தான் மரமேறத் தெரியுமே. மரத்தின்மேல் ஏறித் தப்பிவிடுவேன்."
மரம் ஏறத் தெரியாத பாலு உடனே சிந்தனை வயப்பட்டான்.வாய் பேசாமல் நடந்தவனுக்கு அச்சம் ஏற்பட்டது.சோமு சொன்னது போல ஏதேனும் வன விலங்குகள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று நடுங்கினான்.
அவன் அஞ்சியது போலவே ஒரு சல சலப்பும் உறுமலும் கேட்டது.
சோமுவும் சட்டென நின்றான்.பாலுவின் கரத்தைப் பற்றிக் கொண்டான்.தரதரவென்று அவனை இழுத்துச் சென்று ஒரு பெரிய மரத்தை நோக்கி ஓடினான்.இப்போது ஒலி எதுவும் கேட்கவில்லை பாலுவுக்குப் பயம் நீங்கியதுபோல் இருக்கவே குரலை எழுப்பி சோமு என்று ஆரம்பித்தான்.சட்டென அவன் வாயைப் பொத்திய சோமு அந்தப் பெரிய மரத்தின் அருகே குனிந்து நின்றான்.மரமேறத் தெரியாத பாலுவைத் தன முதுகின்மேல் ஏறி மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு மரத்தின் உச்சிக்குப் போக உதவினான்.பின் தானும் ஏறி உச்சியில் அமர்ந்து கொண்டான்.காடு முழுவதும் நன்கு தெரிந்தது.பாலு எவ்வளவு பெரிய காடு என்று ஆச்சரியப்பட்டான்.
சோமு"பாலு, மெதுவாகப் பேசு.அருகே ஏதோ விலங்கு இருக்கு"என்றவுடன் பாலு வாயை இருக்க மூடிக் கொண்டான்.சற்று நேரத்தில் ஒரு புலி இரைக்காக அங்குமிங்கும் அலைந்தபடி செல்வதைக் கண்டனர்.பாலு அச்சத்தில் சோமுவைக் கட்டிக் கொண்டான்.
அந்தப் புலி வெகு தூரம் சென்று விட்டதை மரத்தின் மேல் இருந்து பார்த்தபின் இருவரும் கீழே இறங்கினர்.அச்சத்துடன் இருவரும் மிக வேகமாக ஊரைச் சென்றடைந்தனர்.
"சோமு, நான் புலிக்கு இரையாகாமல் என்னைக் காத்தாய்.நீயே உண்மையான நண்பன்."
"நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன்."
"அதுசரி. முதல்முறை உன்னை அடித்தேன் அதை நீரில் எழுதினாய். மறுமுறை சேற்றிலிருந்து காப்பாற்றியதைக் கல்மேல் எழுதினாயே. அதுதான்
ஏனென்று விளங்கவில்லை."
"நண்பன்தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும்.அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினேன். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதுதான் நட்பின் இலக்கணம்.அத்துடன் அவன் செய்த நன்மைகளை எப்போதும் மறவாமல் நன்றியறிதலோடு நடந்து கொள்ள வேண்டும்."என்று சோமு சொன்னவுடன் பாலு வேகமாக ஓடினான்.அவன் பின்னாலேயே குரல் கொடுத்தவாறு ஓடினான் சோமு.
சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பாறைமீது மற்றொரு கல்கொண்டு சோமு தன்னை புலியிடமிருந்து காப்பாற்றியதை எழுதத் தொடங்கினான் பாலு.அதைப் பார்த்த சோமு பாலுவை அன்புடன் கட்டிக் கொண்டான். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com

திங்கள், 12 நவம்பர், 2012
தீபாவளி வாழ்த்துகள்.
சுட்டிக்கதையைப் படிக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்று வாழ்த்தும் உங்கள் அன்புப் பாட்டி.
ருக்மணி சேஷசாயி.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ஞாயிறு, 4 நவம்பர், 2012
99- சான்றாண்மைஎன்பது
ஒரு கிராமத்தில் அப்பாசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.மூத்தவன் பெயர் கணேசன்.இளையவன் பெயர்
வேலு. இருவரும் அந்த ஊரிலுள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். கணேசன் எட்டாவதும் வேலு ஆறாவதும் படித்து வந்தனர்.கணேசனுக்குத் தன
தம்பி வேலுவின் மேல் மிகவும் பிரியம். அதனால் அவன் செய்யும் சிறு தவறுகளை எப்போதும் சமாளித்து விடுவான்.மற்றவர் தன தம்பியை ஏதும் குறை கூறிவிடக் கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பான்.ஆனால் இதை சற்றும் உணராத வேலு எப்போதும் தன்னையே கவனிக்கும் தன அண்ணன்மேல் கோபப் படுவான்.
ஆனாலும் தன பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை கணேசன். தம்பி யாருடன் பேசுகிறான், எங்கே வெளியே போகிறான் அவன் நண்பர்கள் யார் யார் என கவனித்துக் கொண்டிருப்பான். ஒருமுறை வேலுவின்மீது பொறாமை கொண்ட துஷ்டப் பையன் கோபி வேறு ஒரு பையனின் புத்தகத்தைத் திருடி வேலுவின் பைக்குள் வைத்துவிட்டான்.வீட்டுக்கு வந்த வேலுவின் பையிலிருந்த அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கணேசன் உடனே சைக்கிளில் போய் அந்தப் புத்தகம் யாருடையதோ அந்தப் பையனிடமே கொடுத்துவிட்டு வந்தான்.மறுநாள் கோபி தன எதிரி வேலுவுக்குத் திருட்டுப் பட்டம் கட்ட முடிய வில்லையே என வருந்தினான். இந்தச் செய்தியை வேலுவின் நண்பன் சொன்னபோது வேலு திகைத்தான். அந்தப் புத்தகம் என்னிடம் இருப்பதை ஆசிரியர் பார்த்திருந்தால் நான்தான் திருடன் என நினைத்திருப்பாரே.நல்லவேளை புத்தகம் என்னிடம் இல்லாதது நல்லதாய்ப் போயிற்று என எண்ணியவன் இது எப்படி நடந்திருக்கும்? என சிந்தித்தான்.ஆனாலும் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் அந்த கோபி தவித்ததைப் பார்த்துச் சிரித்தான் வேலு.
இது எப்படி நடந்தது. வீட்டுக்கு வந்தவனிடம் வகுப்பில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி கணேசன் கேட்கவே வேலு அவன்தான் புத்தகத்தை எடுத்து நண்பனின் வீட்டில் கொடுத்திருக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.ஆனாலும் வழக்கம் போல என் பையை நீ ஏன் எடுத்தாய்? என்று சண்டைக்கு வந்தான். ஆனால் கணேசன் சிரித்துக் கொண்டே ஓடிவிட்டான்.
வேலு அப்பாவிடம் வந்து படிக்க உட்கார்ந்தான்.நடந்த செய்தியை ஏற்கெனவே கணேசு அப்பாவிடம் சொல்லிவிட்டான்.ஆனால் வேலு எதுவுமே நடவாதது போல் திருக்குறளைப் பற்றி அப்பாவிடம் கேள்வி கேட்டான்."
"அப்பா, சான்றாண்மைன்னா என்ன பொருள் அப்பா " என்றான். அவனைக் கூர்ந்து பார்த்த அப்பா "நாளைக்குச் சொல்கிறேன்."என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
மறுநாள் அன்று விடுமுறை தினம். மாலையில் வேலுவையும் கணேசனையும் கடற்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அழைத்தார்.ஆனால் கணேசன் எனக்குப் பரீட்சை வருகிறது. நான் படிக்கணும் நான் வரவில்லை என்று சொல்லவே வேலுவை மட்டும் அழைத்துக் கொண்டு கடற்கரை சென்று மணலில் அமர்ந்தார் அப்பாசாமி.
தண்ணீரில் விளையாடிக் களைத்தபின் அப்பாவின் அருகில் வந்து அமர்ந்தான் வேலு. அப்போது நாலைந்து மீனவப் பையன்கள் கரையோரமாக ஒலியெழுப்பிய வண்ணம் எதையோ தேடினர். அப்போது வேலுவின் அருகே ஒரு நண்டு பரபரவென்று நடந்து சென்றது.அதன் கால்கள் பதிந்த இடத்தில் ஈரமண்ணில் விதம் விதமான கோடுகள் பதிந்தன.அதைப் பார்த்துக் குஷியில் குதித்தான்வேலு.அடுத்த நொடியில் ஒரு அலை வந்து அந்தக் கால்தடத்தை அழித்துச் சென்றது.இப்படி நண்டு கோலம் போடுவதும் அலைகள் அழிப்பதுமாக இந்த விளையாட்டை ரசித்துப் பார்த்தான் வேலு.திடீரென்று அந்த மீனவச் சிறுவர்கள் அங்கு வந்து நண்டைப பிடிக்க அதன் வளையைத் தேடினார்கள்.அது சென்ற வழியான கால்தடத்தைத் தேடிப் பார்த்தனர்.எங்கும் தடம் இல்லாதபடி அலைதான் அழித்து விட்டதே.நண்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
இந்தக் காட்சியை வேலுவுக்குக் காட்டினார் அப்பா.
"அவர்கள் எதற்காக வந்தனர் தெரியுமா?"
"அவர்கள் எதற்காக வந்தனர் தெரியுமா?"
"நண்டு பிடிக்க வந்தனர்.இல்லையாப்பா?"
"நண்டைப் பிடிக்க முடிஞ்சுதா?"
"அதுதான் வளைக்குள்ளே ஓடி ஒளிஞ்சுடிச்சே"
"அப்படி ஓடி ஒளிய யார் காரணம்?"
"அலை வந்து அதனுடைய கால்தடத்தை அழிச்சுட்டதாலே நண்டு வளையைக் கண்டு பிடிக்க முடியாமே போய்ட்டாங்கப்பா."
"ரொம்ப சரி.அந்த நண்டு நான் போட்ட அழகான கோலத்தை அழிக்கறியே அப்படீன்னு கோபப் பட்டு அலையைத் திட்டியிருக்கும் இல்லையா?"
"ஆமாம்ப்பா"
"அந்த அலையும் ரோஷப் பட்டு நண்டின் கால்தடத்தை அழிக்காமே விட்டிருந்தா என்ன நடந்திருக்கும்?"
"ஐயோ,அந்தப் பையன்கள் வளையைக் கண்டு பிடிச்சு நண்டைப் பிடிச்சிருப்பாங்களே "
"இப்போ அந்த நண்டு என்ன நினைக்குது தெரியுமா? தன உயிரைக் காப்பாத்தின அலைகிட்டப் போயி என்ன சொல்லும்?"
"அந்த அலைகிட்டே மன்னிப்புக் கேட்குமா அப்பா?"
"இன்னும் அது மன்னிப்புக் கேட்கலையே."
"அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"
"நீதான் அந்த நண்டு.உன் அண்ணன்தான் அந்த அலை.அவன் செய்யும் ஒவ்வொரு உதவியையும் அந்த நண்டைப் போல நீ தப்பாக நினைத்து கோபப் படுகிறாய் இல்லையா?"
வேலு தன தவறை இப்போது உணரலானான்.அண்ணன் செய்யும் ஒவ்வொரு செயலும் தன்னைப் பாதுகாக்கவே என்பதை அவன் புரிந்து கொண்டான்.
"நீ உன் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டால்தான் அந்த நண்டும் மன்னிப்புக் கேட்கும்.அந்த அலையும் மகிழ்ச்சியடையும்."
"இனிமே நான் அண்ணன் கூட சண்டை போடா மாட்டேம்பா .அண்ணன் ரொம்ப நல்லவம்ப்பா "
"நீ கேட்டியே சான்றாண்மைன்னா என்னப்பான்னு? அதுக்குப் பொருளே உங்கண்ணன் தான் வேலு."
"எனக்குப் புரியலப்பா."
"சொல்றேன்.
"நம்ம திருவள்ளுவர் ஒரு குரள் சொல்லியிருக்கிறார்."
"கடனென்ப நல்லவை எல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு."
"அப்படின்னா என்னப்பா?"
"சொல்றேன். நம்ம கடமை இதுன்னு தெரிஞ்சு அதை நல்ல முறையிலே செய்து முடிக்கிறதுதான் நம்ம கடமைன்னு இருக்கிறவங்களை சான்றோர்னு சொல்வாங்க.உங்கண்ணன் உனக்கு எப்பவும் நல்லதே செய்யறானே அவன் சான்றோன் தானே?"
"ஆமாம்ப்பா. சான்றாண்மைன்னா நல்ல குணங்கள் இருக்கிறவங்கன்னு சொல்லலாம் இல்லையா?"
"சரியாப் புரிஞ்சிகிட்டே வேலு.நாம கடற்கரைக்கு வந்தவேலை முடிஞ்சுடுச்சு. வா போகலாம்."என்று எழுந்தார் அப்பாசாமி.
அவருடைய கையைப் பற்றிக் கொண்டு மனம் நிறைய அண்ணனின் அன்பைப் பற்றி எண்ணிக் கொண்டு வாயில் கணேசண்ணே , கணேசண்ணே என்றபடியே அவருடன் நடந்தான் வேலு.
"ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
புதன், 17 அக்டோபர், 2012
98-.திருக்குறள் கதைகள்.- விதியையும் வெல்லலாம்
பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை.குழந்தைகளுக்காக தமிழ்ப் பாடல்களும்,கதைகளும், தமிழ் பயில
i pod, iphone, applications இருக்கிறது.www.haviga.com <http.www.haviga.com> என்ற தளத்தில் பாட்டி சொன்ன கதைகளில் பாட்டியே கதை சொல்வதைக்
கேட்கலாம். இந்த தளத்திற்கு விஜயம் செய்யவும்.
உங்கள் அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.
விதியையும் வெல்லலாம்.
வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.பெரியவன் சிவா. இளையவன் சங்கரன்.சிவா நல்ல ஆரோக்யமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவனாக இருந்தான்.எப்போதும் தனியாக அமர்ந்து ஆகாயம் மரங்கள் பறவைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான்.அதிகமாகப் பேசமாட்டான்.
எப்போதும் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி இருப்பான்.எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் வீரப்பன் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வார். ஏதேனும் பேச நினைத்தால் கூட சங்கரன் அவர் முகத்தைப் பார்த்து பயந்து பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து விடுவான்.
ஒருமுறை சங்கரனுக்குப் பிறந்த நாள் வந்தது.அன்று அப்பா கோபமாக,எ' இவன் பிறக்கவில்லையென்று யார் அழுதாங்க?ஒன்றுக்கும் உபயோகமில்லை. தன்னையே பார்த்துக் கொள்ள துப்பில்லை" என்று திட்டிவிட்டுப் போய்விட்டார்.ஆனால் அம்மாதான் மனம் கேட்காமல் சங்கரனுக்குப் புதுச் சட்டை வாங்கிவந்து போட்டு தலைவாரிவிட்டு அவனுக்கு இனிப்பும் ஊட்டிவிட்டார்கள்.அப்போது சங்கரனின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார். அதிலிருக்கும் வண்ணங்களைக் கண்டு சங்கரன் மிகவும் மகிழ்ந்தான்.கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். பொழுது போகாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது நேரம் போதாமல் வரையும் வேலையில் ஆழ்ந்து போனான்.
அவன் இருந்த அறை முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார்.ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்.அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான்.தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் தன தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன அண்ணனுக்காகக் காத்திருப்பான். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு அதே தெருவில் வசித்த ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான்.அதைப் பார்த்த டீச்சர் மிகவும் மகிழ்ந்தார்.ஒருவாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன் அந்த ஓவியங்களைக் கேட்டார்கள் என்று புரிந்தது.சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது.அந்த சமயம் ஒரு அறை முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.அதைப் பார்த்த அனைவரும் அந்த ஓவியங்களைப் பாராட்டினர்.
பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர் அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார். ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செல்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார்.பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன.
அன்று மாலையே ராதா டீச்சர் அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார். ஏதோ படத்தை வரைந்து கொண்டிருந்த சங்கரன் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைக் காட்டினான்.அவனுடன் வந்திருக்கும் டீச்சரைப் பார்த்து வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டான்.
ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார்.
"ஐயா, உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும்.அவனை இன்னும் நீங்கள் ஊக்கப்படுத்தினால் சிறந்த ஓவியனாக வளருவான். இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள்.நானும் உதவி செய்கிறேன்.அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம். அதோடு அகவனைப் பெற்ற நீங்களும் பெருமைப் படலாம்."
.துயரமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தேவானை பேசினார்." அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா.உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்." என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டாள் தேவானை.
வீரப்பன் ஏதும் பேசத் தோன்றாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.
அடுத்தமாதமே அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடிவந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை. சாதாரணத் தொழிலாளியான தனக்கு இத்தனை மதிப்பா என மகிழ்ந்து போனார்.
இப்போது சங்கரன் செயற்கைக் கால்களுடன் தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில் நின்று கொண்டு தூரிகை பிடித்து வரைந்து கொண்டு இருக்கிறான்
அவனைத் தேடி பத்திரிகைக்காரர்களும் சினிமாப் படம் எடுப்பவர்களும் பணத்தைக் கொட்டிப் படம் வேண்டுமென்று கேட்டுத் தவம் கிடக்கின்றனர்.
விதியையும் வெல்லலாம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட வீரப்பன் பெருமையுடன் தன மகனைப் பார்த்தார்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
உண்மைதானே.வள்ளுவர் கூறும் பொன்மொழி நம் வாழ்க்கைக்கு எத்தனை சிறந்த வழிகாட்டி! தன்னால் ஏதும் இயலாதென்று தயங்கி தளர்ந்து இராமல் முயற்சி செய்தால் வாழ்வில் பெருமை பெறலாம் என்ற உயந்த அறிவுரைநாம் அனைவரும் முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணரவேண்டும்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
97-அரணாகும் அறிவு.
முன்னொரு காலத்தில் பல சிற்றரசர்கள் தனித் தனி நாடுகளை ஆண்டு வந்தனர். .அப்படிப்பட்ட ஒரு சிற்றரசுதான் இங்கு குறிப்பிடப்படும் ஒரு நாடு. சண்பக புரி என்று அந்த நாட்டுக்குப் பெயர்.அந்த நாட்டுப் பிரபுக்களுக்குச் சில அதிகாரங்கள் இருந்தன. பிரபுக்கள் அந்த நாட்டுக்கு மன்னனைத் தேர்ந்தெடுப்பர். ஓராண்டானதும் அவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள மனிதரற்ற கடல் நடுவில் இருக்கும் தீவுக்கு அனுப்பப் படுவான். கானகம் நிறைந்த அந்தத் தீவில் பல விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன.அங்கு செல்பவர் இறப்பது உறுதி.இப்படி ஓராண்டுக்கு ஒரு மன்னர் என்ற விசித்திர பழக்கத்தைக் கொண்டிருந்தனர் செண்பக புரி மக்கள்.அதனால் மன்னர் சிம்மாசனம் என்றால் மக்கள் ஓடி ஒளிந்து கொள்வர்.
அந்த ஆண்டும் மன்னரைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள மக்கள் அரசு அதிகாரிகள் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர்.
அந்த ஊரில் வைசாலி என்று ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரே மகன் விசாகன். தந்தையற்ற விசாகனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள் வைசாலி. வைசாலி கல்வி கற்காவிடினும் கேள்வி ஞானம் நிறைந்தவள். அறிவும் ஆற்றலும் மிகுந்தவள். தன் மகனையும் அவள் அறிவு புகட்டி நிறைந்த அறிவுள்ளவனாகவே வளர்த்திருந்தாள்.
அன்று தாயும் மகனுமாகத் தங்கள் நிலத்தைக் கவனிக்க வயலுக்குச் சென்றிருந்தனர்.மாலையில் வீடு திரும்பும்பொழுது ஊர்மக்கள் யாரையும் காணோம்.இருவரும் காரணம் தெரியாமல் திகைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எதிரே காவலர் நால்வர் வந்து நின்று அவர்களை பிரபுக்களின் முன்னே கொண்டு போய் நிறுத்தினர். இப்போது அவர்களுக்குப் புரிந்துவிட்டது.
விசாகன் "ஐயா, நான் விவசாயி. கல்விஎன்பதே அறியாதவன் என்னை மன்னனாக்கினால் நாட்டின் நிலை என்னாகும்?நன்கு படித்த பிரபுக்களின் வம்சத்தில் மன்னனைத் தேர்ந்தெடுங்கள்."என்று கேட்டுக் கொண்டான்.
ஆனால் இருள் வருமுன் மன்னனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்தினால் பிரபுக்கள் விசாகனுக்கு முடிசூட்டினர். இப்போது விசாகன் அந்த நாட்டு மன்னன். மக்கள் அவனை மகிழ்ச்சியோடு பார்த்ததைவிட பரிதாபமாகப் பார்த்தனர்.இன்னும் ஓராண்டுதானே இவன் ஆயுள். பிறகு இவன் விலங்குகளுக்கு இரையாகப் போகிறானே என்பதை எண்ணி அவனுக்காக அனுதாபப் பட்டனர்.வைசாலி கலங்கவில்லை.வருவது வரட்டும்.என்று துணிவுடன் இருக்க தன் மகனுக்கு அறிவுரை கூறினாள்.
நாட்கள் சென்றன. விசாகன் மன்னனாகி இரண்டு மாதங்கள் கழிந்தன. அந்த நாட்டிலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சிலர் காணாமல் போகத் தொடங்கினர்.பிரபுக்களுக்கு இதென்ன புது விபரீதம் என்று அச்சம் ஏற்பட்டது.இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.தெய்வக் குற்றமா அல்லது கடல்கொள்ளையர் வேலையா என ஆலோசனை செய்யத் தொடங்கினர்.
இப்படியே மாதங்கள் ஓடின.இப்போது இன்னும் ஒரு மாதம்தான் விசாகன் மன்னனாக இருப்பான்.அதன்பின் நடுக்கடலிலுள்ள தீவுக்கானகத்திற்கு அனுப்பப் படுவான்.அதன்பின் அவன் மீண்டு வரமாட்டான். பாவம் இளம் வயது. அவன் தாய்க்கு மனம் எவ்வளவு வேதனைப் படும்?என்று மக்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.
திடீரென்று ஒரு நாள் அரண்மனையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ராஜமாதாவான வைசாலியைக் காணோம். ஊரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபுக்களின் அச்சம் உச்சத்திற்கே போய்விட்டது. சபையைக் கூட்டி ஆலோசனை செய்தனர். ஊரெங்கும் ராஜமாதாவைத் தேட ஆணை பிறப்பித்தான் விசாகன்.ஆனால் வைசாலியோ அவளுக்கு முன்னர் காணாமல் போன மக்களோ யாரும் கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே விசாகனின் மன்னர் பதவி முடிவுக்கு வந்தது. அன்றுடன் அவன் அரசபதவி முடிந்தது.
மறுநாள் அதிகாலையிலேயே அரண்மனையில் பிரபுக்கள் கூடினர்.சகல மரியாதையுடன் விசாகனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.இளம் வயது மன்னனை கடைசியாகப் பார்க்க மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
ஒரு சிறிய கப்பலில் விசாகன் ஏற்றப் பட்டான்.அதில் ஒரு மாலுமியும் அவனுக்கு உதவியாளனும் மட்டும் இருந்தனர்.பிரபுக்கள் சைகை செய்து கப்பலை செலுத்தச் சொன்னார்கள்.
கப்பல் புறப்பட்டது.கண்ணீருடன் சிலர் கப்பல் மறையும் வரை பார்த்து நின்றனர்.
சில நாட்கள் கழித்து அந்தக் கப்பல் மீண்டும் வந்தது. மாலுமி பிரபுக்களிடம் வழக்கம்போல் விசாகனையும் குறித்த இடத்தில் கடலில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தான்.பிரபுக்களும் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகம் செய்து முடித்தனர்.
இப்போதும் சண்பகபுரி மக்கள் காணாமல் போவது நிற்கவில்லை.
பிரபுக்களின் கவலை அதிகமாயிற்று. அவர்களின் அதிகாரத்திற்கு இடையூறு வந்ததேயென்று அச்சமும் கோபமும் கொண்டனர்.ஓராண்டு முடியும் தறுவாயில் அந்த சண்பகபுரி மீது படைஎடுத்தான் ஒரு மன்னன். பிரபுக்களுக்கு அச்சத்தை விட ஆச்சரியமே மேலோங்கியது.ஒற்றர்களை ஏவி யாரது என விவரம் கேட்டனர்.
வீரபுரிஎன ஒற்றர் தெரிவிக்க மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாகினர்.அப்படி ஒரு நாடு இருப்பதாகவே தெரியாதே எனத் திகைத்து முடிக்கும் முன்பாகவே வீரபுரி மன்னன் அரண்மனைக்குள் நுழைந்து மன்னராக ஆட்சி புரிந்து வந்த பிரபுக்களைஎல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான்.சண்பகபுரியின் ஆட்சியைக் கைப்பற்றினான்.
பட்டாபிஷேகம் செய்து கொண்ட அந்தக் காட்சியைக் கண்டு தலை குனிந்து நின்றிருந்த பிரபுக்களின் முன் வந்து நின்றான் அந்த வீரபுரி மன்னன்.
"என்னைப் பார்த்த நினைவில்லையா உங்களுக்கு?ஓராண்டுக்குள்ளாகவே என்னை மறந்து விட்டீர்களா?"
இந்தக் குரலும் முகமும் பழக்கமானதாக இருக்கிறதே எனத் திகைத்தார்கள் பிரபுக்கள்.அப்போது அவர்கள் முன் வந்து நின்றாள் வைசாலி.
"திகைக்காதீர்கள்.கடந்த ஆண்டு உங்களுக்கு மன்னனாக இருந்த விசாகன்தான்.என் மகன்தான்.உங்களுக்கு அடிமையாக ஒரு ஆண்டு உங்கள் கைப் பாவையாக பொம்மை அரசனாக இருந்தவன்தான்."
'இன்னும் சாகாமல் இருப்பது எப்படி? காட்டில் வனவிலங்குகள் இவனைக் கொல்லவில்லையா? எப்படி ஒரு நாட்டின் மன்னனான்?'அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தைப போக்கி வைத்தாள் வைசாலி.
"நீங்கள் என்மகனை மன்னனாக்கியதும் அவனிடம் சில வேட்டைக்காரர்களை அனுப்பி அந்தக் காட்டிலுள்ள வனவிலங்குகளை வேட்டையாடச் சொன்னேன். மீண்டும் விவசாயிகள் கட்டடக் கலைஞர்களை அனுப்பி காட்டை நாடாக்கினேன்.அதையெல்லாம் சீர்செய்ய நானே அங்கு சென்று என்மகன் வரும்வரை நாட்டைப பாதுகாத்து படைகளைச் சேர்த்து வந்தேன்.இந்த ஓராண்டுக்குள் எங்கள் வீரபுரி உங்கள் சண்பகபுரியை விட வலுப்பெற்று நிற்கிறது. என்மகன் விசாகன் இப்போது அறிவினாலும் வீரத்தினாலும் உங்கள் முன் வெற்றிவீரனாக நிற்கிறான்."

விசாகன்,"பிரபுக்களே உங்களின் பேராசையால் அப்பாவி இளைஞர்களை நீங்கள் பலிகொடுப்பதை நிறுத்த என் தாயின் ஆலோசனையின்படி நடந்து நானும் உயிரபெற்று பிற இளைஞர்களையும் காப்பாற்றிவிட்டேன்.எங்கள் உயிருக்கு அரணாக இருந்தது என் தாயின் அறிவு சார்ந்த ஆலோசனைகளே.இனி இந்த சண்பக புரி வீரபுரியின் ஆட்சிக்குட்பட்டது."என்று சொன்னதைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தனர்.விசாக மாமன்னர் ! வாழ்க, வாழ்க! என்ற கோஷம் வானைப் பிளந்தது.
"அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்."
அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் ஆயுதம்.பகைவராலும் அழிக்கமுடியாத பாதுகாப்பு அறிவு.
என்று வள்ளுவர் வாக்கு உண்மையல்லவா ?இதுவரை ஏமாற்றி வாழ்ந்தோம். இப்போது அறிவு நம்மை வீழ்த்தி விட்டது" என்று மனம் திருந்தி வைசாலிஇடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர் பிரபுக்கள்.
உண்மைதானே.அறிவிருந்தால் எங்கும் வெற்றி பெற்று வாழலாம்.எனவே அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
திங்கள், 17 செப்டம்பர், 2012
சுட்டி விகடனுக்கு நன்றி
இந்த இதழில் 'பாட்டி சொல்லும் கதைகள்' பற்றிய சிறப்பான அறிமுகம் செய்துள்ளமைக்கு 'சுட்டி விகடனுக்கு' எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
ருக்மணி சேஷசாயி.
-- ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
96 - தந்தையின் பெருமை.
அரசூர் என்று ஒரு கிராமம்.அந்த கிராமத்தில் நாகப்பன் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வ்ந்தார். நாகப்பன் நல்ல உழைப்பாளி.தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் பாடுபட்டு உழைத்து தன் குடும்பத்தைக் காத்து வ்ந்தார். மிகவும் பரோபகாரமும் ஏழைகளுக்கு இரங்கும் பண்பும் கொண்டவராக விளங்கினார். தன் வருமானத்தில் சேமித்து வைக்காமல் இல்லையென்று வருபவர்களுக்கு இல்லையென்னாமல் கொடுத்துவந்தார்.இவரது நல்ல உள்ளத்தை தங்களுக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டு பணம் பெற்றுப் போனவர்களும் உண்டு.
இத்தகைய உயர்ந்த மனிதரின் மனைவி கமலம். கணவருக்கேற்றகுணவதியாஇருந்தாள்.இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் மாணிக்கம்.அடக்கமும் அன்பும் உருவானவனாக இருந்தான்.பள்ளிப் படிப்பிலும் சிறந்தவனாக விளங்கினான்.இவர்களின் குடும்பம் அமைதியும் அன்பும் மகிழ்ச்சியும் கொண்டு திகழ்ந்தது.
காலம் ஓடியது. ஒருஆண்டு வெள்ளத்தாலும் மறுஆண்டு வறட்சியாலும் அரசூர் பஞ்சத்துக்கு ஆளானது.அந்த நிலையிலும் தன்னிடம் வருபவர்களுக்கு வீடு நிலம் இவற்றை விற்றும் அடகு வைத்தும் உதவி வ்ந்தார் நாகப்பன். இப்போது உட்கார வீடில்லை.உழுது பயிரிட நிலமில்லை. நோய்க்கு மருந்து வாங்க இயலவில்லை. பசிக்குச் சோறில்லை.
இவரது நிலைமையைத் தெரிந்து கொண்டவர்கள் இவரிடம் உதவி பெற்றுப் போனவர்கள் யாரும் இவரிடம் வருவதை நிறுத்திவிட்டனர்."தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும் .இது தெரியாமல் என்னமோ கர்ணப் பிரபு போல அள்ளிக் கொடுத்துகிட்டிருந்தா இப்படித்தான் தெருவில் நிக்கணும்"என்று கூசாமல் பேசி இவர் தங்களிடம் நெருங்காமல் விலக்கி வைத்தனர். நாகப்பனும் தான் செய்த உதவியை நினைத்துப் பார்த்தவரில்லை.தன்னிடம் உதவி பெற்றுப் போனவர்கள் வளமுடன் வாழ்வதை அறிந்து தனக்குள் மகிழ்ந்தார்.
ஊரின் எல்லையில் ஒரு குடிசை அமைத்துத் தங்கியிருக்கலானார்.உடல் நலிவடைந்து விட்டதால் படுத்தபடியே இறைவனை எண்ணி வாழ்ந்து வ்ந்தார்.ஒருநாள் இவரைத் தேடி அவ்வூரின் பெருந்தனவந்தர் ஒருவர் வ்ந்தார்.அவரை வரவேற்று அமரச் சொன்னார் நாகப்பன்.
ஆனால் அவர் அமராமல் நாகப்பனிடம் கடுமையாகப் பேசினார்."உன் ஊதாரித்தனத்தினால் இப்போது இந்த நிலையை அடைந்திருக்கிறாய். வாரிக் கொடுத்ததினால் நீ வள்ளலாகிவிட்டாயா? கடன்காரனாகத்தானே இருக்கிறாய்?"
நாகப்பன் திடுக்கிட்டார்."ஐயா. நான் யாருக்கும் கடன்பட வில்லையே.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டேனே"
"ஆனால் என்னை மறந்துவிட்டாய்.என்னிடம் வாங்கிய பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாயா?அது போகட்டும் இந்த ஊரில் பள்ளி கட்ட என்று உன்னிடம் கேட்டபோது ஐந்தாயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னாயே.அதைக் கொடுக்க முடிந்ததா உன்னால்?"
நாகப்பன் வருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.அவர் கண்களில் நீர் கோர்த்ததைக் கண்டார் தனவந்தர்.
"சரி நாகப்பா. இனியும் இதுபோல் தானம் தருமம் என்று சொல்லிவிட்டு கஷ்டப் படாதே.எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரவேண்டாம் அந்த பள்ளிக்கூடத்துக்கான பணமும் நீ தரவேண்டாம் வீட்டை நன்கு கவனித்துக் கொள். அதைச் சொல்லிப் போகவே வந்தேன்."
நாகப்பன் நன்றியுடன் கைகூப்பினார்.
அதன்பின் அவர் மனம் கடன்பட்டவன் மனம் போலத் துடித்தது. மாணிக்கம் தந்தையின் நிலை பொறுக்காமல் வேறு ஊருக்குச் சென்று விடலாம் என்றபோது மறுத்தார்.கடனாளியாக இருந்து ஊரைவிட்டு ஓடத் தயாராக இல்லை.என்றார்.மாணிக்கம் தான் மட்டும் பட்டினம் சென்று ஏதேனும் வேலை தேடி சம்பாதிப்பதாகக் கூறிப் புறப்பட்டான்.
நகரத்துள் நுழைந்த மாணிக்கம் ஒரு நல்லவரைச் சந்தித்தான். அவரும் மாணிக்கத்தின் முகத்தில் தோன்றிய கள்ளமில்லாத் தன்மையைப் பார்த்துத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அவரது பஞ்சு வியாபாரத்தை நன்கு கவனித்துக் கொண்டான்.கூடவே அவனது படிப்புக்கும் உதவி செய்தார் அந்தப் பெரியவர்.மாணிக்கத்திற்கு பதினெட்டு வயதானதால் இப்போது அவனால் தனியாகத் தேர்வு எழுத முடிந்தது.
மாணிக்கம் தேர்வில் வெற்றி பெற்றதைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்க விரும்புவதாகச் சொன்னதை ஏற்றுக் கொண்டார் அந்தப் பெரியவர்.
"மாணிக்கம், நீ இங்கு வந்து மூன்று வருடமாச்சு.உன்பெற்றோரைப் பார்க்கப் போகவேண்டியது உண்மைதான்.உனக்காக நான் இதுவரை சம்பளமாக எதுவும் கொடுக்கவில்லை.என் வியாபாரத்தில் நீ உழைக்கும் பங்குதாரராக இருக்கிறாய்.மூன்று ஆண்டுகளில் உன் பங்காக இந்த இரண்டு லக்ஷம் ரூபாயைத் தருகிறேன்.உன்தந்தையிடம் கொடுத்துவிட்டு சீக்கிரமே இங்கு வந்துவிடு."என்று கூறி அவனை அனுப்பிவைத்தார்.மகிழ்ச்சியுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட மாணிக்கம் அவரை வணங்கி விட்டு அரசூருக்குப் புறப்பட்டான்.
ஊருக்கு வெளியே உள்ள குடிசையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த நாகப்பன் மகனைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்.
பெற்றோரை வணங்கி மகிழ்ந்தவன் அவர்களுக்கு வேண்டிய உணவு உடை இவற்றையும் தான் சம்பாதித்த இரண்டு லக்ஷத்தையும் கொடுத்தான். நாகப்பன் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
அப்போது "என்ன நாகப்பா, என்னைப் பார்க்கணும்னு சொன்னியாமே உன் மகன் மாணிக்கம்தான் அழைத்தான். என்ன விஷயம்?" 'என்றபடியே உள்ளே நுழைந்தார். அவருடன் நாகப்பனின் நிலையை அறிய இன்னும் இரண்டு மூன்று பேர் உடன் நுழைந்தனர்.
"வாங்கய்யா," என அழைத்த மாணிக்கம் தன் தந்தையின் கையில் பதினைந்தாயிரம் ரூபாயைக் கொடுத்து "அப்பா. இவருக்குப் பணம் திருப்பிக் கொடுக்க முடியலைஎன்னுதானே ராவும் பகலும் வருத்தப் பட்டீங்க. வட்டியோட அவருகிட்ட இந்தப் பணத்தை உங்க கையால குடுங்கப்பா"என்றான்.
அத்துடன்" இன்னொரு பத்தாயிரத்தைப் பள்ளிக்கூட வளர்ச்சிக்குக் குடுங்கப்பா. நீங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்திட்டீங்கப்பா. இனியாவது சந்தோஷமா இருங்கப்பா".என்றவன் தன் தந்தையின் காலடியில் அமர்ந்து கண்ணீர் விட்டான்.
சோர்ந்து முடங்கியாமர்ந்திருந்த நாகப்பன் புது தெம்புடன் நிமிர்ந்து நின்றார்.பெருந்தனவந்தரும் மகிழ்ந்தார்.
"நாகப்பா இப்படிப்பட்ட மகனைப் பெற்ற நீ ரொம்பக் குடுத்து வச்சவனப்பா.இந்தமாதிரி அருமையான பிள்ளையைப் பெற நீ ரொம்பத் தவம் செய்திருக்கே."
உடன் வந்தவரோ"ஆமாம் நாகப்பா, நீ இதுவரை செய்திருக்கும் தான தருமந்தான் உன்பிள்ளை இவ்வளவு உயர்ந்தவனாயிருக்கக் காரணம்." வன்று வாயார வாழ்த்திச் சென்றனர்.
அவர்களின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் தன் மகனை அணைத்துக் கொண்டார் நாகப்பன்.
பெற்றோரின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மாணிக்கம் தன் தகப்பனார் பழையபடி சிறந்த உயர்ந்த இடத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் புறப்பட்டான்.
அவன் செல்வதைப் பார்த்த தனவந்தர்,
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என் நோற்றான் கொல்எனும் சொல்.
இந்தக்குறளை மெய்ப்பித்துவிட்டான் மாணிக்கம். உண்மையாகவே இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.என்றார் மகிழ்வுடன்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
95-மனவேளிச்சம்.
ஒரு ஊரில் ஒரு புடவை வியாபாரி இருந்தான்.அவன் ஊர் ஊராகச் சென்று புடவைகளை விற்று வந்தான்.புடவைகளுக்கு நியாயமான விலை சொல்லாமல் அதிக விலை சொல்லி மக்களை ஏமாற்றி வந்தான். அவனுக்கு தான் விரைவில் பணக்காரன் ஆகிவிட வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருந்தது.புடவை மூட்டையைத் தன் தலையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் நடந்தே செல்வான்.அவ்வாறு ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் போது இடையில் ஒரு காடு இருந்தது.அந்தக் காட்டைத் தாண்டி அடுத்த ஊருக்குச் சென்று விடலாம் என்று நடந்தான்.
வெகு தூரம் நடந்தும் ஊர் தென்படவில்லை. அவன் ஓய்வு எடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான்.அவன் அமர்ந்த இடம் சற்று மேடாக இருக்கவே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான் அங்கே ஒரு பானையைப் பார்த்தான் அந்தப் பானை நிறைய தங்க அவல் நிறைந்திருந்தது.
தங்கத்தால் ஆன அவல்உருவத்தில் புதையலைக் கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான்.தன்னுடைய பணக்காரன் ஆகவேண்டும் என்னும் ஆசைக் கனவு பலித்தது கண்டு ஆனந்தக் கூத்தாடினான்.
தன் தலையிலிருந்த புடவை மூட்டையைக் கீழே வைத்தான்.அந்தப் புடவைகளை அந்த மரத்தின் அடியிலேயே போட்டுவிட்டு பானையில் இருந்த தங்கத்தாலான அவலைஎல்லாம் தன் மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டான்.அப்போது மரத்தின் மேலிருந்து ஒரு குரல் கேட்டது.அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தான் வியாபாரி.சல சலக்கும் மரத்தின் ஊடேயிருந்து அந்தக் குரல் கேட்டது.
"ஏ வியாபாரியே ! இந்தப் பொன் உனக்குச் சொந்தமானதல்ல. ஒரு குருடனுக்குத்தான் இந்தப் புதையல் சேரவேண்டும்.உனக்கல்ல."
"நான்தானே பார்த்துத் தோண்டி எடுத்தேன். எனவே இது எனக்குத்தான் சொந்தம்.வேண்டுமானால் ஒரு பிடி அந்தக் குருடனுக்காகப் போட்டு வைக்கிறேன்." என்றவன் ஒரு பிடியைவிடக் குறைவாக அந்தப் பானையில் போட்டு விட்டு நடந்தான்.அப்போது அந்தக் குரல் "ஏ வியாபாரியே, பாதிப் பொன்னையாவது போட்டுவிட்டுப் போ."என்று கெஞ்சியபடியே கேட்டது. "அதெல்லாம் முடியாது."என்றவன்
யாரேனும் தான் வீசிய புடவைகளைப் பார்த்துவிட்டு நான்தான் புதையலை எடுத்திருக்கிறேன் எனத் தெரிந்து கொண்டுவிட்டால் என்ன செய்வது என எண்ணினான்.
அதனால் தான் வீசிய புடவைகளை அங்கேயே அருகில் ஓடும் ஆற்றில் எறிந்தான்.மகிழ்ச்சியோடு வீடு நோக்கி நடந்தான்.
அந்தக் காடு நீண்டு கொண்டே போனது.இருட்டும் நேரமும் வந்து விட்டது. ஊர் கண்ணுக்கே தென்படவில்லை.என்ன செய்வது என்று யோசித்தான்.தொடர்ந்து நடக்க அச்சமாக இருந்தது.கையிலோ பொன் மூட்டை நேரமோ இருட்டு. இருக்கும் இடமோ காடு. அவன் அச்சத்துக்குக் கேட்பானேன்.மனதில் தெய்வத்தை எல்லாம் வேண்டிக்கொண்டு பதுங்கிப் பதுங்கி நடந்தான்.
நல்ல வேளையாக தொலைவில் சிறிய வெளிச்சம் தெரியவே வேகமாக நடந்தான்.இரவு தானும் தன் செல்வமும் பத்திரமாக இருக்கலாம் என எண்ணியபடியே அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான்.
"அம்மா," எனக் குரல் கொடுத்தான். ஒரு வயதான அம்மாள் வெளியே வந்தாள்.
"யாரப்பா அது? உள்ளே வாருங்கள் "என்று அழைத்து உபசரித்தாள்.வியாபாரி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டவன் பொன் கிடைத்ததைப் பற்றி மூச்சு விடவில்லை.இரவு மட்டும் தங்கிப் போவதாகச் சொன்ன போது அந்த அம்மாள் "நான் இந்த மாதிரி வழிப்போக்கருக்காகவே இந்த இடத்தில் தங்கியிருக்கிறேன்.இதை நான் ஒரு தரும காரியமாகச் செய்கிறேன்."என்றவள் வியாபாரி சாப்பிட வயிறார உணவு பரிமாறினாள்.உண்ட களைப்புடன் தன் மூட்டையை அங்கேயே ஓரமாக வைத்துவிட்டுத் தூங்கப் போனான் அந்த வியாபாரி.அவனுக்கு முன்னாலேயே அங்கு வந்த வேறொரு வழிப்போக்கரும் அங்கு தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து தன் மூட்டையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான் அவன்.வெகு தொலைவு வந்தபின் பொன் மூட்டை லேசாக இருக்கிறதே நமது பொன் மூட்டை மிகவும் கனமாக இருக்குமே என்று சந்தேகப் பட்டவன் மூட்டைக்குள் கையை விட்டு ஒரு பிடியை அள்ளிப் பார்த்தான்.ஐயோ, இதென்ன அத்தனையும் துவரம்பருப்பாக உள்ளதே கடவுளே, அந்தக் கிழவி என்னை ஏமாற்றி விட்டாளா என்று மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றான்.
அவளிடம் தான் கொண்டு போன மூட்டை தன்னுடையது அல்லவென்றும் இன்னொரு மூட்டை இருக்கிறதா பாருங்கள் என்றபோது அந்த அம்மாள் "[இல்லையே அப்பா, உனக்கு அருகில் படுத்திருந்தவர்தான் அவருடைய மூட்டையைத் தூக்கிச் சென்றார்."என்றாள்.
"அவர்தான் என் மூட்டையைப் பார்க்காமல் எடுத்துச் சென்றிருக்கிறார் அவர் எப்போது போனார்?" என்றான் வியாபாரி படபடப்புடன்.அதற்கு அந்த அம்மாள் சிரித்தாள். "ஐயோ பாவம், அவரால் எப்படிப் பார்க்க முடியும் அவர்தான் கண் தெரியாதவர் ஆயிற்றே."
"என்ன, கண் தெரியாதவரா?அவர் எப்போது போனார்?"
"நீங்கள் தூங்கிய சற்று நேரத்துக்கெல்லாம் அவர் எழுந்து சென்று விட்டார்.நான்கூட நன்கு விடிந்தவுடன் செல்லலாமே என்று சொன்னேன்.குருடனுக்கு இருட்டானால் என்ன வெளிச்சமானால் என்ன.என் களைப்பு நீங்கிவிட்டது நான் சென்று வருகிறேன் என்று சொல்லிப் போய் விட்டார்.
புடவை வியாபாரிக்குக் கண்கள் இருண்டன.தள்ளாடியபடியே மீண்டும் அந்த புதையல் தந்த மரத்தடிக்கே வந்து அழுதான்.அப்போது அந்தக் குரல் கேட்டது."ஏ வியாபாரியே, நீ உனக்கென்று போட்டுவிட்டுப் போன தங்க அவல் இருக்கிறது. நீ அந்தக் குருடனிடம் புதையலைச் சேர்த்ததற்காக உனக்குக் கூலி.நீ நியாயமாக குருடனுக்கென்று பாதிப் பொன்னைப் போட்டிருந்தால் இப்போது அது உனக்குக் கிடைத்திருக்கும்.உன் பேராசையால், மற்றவர் சொத்துக்கு நீ ஆசைப் பட்டதால் மற்றவருக்கு அவரின் நியாயமான பங்கைக் கூடக் கொடுக்காததால் உனக்கேற்பட்ட நஷ்டத்தை இனியாவது தெரிந்து கொள்.இனி மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாதே.என் பணி முடிந்தது நான் போகிறேன்."என்று கூறிவிட்டு பெரும் காற்றாகி மறைந்தது அந்தக் குரலுக்குரிய பூதம்.
தன் தீய எண்ணங்களால் தனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்ததற்காக அழுதுகொண்டே அந்த ஒரு பிடி பொன்னை எடுத்து மடியில் கட்டிக்கொண்டான்.தான் இழந்த தன் புடவைகளின் மதிப்புதான் தனக்குக் கிடைத்துள்ளது என்று மனதைத் தேற்றிக் கொண்டு நடந்தான் அந்த வியாபாரி. இருள் மறைந்து வெளிச்சம் பரவியது.அவன் உள்ளத்திலும்தான்.

.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு
ஒருமுறை விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான்.பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார்.
மனமகிழ்ந்த விருத்ராசுரன் அவரை வணங்கி நின்றான்.
"விருதரா, உன் தவத்திற்கு மெச்சினேன். என்ன காரணத்திற்காக இந்தத் தவம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் "என்று அன்புடன் கேட்டார் பிரம்மா.
"சுவாமி, நான் என்றுமே சாகாதிருக்க அருள் செய்யுங்கள். இந்த வரம்தான் தேவை"என்றான் வேகமாக.
"விருதரா, உலகில் தோன்றியவை அனைத்துமே அழியவேண்டியது இயற்கை நியதி. அதை மாற்ற என்னால் மட்டுமல்ல மும்மூர்த்திகளாலும் ஆகாது.எப்படியெல்லாம் சாகக் கூடாது என்றுவேண்டுமானால் கேள். வரம் தருகிறேன்."என்றார் பிரம்மா.
சற்று சிந்தித்தான் அசுரன். பின்னர் "தேவா, நான் எந்த உலோகத்தாலான ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் நான் சாகக் கூடாது."என்று கேட்டுக் கொண்டான்.அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மா.
பிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை.
மக்கள், ரிஷிகள் தேவர்களும் கூட அவனை வெல்ல முடியாமல் திகைத்தனர்.எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்குவது சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார்.தன் முன்னே பணிவுடன் நின்ற தேவேந்திரனைப் பார்த்து "தேவேந்திரா, மனமுவந்து யாரேனும் தனது எலும்பைக் கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்."என்றபோது மகிழ்ச்சியுடன் இந்திரன் "அப்படியே கொண்டு வருகிறேன் சுவாமி."என்று புறப்பட்டான்.
எலும்பைக் கொடுப்பார் யாரிருப்பார் என பூலோகம் முழுவதும் தேடி வருகையில் ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ஒரு ரிஷியைக் கண்டான்.அவரே ததீசி முனிவர்.
நேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான்.வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி ஆச்சரியமாகப் பார்த்தார்.
"யாரது? தேவேந்திரனா என் முன் நிற்பது?"
"ஆம் மாமுனியே, தங்களால் ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது."
"என்ன வேண்டும் சொல் தேவேந்திரா."
"சுவாமி, லோக க்ஷேமத்துக்காக ஒரு அசுரனை வதைக்க வேண்டியுள்ளது அதற்கு ஆயுதமாக உபயோகிக்க ஒரு மனிதரின் முதுகெலும்பு வேண்டும்.உலக மக்களின் நன்மை கருதி தவம் செய்யும் தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்"
ரிஷி புன்னகை புரிந்தார்."இந்த உடல் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுமாயின் மிக்க மகிழ்ச்சி.நான் என் தவ வலிமையால் நெருப்பில் என் உடலை எரித்துக் கொள்கிறேன்.பின்னர் அந்த சாம்பலின் உள்ளே இருக்கும் என் முதுகெலும்பை நீ எடுத்துச் செல். உனக்கு ஆசிவழங்குகிறேன்."
என்று கூறித் தன் உடலை எரித்துக் கொண்டார்.அந்த்சாம்பலின் ஊடே இருந்த முதுகெலும்பை எடுத்துக் கொண்டு இந்திரன் சிவனை நாடிச் சென்று கொடுத்தார்.
அனைத்தையும் அறிந்த சிவன் ததீசி முனிவருக்கு கைலாச பதவி அளித்தார். தேவேந்திரன் கொடுத்த முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் ஒரு ஆயுதமாக ஆக்கித் தந்தார்.அதைக் கொண்டு படை நடத்தி வெற்றி பெறுவாய் என்றும் ஆசி வழங்கினார்.
அந்த எலும்பாலான ஆயுதமே வஜ்ராயுதம். அதைக் கொண்டு படை நடத்தி விருத்ராசுரனை அழித்தான் இந்திரன்.
அன்புடையவர்கள் தங்களின் எலும்பையும் மற்றவருக்குக் கொடுப்பார்கள் என்ற உண்மையை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.'
இதைத்தான் வள்ளுவரும்
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு." என்று கூறியுள்ளார்.
அன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியன என நினைப்பார்.ஆனால் அன்புடைய உயர்ந்த மனிதர் தனது உடமையையும் பிறர்க்குக் கொடுப்பார். உடமை மட்டுமன்றி தம் உடலோடு சேர்ந்த எலும்பையும் பிறர்க்குக் கொடுப்பார் அன்புடையோர்.
இப்படிப் பட்ட மனிதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளன்றோ?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)