வணக்கம்
ஞாயிறு, 21 ஏப்ரல், 2019
சனி, 6 ஏப்ரல், 2019
பாட்டி சொன்ன கதைகள் -
ஏமாற்றாதே ஏமாறாதே
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தான்.அருகில் உள்ள நகரத்திற்குச் சென்று மூட்டையில் உப்பு வாங்கிவந்து அந்த கிராமத்தில் விற்று வந்தான்.அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமெனில் இடையில் ஒரு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.வாரம் ஒரு முறை அந்த வியாபாரி நகருக்குச் சென்று உப்பு வாங்கி வருவா ன்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது அந்தக் கழுதையின் முதுகில் உப்பு மூட்டையை ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு வருவான்அவன்.
ஒரு முறை அந்த உப்புவியாபாரி நகருக்குச் சென்று உப்பு வாங்கிக்கொண்டு அந்த மூட்டையை வழக்கம்போல் கழுதையின் முதுகில் ஏற்றிக் கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தான்.அன்று ஆற்றில் நீர் கொஞ்சம் அதிகமாக இருந்தது.மெதுவாக கழுதையை ஒட்டிக் கொண்டு ஆற்றைக் கடக்கத் தொடங்கினான் அந்த வியாபாரி.
திடீரென்று கழுதையின் கால் மடங்கி கீழே விழுந்தது ஆற்று நீரில் தத்தளித்து எழுந்தது. அந்தக் கழுதையைப் படாத பாடு பட்டு எழுப்பி நிற்க வைத்தான் வியாபாரி.ஆனால் அதற்குள் உப்பு மூட்டை பாதி கரைந்து போனது.உப்பு குறைந்ததும் மூட்டையின் கனம் குறைந்தது.வெகு சுலபமாக கழுதை இப்போது நடந்தது.
வீடு சென்று சேர்ந்ததும் கழுதை யோசித்தது.ஆற்றில் விழுந்து எழுந்தால் கனம் குறைந்து விடுகிறது.இனி வரும்போதெல்லாம் ஆற்றில் விழுந்து வரலாம் என நினைத்தது.அடுத்தமுறை வியாபாரி வழக்கம்போல் உப்பு வாங்கி மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றின் அருகே வந்தான்.மூட்டையை இறுகக் கட்டிவிட்டு ஆற்றில் இறங்கினான்.
நடு ஆற்றில் கழுதை கால் மடங்கி விழுவதுபோல் நீரில் விழுந்தது.
இந்த முறை உப்பு கரைந்து நஷ்டமாகி விட்டதே என்ற கோபத்தில் கழுதையை நன்கு அடித்து எழுப்பினான் வியாபாரி
கழுதைக்கு அடி தெரியவில்லை. முதுகில் கனம் குறைந்ததே என்று மகிழ்ந்தது.இதேபோல் நீரில் வழக்கமாக கழுதை விழுவது கண்டு வியாபாரி புரிந்து கொண்டான். இது வேண்டுமென்றே நீரில் விழுகிறது முதுகின் கனம் குறைக்கவே அப்படிச் செய்கிறது எனத் தெரிந்து கொண்டான்.கழுதைக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தான்.
அன்றும் வழக்கம்போல் கழுதையின் முதுகில் மூட்டையை ஏற்றி கொண்டு வந்தான் வியாபாரி.இம்முறை மூட்டை எப்போதும் இருப்பதை விடப பெரிதாக இருப்பதைக் கண்டு கழுதை திகைத்தது.ஆனால் முதுகில் சுமந்ததும் மகிழ்ந்தது ஏன் தெரியுமா?வழக்கம்போல் உப்பு முட்டையின் கனத்தை விட இது குறைவாக இருந்தது.
கழுதையுடன் ஆற்றில் இறங்கினான் வியாபாரி.நடு ஆற்றில் வந்தவுடன் வழக்கம் போல் நீரில் விழுந்தது கழுதை.அது தானாக எழுந்து வரட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வியாபாரி.நீரில் விழுந்த கழுதையால் எழுந்து நிற்கவே முடியவில்லை. ஏனெனில் முதுகில் மூட்டை முன்னை விடப் பலமடங்கு கனத்தது. கழுதை பெரிதாக சத்தமிட்டது தான் செய்த தவறை உணர்ந்து கொண்டது.
இந்தமுறை வியாபாரி கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டையை ஏற்றியிருந்தான்.கனம் குறைவாக இருந்தும் அது இன்னும் குறையும் என்று எண்ணி நீரில் விழுந்தது ஆனால் நீரில் நனைந்த பஞ்சு மூட்டை நீரைஉறிஞ்சி மேலும் கனமாகி விட்டது.வெகுநேரம் தடுமாறிய கழுதை எழுந்திருக்க முடியாமல் அப்படியே சோர்ந்து அமர்ந்திருந்தது.வியாபாரி மூட்டையை எடுத்துக் கழுதையை எழுப்பினான். வீடு வந்து சேர்ந்த கழுதை
நினைத்தது.
கனம் குறைந்த மூட்டை என்று தெரிந்தும் மேலும் கனத்தைக் குறைக்க ஆசைப் பட்டேன் .நான் ஏமாற்ற நினைத்தேன் ஆனால் ஏமாந்தேன்.எஜமானுக்குத் துரோகம் நினைத்தது பெரும் தவறு. இனி ஒழுங்காக இருக்க வேண்டும்
இப்போது கழுதைக்கு நல்ல புத்தி வந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
செவ்வாய், 2 ஏப்ரல், 2019
You got notification from DocuSign Electronic Signature Service
|
திங்கள், 1 ஏப்ரல், 2019
நன்மை செய்தால் நன்மை விளையும்
ஒரு பெரிய காடு .அந்தக் காட்டில் ஒரு பெரிய மரம் இருந்தது.அது ஆற்றின் கரையில் இருந்தது.அந்த ஆற்றில் ஒரு கட்டெறும்பு விழுந்து தத்தளித்தது.நீரின் வேகத்தில் அது கரையேற முடியாமல் தவித்தது.அந்தப் பெரிய மரத்தில் ஒரு புறா வந்து அமர்ந்தது.எறும்பு தவிப்பதைப் பார்த்தது.உடனே ஒரு இலையைப் பறித்துப் போட்டது.அந்த எறும்பு இலையில் ஏறித் தப்பித்துக் கரையேறியது.
அந்த ஊரில் ஒரு வேடன் வசித்து வந்தான்.அவன் ஊரின் எல்லையில் இருந்த அந்தக் காட்டுக்குச் சென்று பறவைகளையும் சிறிய மிருகங்களையும் வேட்டையாடிப் பிழைத்து வந்தான்.
ஒரு நாள் வேட்டையாடிக் களைத்துப் போனவன் காட்டின் நடுவே ஓடும் ஆற்றில் நீர் அருந்தச் சென்றான்.அப்போது புறா மரக் கிளையில் வந்து அமர்ந்தது.அதைப் பார்த்த வேடன் கையில் இருந்த வில்லில் நாண் ஏற்றினான். புறாவைக் குறி பார்த்தான்.
புறா .பயத்துடன் அமர்ந்திருந்தது.சாகப் போகிறோம் என்று நினைத்தது.திடீரென்று வேடன்"ஆ ஆஅ...அம்மா, "என்று அலறியபடியே குனிந்தான். அவன் கையிலிருந்த வில்லும் கீழே விழுந்தது.அம்பு மட்டும் பறந்து சென்று குறி தவறி மேலே பறந்து கொண்டிருந்த ஒரு கழுகைக் கொன்றது.
வேடன் காலைக் கடித்த கட்டெறும்பு ஓடிச் சென்று புற்றுக்குள் மறைந்தது. எ றும்பால் கடிபட்ட வேடன் காலைத் தடவியபடி அமர்ந்து விட்டான்.
தன்னை ஆற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய புறாவைக் காப்பாற்றிவிட்டோம் என்று எறும்பு மகிழ்ந்தது.சரியான சமயத்தில் வேடன் காலைக் கடித்து அவன் அம்பிலிருந்து காப்பாற்றிய எறும்புக்கு புறா மனதுக்குள் நன்றி சொன்னது. அத்துடன் தன்னைக் கொன்று தின்ன வட்டமிட்ட கழுகையும் வேடன் கொல்லக் காரணமாயிருந்த எறும்புக்கு நன்றி சொன்னபடி மகிழ்ச்சியுடன் பறந்தது புறா.நன்மை செய்தால் நன்மை விளையும் என்று அது தெரிந்து கொண்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
செவ்வாய், 5 மார்ச், 2019
Fwd: பாட்டி சொன்ன கதைகள்
---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Tue, 5 Mar 2019 at 17:40
Subject: பாட்டி சொன்ன கதைகள்
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Tue, 5 Mar 2019 at 17:40
Subject: பாட்டி சொன்ன கதைகள்
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>
13.விறகுவெட்டியும் வனதேவதையும்
ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தான்.அவன் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய காடு இருந்து. அந்தக் காட்டில் நிறைய பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன.
விறகுவெட்டி தினமும் அதிகாலையில் எழுந்து தன்னுடைய இரும்புக்கோடாலியை எடுத்துக் கொண்டு அந்தக் காட்டுக்குச் செல்வான். நன்றாகக் காய்ந்த மரமாகப் பார்த்து அதை வெட்டிக் கட்டாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஊருக்குள் சென்று விற்று வருவான். அந்தப் பணத்தில் அன்றுதேவையான உணவைத் தயாரித்து அவனும் அவன் மனைவியும் உண்டு வாழ்ந்து வந்தனர் . ஒருநாள் நல்ல வெய்யில் நேரம்.விறகுவெட்டி கோடாலியைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தக் காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். அவன் வெட்டுவதற்குத் தக்கபடி எந்தக் காய்ந்த மரமும் தென்படவில்லை.சூரியன் சாயத் தொடங்கியது. தேடித் கொண்டே வந்தவன் அந்தக் காட்டின் நடுவே ஓடும் பெரிய ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.
அந்த ஆற்றின் நீரை அள்ளிக் குடித்தான்.அந்த ஆற்றின்
கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது அந்தமரத்தில் இருந்த பெரிய கிளையை வெட்டத் தொடங்கினான்.
பாதிக் கிளையை வெட்டியபோது திடீரென்று அவன் கோடாலி கைநழுவி வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்தது.விறகுவெட்டி ஐயோ என அலறியவாறு நீருக்குள் இறங்கித் தேடினான். அவனுடைய கோடாலி அகப்படவே இல்லை.
என்ன செய்வான் பாவம் அங்கேயே அழுதபடி அமர்ந்து விட்டான்.வெகுநேரம் அவன் அழுது கொண்டிருப்பதை அந்தக் காட்டில் இருக்கும் வனதேவதை பார்த்தது.நீரில் இருந்து வெளியே வந்தது.வனதேவதையைப் பார்த்தவுடன் பயத்துடன் எழுந்து நின்றான்.அவனை அன்புடன் பார்த்த வனதேவதை,
"ஏனப்பா வெகு நேரமாக அழுது கொண்டிருக்கிறாய்? "என்று கேட்டது.
விறகுவெட்டியும் அழுதுகொண்டே "என் கோடாலி நீருக்குள் விழுந்துவிட்டது.அது இல்லாமல் என்னால் விறகு வெட்ட முடியாது.
இனி நான் எப்படி வாழ்வேன்?"என்றான்
அதைக் கேட்ட வனதேவதை "கவலைப் படாதே உனக்கு கோடாலிதானே வேண்டும் நான் தருகிறேன்" என்று சொல்லி நீருக்குள் மறைந்தது.
சற்று நேரத்தில் அந்தவனதேவதை ஒரு தங்கக் கோடாலியைக கையில் பிடித்தபடி வெளியே வந்தது.
"இதோ உன் கோடாலி.இதை வைத்துக் கொள் "
விறகுவெட்டி தன தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்.
"இது பொன்னால் ஆனது இதைவைத்து விறகு வெட்ட முடியாது.
மேலும் இது என்னுடையது இல்லை."
என்று சொன்னவன் மீண்டும் அழத் தொடங்கினான்.
"அழாதே இரு இதோ வருகிறேன்" என்ற வனதேவதை மீண்டும் நீருக்குள் மூழ்கியது.
சற்று நேரத்தில் வெள்ளியாலான கோடாலியைப் பிடித்தபடி வந்தது.அதையும் பார்த்த விறகுவெட்டி "இதுவும் என்னுடையது இல்லை."என்றபடி தலையை அசைத்தான்.
"கவலைப் படாதே இதோ வருகிறேன் அழாமல் இரு என்று சொல்லியபடியே வனதேவதை நீருக்குள் மூழ்கி எழுந்தது.
இப்போது அதன் கையில் ஒரு இரும்புக்கு கோடாலி இருந்தது.
அதைப் பார்த்த விறகுவெட்டி "இதுதான் என் கோடாலி." என்று மகிழ்ச்சியுடன் கூறினான்.
வனதேவதையும் அவனைப் பார்த்து,"உன்னுடைய நேர்மையைப் பாராட்டுகிறேன்.நீ பிறர் பொருளுக்கு ஆசைப் படாமல் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்."என்று கூறியபடி மூன்று கோடாலிகளையும் அவனிடம் கொடுத்தது.
"உன் நேர்மையைப் பாராட்டி இந்த மூன்று கோடாலிகளையும் உனக்குப் பரிசாக அளிக்கிறேன்.தங்கம் வெள்ளிக் கோடாலிகளை விற்று நீ செல்வந்தனாக வாழ்வாயாக.உனக்கு என் நல்வாழ்த்துக்கள்."என்று கூறி மறைந்தது.
நேர்மைக்கு கிடைத்த பரிசுகளை ப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு நோக்கி நடந்தான் விறகுவெட்டி.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019
Fwd: பாட்டி சொன்ன கதைகள்.
---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 16 Feb 2019 at 12:43
Subject: பாட்டி சொன்ன கதைகள்.
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 16 Feb 2019 at 12:43
Subject: பாட்டி சொன்ன கதைகள்.
To: rukmani seshasayee <rukmani68sayee@gmail.com>
11.குல்லாய் வியாபாரியும் குங்குகளும்.
ஒரு ஊரில் ஒரு குல்லாய் வியாபாரி இருந்தான்.குலாம் என்று அவனுக்குப் பெயர்.அவன் தினமும் குல்லாய்களைத் தைப்பான். தைத்த குல்லாய்களை ஒரு மூட்டையாய்க் கட்டிக்கொண்டு பக்கத்து ஊர்களுக்கெல்லாம் கொண்டு போய் விற்றுவிட்டு இரவில் ஊர் திரும்புவான்.
ஒரு நாள் குல்லாய்களை மூட்டையாய்க் கட்டிக் கொண்டு
ஊருக்குள் தெருக்களில் அலைந்தான். ஊருக்குள் யாரும் வாங்காததால் வழக்கம்போல் பக்கத்து ஊருக்குச் செல்ல எண்ணினான். அப்போது நல்ல வெய்யில் அடித்தது.குலாமுக்கு உடல் முழுவதும் வியர்த்து வழிந்தது.மிகவும் களைத்து விட்டான்.
வழியில் ஒரு பெரிய ஆலமரம் கிளைகளை பரப்பிக் கொண்டு மிகுந்த நிழலைக் கொடுத்தபடி நின்றிருந்தது.
அந்த நிழலில் தன மூட்டையை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.சற்று நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றியது. குளிர்ந்த ஆலமர நிழலும் இதமான காற்றும் அவனை சுகமாகத் தூங்க வைத்தது. தன மூட்டையைத் தலைக்கு வைத்தபடி அயர்ந்து உறங்கிப்போனான் குலாம்
வெகுநேரம் கழித்துக் கண்களைத் திறந்த குலாம் திடுக்கிட்டான். அவன் தலைக்கடியில் இருந்த குல்லாய் மூட்டை காலியாக இருந்தது.யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி ப் பார்த்தான்.யாரையும் காணவில்லை.தலையில் கையை வைத்தபடி மரத்தின் வேர்மீது அமர்ந்துவிட்டான்.
திடீரென்று மரத்தின் மேலிருந்து கீச்கீச்சென்று சத்தம் வருவதைக் கேட்டான் மரக்கிளை வேகமாக அசைவதையும் பார்த்தான் மரத்தின் மீது நிறைய குரங்குகள் அமர்ந்துகொண்டும் அங்குமிங்கும் அலைந்து கொண்டும் இருந்தன.அவற்றின் தலையில் தன்னுடைய குல்லாய்கள் அலங்கரித்தபடி இருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டான்.
குலாமுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தன தலையிலிருந்த குல்லாயைக் கையில் எடுத்துத் தன தலையைச் சொரிந்து கொண்டான்.சில குரங்குகள் அதேபோலக் குல்லாயைக் கையில் வைத்துக் கொண்டன.அதைப் பார்த்த குலாமுக்கு மனவேதனையிலும் சிரிப்பு வந்தது.
என்ன செய்வது என்று தோன்றாமல் அமர்ந்திருந்தான் சற்று நேரம் கழித்து மீண்டும் எழுந்து இங்குமங்கும் நடந்தான். கைகளைப் பிசைந்து கொண்டான்.
குரங்குகளும் அசைவதைப் பார்த்தான்.சற்று நேரம் கழித்துத்தான்
அவைகள் தான் செய்வதைப் போலச் செய்வதைக் கண்டான்.
தொடர்ந்து பலவிதமாகச் செயல்களை செயது காட்டினான்.குரங்குகளும் அவன் செய்வதைப் போலச் செய்தன.
கடைசியில் தன தலையில் இருந்த குல்லாயைத் தரையில் எறிந்தான்.எல்லா குரங்குகளும் குல்லாயைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு சுழற்றிவிட்டு மீண்டும் தலையில் வைத்துக் கொண்டன.குலாம் திகைத்தான்.
"நம்மைப் போலக் குரங்குகள் குல்லாயைத் தரையில் எறிந்து விடும் என்று தாத்தா சொன்னாரே, ஆனால் இவை அப்படிச் செய்யவில்லையே"என்றபடி சிந்தித்தான்.
ஒரு பெரிய குரங்கு அருகில் இருந்த கிளைக்குத் தாவி அமர்ந்தது.
"என்ன, குல்லாய் வியாபாரி, நாங்கள் எல்லாரும் குல்லாயைக் கீழே போடவில்லையே என்று பார்க்கிறாயா?என் பாட்டனார் சொல்லியிருக்கிறார். அவர் செய்தது போல நாங்களும் செய்யமாட்டோம்.நாங்கள் ஏமாற மாட்டோம்."
குரங்கு சொன்னதைக் கேட்டுகுலாம் திகைத்து நின்று விட்டான்.
அவன் கண்களில் நீர் ததும்பியது.பலநாள் உழைப்பில் தயாரான குல்லாய்கள் எல்லாம் போய்விட்டதே இந்த நஷ்டத்தை எப்படி சரி செய்வது/ என்று வருத்தத்துடன் மீண்டும் பெரிய வேரின் மீது அமர்ந்து கொண்டான். அவன் நிலையைப் பார்த்த எல்லாக் குரங்குகளும் கீச் கீச்சென்று கத்திக் கொண்டே அருகில் வந்தன.பெரிய குரங்கு அவன் அருகே அமர்ந்தது.அவன் கையைப் பிடித்து அவன் கையில் குல்லாயை வைத்தது. எல்லாக் குரங்குகளும் அவன் மூட்டையில் குல்லாய்களைப் போட்டன.
"வியாபாரியே , கவலைப் படாதே.உன் குல்லாய்களை எடுத்துச் செல். நாங்கள் ஏமாந்து போனதாக எண்ணாதே.உன்மீது இரக்கம் கொண்டு உன் குல்லாய்களைத் திருப்பிக் கொடுக்கிறோம்.நாங்கள் உங்கள் நண்பர்கள் என்று எண்ணிக் கொள் சென்று வா."என்றதும் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட குலாம் மகிழ்ச்சியுடன் சிரித்தபடி குல்லாய்களை மூட்டையாகக் கட்டினான்.
"மிக்க நன்றி உண்மையாகவே நீங்ககள் என் நண்பர்கள்தான். உங்கள் உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன். வருகிறேன்."என்றபடி மூட்டையைச் சுமந்தபடி ஊருக்குள் நுழைந்தான்.
----------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
வியாழன், 31 ஜனவரி, 2019
பாட்டி சொன்ன கதை.10-சிங்கமும் மாடுகளும்.
ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் நான்கு மாடுகள் இருந்தன.அந்த விவசாயி வேலை ஏதும் இல்லாதபோது மாடுகளை வெளியே மேய்ச்சலுக்கு ஓட்டி விடுவான்.அந்த மாடுகளும் உல்லாசமாக நிலபுலன்களில் மேயும் அவை நமது எஜமான் சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்று அவைகள் நான்கும் பேசிக்கொண்டு மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் நான்கு மாடுகளும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது திடீரென்று ஒரு கர்ஜனை கேட்டது.மாடுகள் திடுக்கிட்டு.திகைத்து நின்றன.என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நின்றன.
ஒரு நாள் நான்கு மாடுகளும் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது திடீரென்று ஒரு கர்ஜனை கேட்டது.மாடுகள் திடுக்கிட்டு.திகைத்து நின்றன.என்ன செய்வது என்று தெரியாமல் பயத்துடன் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு நின்றன.
மாடுகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு புதரிலிருந்து பெரிய சிங்கம் ஒன்று வெளியே வந்தது.மெதுவாக மாடுகளைப் பார்த்து நடந்து வந்தது சிங்கம் அருகே வந்தவுடன் மாடுகள் பெரிய கொம்புகளால் மாற்றி மாற்றி சிங்கத்தை முட்டித் தள்ளின.இதை சற்றும் எதிர்பாராத சிங்கம் உடலில் காயத்துடன் ஓடியது மாடுகள் நான்கும் சீரிப் பாய்ந்து வரவே சிங்கம் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தது
மாடுகள் நான்கும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.நமக்கென்ன பயம் சிங்கம்தான் நம்மைப் பார்த்து பயந்து ஓடிவிட்டதே இனி அது நம்மிடம் வராது. என்று பேசிக்கொண்டன.
சிங்கம் உடலில் கொம்பு முட்டிய காயத்துடன் களைப்புடன் குகை வாயிலில் படுத்திருந்தது.அப்போது அங்கே நரி வரவே சிங்கம் அதை அழைத்தது.
நரி பயத்துடன் சிங்கத்தின் முன்னே சென்று நின்றது.அதன் உடலில் காயத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரிய பட்டது.சிங்கத்திற்கே இந்த கதியா என்றும் நரி யோசித்தது.
அப்போதுதான் சிங்கம் நடந்தைச் சொல்லி எப்படியாவது அந்த மாடுகளை என் பற்களால் கடித்துக் குதறவேண்டும் என்னையே எல்லாமாகசேர்ந்து கொண்டு காயப் படுத்திவிட்டன என்று கோபத்துடன் கர்ஜித்தது.
யோசித்த நரி தனக்கும் அந்த மாடுகளைத் தின்ன நல்ல சந்தர்ப்பம் என்று சந்தோஷமாக நினைத்ததுசிங்கத்திடம்,".நான் சொல்லும்போது நீங்கள் வந்து மாடுகளைக் கொல்லலாம்"
என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.
இரண்டு நாட்கள் சென்றன நரி மெதுவாக மாடுகள் மேயும் இடத்திற்கு வந்து அவற்றுடன் நட்புடன் பேசியது.
"நான் இப்போது காய் கனி இலைகளைத்தான் சாப்பிடுகிறேன்.எந்த உயிரையும் சாப்பிடுவதில்லை.உங்களில் ஒருவனாக நட்புடன் இருக்கவே விரும்புகிறேன்"கண்களில் நீருடன்
நரி பேசியதை மாடுகள் நம்பிவிட்டன.
மேலும் இரண்டு நாட்கள் சென்றன.நரி இரண்டுமாடுகள் தனியே மேயும்போது மெதுவாக அருகே சென்று "உங்கள் இருவரையும்
சுயநலம் மிக்கவர்கள் என்கின்றன. நிறைய புல் இருக்கும் இடத்தை நீங்கள் மட்டும் மேய்வதாகச் சொல்கின்றன."என்றது.இதைக்
கேட்டவை இரண்டும் இனி தனியாகவே மேய்வோம் என்று பேசிக் கொண்டன.
மேலும் இரண்டு நாட்கள் சென்றன.இதே தந்திரத்தை மற்ற இரு மாடுகளிடம் கையாண்டது நரி .அடுத்தடுத்த நாட்களில் நான்கு மாடுகளும் தனித்தனியே மேயத் தொடங்கின.
இதே நேரம் நரி சிங்கத்திடம் இப்போது மாடுகளைக கொல்வது எளிது. என்று சொல்லிக் கொண்டிருந்தது.அப்போது அங்கே வந்த ஒரு முயல், நரி சொல்வதைக் கேட்டது.உடனே அந்த முயல் நான்கு கால் பாய்ச்சலில் ஓடி புல்லை மேயும் வயல் வெளிக்கு வந்தது.காட்டின் எல்லையில் ஒரு மாடும் வயலின் நடுவே ஒரு மாடும் மேய்வதைப் பார்த்து அருகே சென்றது "நீங்கள் நான்கு பெரும் தனித்தனியாகி
மேய்வதால் உங்களைக் கொல்ல சிங்கத்தை அந்த நரி
அழைத்து வருகிறது.எப்படியாவது தப்பித்துக் கொள்ளுங்கள் "
என்று சொல்லிவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.தனியே மேயும் இரண்டு மாடுகளும் சேர்ந்து வயலுக்குள் ஓடி மற்ற இரு மாடுகளுடன் சேர்ந்து கொண்டன.அவை நான்கும் இப்போது நரியின் தந்திரத்தை ஒன்றோடொன்று பேசிப் புரிந்து கொண்டன.
அந்த நரியோ சிங்கமோ வரட்டும் என்று காத்திருந்தன.
சற்று நேரத்த்தில் நரி பின்னால் தொடர்நது வர சிங்கம் கோபமாக உறு மியபடி வீர நடை போட்டு வந்தது.திடீரென்று சிங்கம் எதிர்பார்க்காத படி நான்கு மாடுகளும் ஒன்றாக இணைந்து முட்டித் தள்ளவே தடுமாறிய சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. விட்டால் போதும் என்று பாய்ந்து காட்டுக்குள் ஓடியே போய்விட்டது.
சிங்கமே ஓடுகிறது நம் கதி என்னவாகும் என்று ஒளிந்திருந்த நரியும் ஓடி ஒளிந்தது.
"நாம் நால்வரும் இனி எக்காரணத்தைக் கொண்டும் பிரியக் கூடாது. ஒன்றாக இருந்ததால் தான் உயிர்பிழைத்தோம் இனி ஒற்றுமையாக இருப்போம் என்று பேசிக்கொண்டே மாலையாகிவிட்டதால் வீட்டுக்குப் புறப்பட்டன. "
"ஆமாம் நரியைப் போல யாரேனும் இடையில் வந்து நண்பர்களை பற்றி என்ன சொன்னாலும் நம்பக கூடாது."
ஆமாம் ஆமாம் என்பது போல கழுத்துமணி அசைய நான்கு மாடுகளும் வீடு வந்து சேர்ந்தன .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
புதன், 9 ஜனவரி, 2019
பாட்டி சொன்ன கதை -9.வண்ணம் மாறிய குள்ள நரி
ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்தன.அங்கு ஒரு குள்ளநரியும் வசித்து வந்தது. அதற்கு அந்தக் காட்டிலிருக்கும் சிங்கத்தைப் பார்த்து மிகவும் பொறாமையாக இருந்தது.அது அந்தக் காட்டுக்கு அரசனாக இருப்பதைப் பார்த்துத் தானும் அரசனாக ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டது.
ஒருநாள் குள்ளநரி ஒரு புலியின் கண்களில் படவே அதற்குப் பயந்து வேகமாக ஓட ஆரம்பித்தது.ஓடும் அந்த நரியைப்பின்தொடர்ந்து வேறு சில மிருகங்களும் புலிக்குப் பயந்து ஓடத தொடங்கின. அதைப் பார்த்த நரி எல்லா மிருகங்களும் தன்னைத் துரத்துவதாக எண்ணி இன்னும் வேகமாக ஓடிற்று.எப்படித் தப்பிப்பது என்று எண்ணிக் கொண்டே ஊரின் எல்லைக்கு வந்து விட்டது.
அங்கே ஒரு வீட்டின் மதில் சுவர் சற்றுக் குட்டையாய் இருக்கவே அதன் மீது ஏறி உள்ளே குதித்தது.அங்கே இருந்த பெரிய தொட்டி நீருக்குள் விழுந்தது.சிறிது நேரம் தத்தளித்த நரி மெதுவாக மேலே வந்தது.அதற்குள் இருள் விலகி வெளிச்சம் பரவத் தொடங்கியது.தன உடல் முழுவதும் நீல நிறமாக இருப்பது கண்டு ஆச்சரிய பட்டது. தான்விழுந்தது ஒரு சாயம் தோய்க்கும் இடம் என்பதும் நீலநிறச் சாயத தொட்டிக்குள் தான் விழுந்து எழுந்ததும் புரிந்தது.நரிக்கு ஒரு உபாயம் தோன்றியது.
வேகமாக அந்த மதில் சுவரைத் தாண்டி காட்டுக்குள் நுழைந்தது.இரவு வரும் வரை மறைந்திருந்தது. திடீரென்று நரிக்கூட்டத்தின் முன் வந்து கம்பீரமாக நின்றது.அதைப் பார்த்த மற்ற விலங்குகள் பயந்து நடுங்கின. புதுமையான விலங்காக இருக்கிறதே என்று அடங்கிப் பணிவாக நின்றன.
"எல்லாரும் கவனமாகக் கேளுங்கள்.நான் உங்களுக்கெல்லாம் அரசனாக கடவுளால் அனுப்பப் பட்டவன்.நீங்கள் எல்லோரும் எனக்கு கீழ்ப் படிந்து நடக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களை நான் சபித்து விடுவேன்"
அதிகாரத்துடன் கூறிய நீல நரியைப் பார்த்துப் பயந்த மற்ற விலங்குகள் பணிந்து அகன்றன.சற்று நேரத்தில் சிங்கம் நீலநரி யிடம் வந்து நின்றது.
"ராஜாவே, இந்த நாட்டுக்குப் பழைய ராஜாவாகிய சிங்கராஜா, வணங்குகிறேன்.நீங்கள் எங்களுக்குக கடவுளால் அனுப்பப்பட்டவர். நாங்கள் எல்லாம் தங்களின் அடிமைகள் கட்டளையிடுங்கள்."என்று பணிவுடன் கூறி வணங்கி நின்றது.
"ஏ சிங்கமே, நீ இந்தக் காட்டில் யார் கண்ணிலும் படாமல் உன் குகைக்குள்ளேயே மறைந்து இருக்க வேண்டும்.நான் கட்டளையிட்டால்தான் வெளியே வரவேண்டும்."என்றது அதிகாரமாக.சிங்கமும் பணிந்து சென்றது.நீலநரிக்குப் படு குஷியாகிவிட்டது.லாலா என்று பாடியபடியே அது சிலநாட்கள்
காட்டைச் சுற்றி வந்தது.
ஒருசில நாட்களிலேயே மழைக்காலம் வந்தது.ஒருநாள் மாலைநேரம் நீலநரி கர்வத்துடன் ஒரு வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்தது. அப்போது சில நரிகள் கூட்டமாக நின்று ஊளையிடத தொடங்கின.அப்போது மழையும் பலமாகப் பெய்யத தொடங்கிற்று நீலநரிக்கு ஓதுங்கக் கூட இடமில்லை.
மழையில் நனைந்ததால் நரியின் நீல நிறம் கரைந்து ஓடியது.
இப்போது தன பழைய நிறத்தை அடைந்த நரியும் எல்லாநரிகளுடனும்கூடி ஊளையிடத் தொடங்கிற்று.பலநாட்களாக அடைத்து வைத்திருந்த தன ஆசையெல்லாம் கொட்டி அழகாக ஆனந்தமாக ஊளையிட்டது.
இதைப் பார்த்த மற்ற நரிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் அப்போதுதான் இது ஒரு நரி நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டது எனபது தெரிந்தது. எல்லா விலங்குகளும் சீரிக் கொண்டு ஓடிவந்தன
சிங்கராஜா கோபமாக கர்ஜித்தது. தன நிலையறிந்து அந்தக் குள்ள நரி ஒரே ஓட்டமாக ஓடத தொடங்கியது.
அந்த நீல மாயிருந்த நரி இப்போது அந்தக் காட்டைவிட்டு வேறு காட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாயிற்று என்று சொல்லிக் கொண்டே ஓடிற்று.வெகுதூரம் சென்று திரும்பிப் பார்த்தது.
இப்போது எந்த விலங்கும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டது அந்த நரி. சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டே சிந்தித்தது.என் ஆசை நிறைவேறிற்று.
காட்டுராஜாவாகச் சிலநாட்கள் அந்தக் காட்டில் உலாவந்தேன்
அதுபோதும் . என்று தனக்குள் புன்னகைத்துக் கொண்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
ஞாயிறு, 30 டிசம்பர், 2018
பாட்டி சொன்ன கதைகள் -நரியும் கொக்கும்
ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது.அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் இருந்தன. எல்லா விலங்குகளும் அந்தக
குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்து போகும்.அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்ததால் பறவைகளும் நிறைய வந்து மீனைக் கொத்திச் செல்லும்.
அந்தக் காட்டுக்கு ஒரு பெரிய கொக்கு வந்து ஒரு காலில் நின்று மீனுக்காகக் காத்திருந்தது.நிறைய சின்ன மீன்களைப் போக விட்டு விட்டுப் பெரியமீனுக்காகக் காத்திருந்தது.அந்த சமயம் ஒரு நரி தண்ணீர் குடிப்பதற்காக அந்தக் குளத்தருகே வந்தது .தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தது அங்கு ஒரு பாறையின் மேல் கொக்கு கண்களைமூடித் தவம் செய்வது போல் நின்றிருந்தது.
அதைப் பார்த்த நரிக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
அது கொக்கைப் பார்த்துக் கேட்டது.
"கொக்காரே, உம்மைப்பார்த்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.என் வீட்டில் உமக்கு விருந்து வைக்க எண்ணுகிறேன்.
தவறாமல் வாருங்கள்."
சற்றே கண்ணைத் திறந்து பார்த்த கொக்கு,,"உமது நல்ல குணத்துக்கு மிகவும் மகிழ்ச்சி.கட்டாயம் வருகிறேன்"என்றது. ஆனால் மனதுக்குள் இந்த நரி எல்லாரையும் ஏமாற்றுகிறதே.இதை நாம் பழிவாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டது.
"நாளைக்கே என் வீட்டுக்கு வாருங்கள் கொக்காரே."என்றது நரி
"முதலில் என் வீட்டுக்கு வாருங்கள் நரியாரே,. அடுத்த நாள் உங்கள் வீட்டுக்கு நான் வருகிறேன்."
"ஆஹா, அப்படியே நாளைக்கே வருகிறேன்"நரி மகிழ்ச்சியோடு சென்றது
மறுநாள் சொன்னபடியே நரி அந்தக் குளத்தின் கரையில் காத்திருந்தது.நீண்ட கால்களை வீசிப் போட்டு அங்கே வந்தது.கொக்கு
"வாருங்கள் நரியாரே போகலாம்"என்று தன இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது அங்கே போனபின்னர் நரிக்குத் திகைப்பு ஏற்பட்டது . இரண்டு நீண்ட மூக்கு ஜாடியில் பாயசம் இருந்தது. கொக்கு தன மூக்கை உள்ளே விட்டு பாயாசத்தைக் குடித்தது.நரி குடிக்க முடியாமல் திகைத்ததைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நகைத்தது. நரியாரும் அமைதியாக "கொக்காரே, நீங்கள் நாளைக்கே என் வீட்டுக்கு விருந்துக்கு வரவேண்டும். என்றதும் கொக்கு மகிழ்ச்சியுடன் சரி வருகிறேன் என்றதுடன்,
நரியாரே பாயசம் எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? என்றது கிண்டலாக.
"ஆமாம், ஆமாமரொம்ப ஜோராக இருக்கிறது."என்றபடியே விடை பெற்றது நரி.
நரியை ஏமாற்றியதை எல்லாவிலங்குகளிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது கொக்கு.
மறுநாள் கொக்கு மிகவும் ஆவலுடன் நரியின் இருப்பிடம் சென்றது." வாருங்கள் கொக்காரே,என்று வரவேற்றதுடன் அங்கே இருந்த விருந்தைக் காட்டி பாருங்கள் உங்களுக்காக நானே இனிப்பான பாயசம் தயாரித்துள்ளேன் எனக்கு நாக்கில் நீர் ஊறுகிறது.சாப்பிடலாம்."என்று முன்னே தட்டில் இருந்து பாயசத்தை நக்கி நக்கிக் குடிக்க ஆரம்பித்தது.
பெரிய தட்டில் இருந்த பாயாசத்தைக் குடிக்க முடியாமல் கொக்கு திகைத்து நின்றது.ஆனால் நரியோ வேகவேகமாக தட்டில் இருந்த பாயசத்தை குடிக்க அதைப் பரிதாபமாகப் பார்த்தபடியே தலை குனிந்து நின்றது கொக்கு.
தான் நரியை ஏமாற்றியதாக எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டதை எண்ணி இப்போது வருத்தப் பட்டது கொக்கு
அப்போது நரி "கொக்காரே, என்னை விருந்துக்கு அழைத்து நீர் அவமானப் படுத்தினீர் அதற்காகவே நானும் இப்படி செய்தேன்.
வருத்தப் படாதீர்கள். செய்த தவறை எண்ணி வருந்துகிறீர்கள் என்று தெரிகிறது.இந்தாருங்கள் சாப்பிடுங்கள்"என்றபடியே மறைவிலிருந்து ஒரு நீண்ட மூக்கு ஜாடியைக் கொடுத்தது. அதில் இருந்த பாயசத்தை கொக்கு அருந்தி மகிழ்ந்தது." நரியாரே , நீர் மிகவும் நல்லவர். தெரியாமல் நான் செய்த தவறை மன்னியுங்கள் இனி நாம் நண்பர்கள்."
நரியாரும் மிகவும் சந்தோஷம் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பியது.பாயசம் குடித்த மகிழ்ச்சியில் நீண்ட தன காலை வீசிப் போட்டு குளத்தை நோக்கி நடந்தது கொக்கு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
