வியாழன், 5 டிசம்பர், 2019

குறள் வழிக்கதைகள்

குறள் --"எனைத்தானும்  நல்லவை கேட்க அனைத்தானும் 
                ஆன்ற பெருமை தரும் "
                            ராசாத்தி சமையல்செய்துகொண்டிருந்தாள்.அப்போது அவள்மகன்     அகிலன்  வேகம் வேகமாக குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தான்.அப்போது அவன் தந்தை ராஜவேலு  உரக்க அழைத்தார்.
"அகிலா, குளித்தாயிற்றா?வா அம்மாவைக் கூப்பிடு.நேரமாகுது பார்"
   அகிலன் வெறுப்புடன் முணுமுணுத்தான்.
ராஜாத்தியும், 'வாடா, உங்கப்பாவுக்குக் கோவம் வரப்போகுது "
என்றபடியே அடுப்பை  அணைத்துவிட்டு ராஜவேலு முன்னால்  வந்து அமர்ந்தாள் .
     அகிலனும் உம்மென்ற முகத்துடன் வந்து அவர்முன் அமர்ந்தான்.
புன்னகை மாறாத முகத்துடன் "அகிலா, நேத்து படிச்ச திருவாசகத்தை ச் சொல்லு"என்றபடியே திருவாசகம் நூலைப் பிரித்தார்.
தட்டுத் தடுமாறி யபடி "அம்மையே  அப்பா "என்று தொடங்கி இசையுடன் சொல்வதைக் கேட்டுத தலையசைத்தார்.
 ராசாத்தியையும் உடன் பாடச்  சொன்னார்.
அவர்கள் பாடிமுடித்தவுடன் அடுத்தபாடலைக் கூறலானார்.
அதைத் தொடர்ந்து ராசாத்தியும் அகிலனும் பாடினர்.அரைமணிநேரம் ஆனதும் கற்பூரம் காட்ட ராசாத்தியும் அகிலனும் அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டனர் 
அவர் கொடுத்த ஒரு வாழைப் பழத்தைப் பெற்றுக் கொண்டவன் வேகமாக வெளியே சென்றான் அவனைத் தொடர்ந்து ராசாத்தியும் சமையலறைக்குள் நுழைந்தாள் 
அவளை பின்பற்றிய அகிலன் "ஏம்மா, அப்பா இப்படி தினமும் போரடிக்கிறாரு .இந்தப் பாட்டுகளைப் படிக்காட்டி என்ன?"
என்று அம்மாவின் காதைக் கடித்தான்.
அதைக் கேட்டபடி வந்த ராஜவேலு,"இந்த வயசிலே நல்ல விஷயங்களைக்  கத்துக்கணும் கடவுளை பற்றிய அறிவும் நமக்கு வேணும் அகிலா.இதுதான் காலத்துக்கும் நமக்குத் துணை நிக்கும்."
என்றார்.
ராசத்தியும் "சரி சரி இந்தா சாப்பிட்டுப்புட்டு ஸ்கூலுக்குப்புறப்படு " என்றபடி இட்டிலிகளைத் தட்டில் வைத்தாள் 
                  ராஜவேலுவுக்கு இறைபக்தி அதிகம்.தினமும் பூஜை செய்வதையும் தேவாரம் திருவாசகம் பாடல்களை இசையோடு பாடுவதையும் வழக்கமாகக்  கொண்டிருந்தார்.தன்னுடன் தன மனைவியையும் மகனையும் சேர்ந்து பாடச்  சொல்வார்.
ராசாத்திக்கு என்ன வேலை இருந்தாலும் அதை  நிறுத்தி விட்டு     பூஜை நேரம் வந்து அமர்ந்து விட வேண்டும்.  
தினமும் பதிகங்களைக் கேட்டுக் கேட்டு ராசாத்திக்கும் அகிலனுக்கும் மனப்பாடமாகி விட்டது.
                  அன்று பள்ளிக்கூடத்தில திடீரென அதிகாரி வந்து விட்டார்.பள்ளிக்கூடமே அமர்க்களமாக இருந்தது.ஆசிரியர்கள் அங்குமிங்குமாக சென்று மாணவர்களை சீர்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.தலைமை ஆசிரியர் பிற்பகலில் மாணவர்களை கூட்டி 
  அமரச்சொன்னார்.அந்தக் கூட்டத்தில் அதிகாரியும் தலைமை ஆசிரியரும்வந்து அமர்ந்தனர்.சலசலவென்று பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் .அமைதியாயினர்.அதிகாரி தலைமை ஆசிரியரிடம் ஏதோ கூறினார்.அவரும் தமிழ் ஆசிரியரிடம் காதில் கூறினார். தமிழாசிரியர் கையைப் பிசைந்து கொண்டார்.ஒரு நிமிடம் இரண்டு மூன்று ஆசிரியர்கள் கூடிப்பேசினர்.
அவர்கள் பேசியது அங்கே அமர்ந்திருந்த அகிலனின் காதில் விழுந்தது.சற்றே தயங்கியவன்  எழுந்து .நின்றான்.என்ன என்பது போல் ஆசிரியர் பார்த்தார்.
"அய்யா,  நான் பாடுகிறேன் ஐயா "என்றான் மெதுவாக."
மிக்க மகிழ்ச்சியுடன் அவனைப் பற்றி இழுத்துக் கொண்டு மேடைக்குப் போனார் அவன் வகுப்புத் தமிழாசிரியர்.
ஒலிபெருக்கி முன் சென்று நின்று "அம்மையே அப்பா" என்று தொடங்கி இசையோடு பாடி முடித்தான்.வந்திருந்த அதிகாரி மகிழ்ச்சியுடன் தலையை அசைத்து ரசித்தார்.தனக்குப் போர்த்திய பொன்னாடையை அகிலனுக்குப் போர்த்தி அவன் முதுகில் சபாஷ் என்று தட்டிக் கொடுத்தார்.மேடையை வீட்டுக் கீழே இறங்கியபோது  அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
           தமிழாசிரியரும் இன்னும் இரண்டு மூன்று ஆசிரியர்களும் அவனைத் தட்டிக் கொடுத்தபோது பெருமையில் பூரித்துப் போனான் அகிலன்.
  வீட்டுக்கு ஓடிவந்தவன் அம்மா என்று கூவியபடியே உள்ளே வந்தான்.அம்மாவைப் பார்த்து இன்னைக்கு ...என்றவனை இடைமறித்தாள் ராசாத்தி."நீ வருமுன்னயே செய்தி எனக்கு வந்துடிச்சி ..நல்லா பாடுனியாமே ரொம்ப .சந்தோஷமா இருக்குப்பா."
தன பையிலிருந்த பொன்னாடையை எடுத்த அம்மாவின் மீது போர்த்தினான் அகிலன்.
           அப்போது உள்ளே நுழைந்த ராஜவேலு,"என்ன அகிலா, பள்ளிக்கூடத்துல திருவாசகம் பாடினியாமே.உங்க வாத்தியாரைப் பார்த்தேன்.அதிகாரி ரொம்ப பக்திமானாம் அவரு பிள்ளைகளை திருவாசகம் பாடச்  சொல்லிக் கேட்டாராம். அப்பதான் நீயாவே பாடறேன்னு சொன்னியாமே.ரொம்ப சந்தோஷப பட்டாரு."
"ஆமாப்ப்பா, எனக்கு பொன்னாடையே போர்த்தி அதிகாரி தட்டிக் கொடுத்தாருப்பா.வாத்தியாக்குங்க கூட  பாராட்டினாங்கப்பா."
"பார்த்தியா நல்ல விஷயம் அப்படீன்னு நான் சொன்னேனில்லையா  அதுதான் உனக்கு இவ்வளவு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கு.இதைத்தான் வள்ளுவரும் சொல்லியிருக்காரு.'
"அது என்னங்க வள்ளுவர் சொன்னது?"
                  "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
                  ஆன்ற பெருமை தரும்"

"அப்படீன்னா?"
"அதாவது எவ்வளவு நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவு  
பெருமையும் கவுரவமும் கிடைக்கும்.இப்போ எவ்வளவு பெருமை கிடைச்சிருக்கு.பார்த்தியா?"
"ஆமாம்ப்பா, எனக்கு இப்போதான் புரியுதுப்பா."
  மறுநாள் காலையில் மகிழ்ச்சியுடன் பூஜைக்கு வந்து அமர்ந்தான் அகிலன்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

ஞாயிறு, 27 அக்டோபர், 2019

அறிவிப்பு

அன்புத் தோழமைகளே,
சில மாதங்களாக  தளத்தைப் பார்க்க  இயலாமலிருந்தேன்.
இப்போது மீண்டும் வந்துள்ளேன் முதலில் துவைத மதப் பெரியோராகிய மதுவாச்சாரியாரின் கதையை நாடகமாக்கித் தந்துள்ளேன்.என்பின்னே தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.அன்புடன் 
ருக்மணி சேஷசாயி 
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

வெள்ளி, 18 அக்டோபர், 2019

Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:54 PM
Subject: Fwd: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Mon, 6 Feb 2017 at 12:26
Subject: Re: மத்வாச்சாரியார்.-(தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


வணக்கம்.இந்த பகுதி வந்து சேர்ந்த உடன் எனக்குத் தெரிய படுத்தவும்.

2017-01-28 11:45 GMT+05:30 Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>:
                                       காட்சி---14                      

(மத்வாச்சாரியார் அமர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறார்.அங்கு பத்மநாபர் வருகிறார்.)
பத்மநாபர்;ஸ்வாமி,தாங்கள் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நூல் எதைப் பற்றியது என நான் தெரிந்து கொள்ளலாமா ஸ்வாமி?

மதவாச்சாரியார்;(புன்னகையுடன்)இதுவா, நாம் வடநாடு யாத்திரை சென்றிருந்த போது திரிவிக்ரம பண்டிதருடன் தொடர்ந்து வாதிட்டோமல்லவா?அப்போது அவர் வேண்டுகோள் விடுத்தார்,

பத்மநாபர்;ஆ...ஆமாம்,ஆமாம். அனுவ்யாக்யானம் என்ற  ப்ரம்ம 
சூத்திரத்துக்கு விளக்கவுரை எழுதக் கேட்டுக் கொண்டாரே , அந்த 
நூலா, ஆஹா.
மத்வர்;(புன்னகையுடன் தலையசைத்து) ஆமாம் அதுவேதான்.
இதோ முடித்து விட்டேன்.இந்தா, மஹாபாரத தாத்பர்ய நிர்ணய,
கீதாபாஷ்யம், உபநிஷத் விளக்கம், இவற்றோடு இதையும் சேர்த்து 
உடுப்பி  கிருஷ்ணரின் பாதத்தில் வைத்துவிட்டு வா.
பத்மநாபர்;ஸ்வாமி, தாங்கள் எழுதிய இந்த 37 நூல்களையும் சர்வமூல என்று அழைக்கலாமல்லவா ஸ்வாமி? 
மத்வர்;(அதே புன்னகையுடன்)ம்..ம்..
சரி.சீடர்கள் காத்திருப்பார்கள். சீக்கிரம் அனந்தேஸ்வரர் ஆலய மண்டபம் வந்து சேர்.
பத்மநாபர்;அப்படியே ஸ்வாமி.
(போகிறார்கள்)
                                        காட்சி---15 

(மேடையில் மத்வர் அமர்ந்திருக்க சீடர்கள் நிற்கிறார்கள் கையை உயர்த்தி ஆசிவழங்கிய மத்வர் மறைகிறார்.அங்கு மலர்மாரி பொழிகிறது.
சீடர்கள்;(பதறியபடி)ஸ்வாமி, குருவே, குருவே, எங்கே இங்குதான் இருந்தார். மறைந்து விட்டாரே மலருக்குள் தேடியபடி குருவே.
நமது குரு ஸ்ரீகிருஷ்ணரின் திருவடியை அடைந்துவிட்டார்.
எல்லோரும் ஹரிசர்வோத்தமா, வாயு ஜீவோத்தமா  என கூவுகின்றனர்.
                                 
                            ( நிறைவடைந்தது.)














--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 



--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:55 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்.
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 20:24
Subject: மத்துவாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>


                                           காட்சி---13

(ஆனந்ததீர்த்தர் அமர்ந்திருக்க எதிரே ஸ்ரீகிருஷ்ணா விகரகம் புன்னகையுடன் திகழ்கிறது.அர்ச்சனை செய்கிறார்.சீடர்கள்  கைகுவித்து நிற்கிறார்கள்.பூஜை முடிந்து அனைவருக்கும் தீர்த்தம் தருகிறார்)
ஆ.தீ ;பத்மநாபா,என்ன சிந்தனை?உன் கவனம் எங்கேயோ இருப்பது போலத்  தெரிகிறதே!

பத்மநாபர்;ஆம் ஸ்வாமி,ஷோபனா பட்டராயிருந்த அடியேனையும் சாமாசாஸ்திரியாயிருந்த நரஹரிதீர்த்தரையும் வாதில் வென்று தங்களின் சீடர்களாக்கி அனுகிரகம் செய்துள்ளீர்கள்.துவைத மத ஸ்தாபகரான தங்களை மத்வர் என்று அழைக்கலாமென்ற எண்ணம்தான். துவைத  சித்திதாந்தத்திற்கு மத்வமதம் என்றே சொல்லலாமென சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
ஆ.தீ;உன் விருப்பப்படியே ஆகட்டுமே (புன்னகையுடன் ஆசி வழங்க)
பத்மநாபர்;ஸ்ரீ ஸ்ரீ மதவாச்சாரியார் 
மற்றவர்;வாழ்க..வாழ்க.
மத்வர்;சீடர்களே,  வாருங்கள் நாம் பூஜித்த விக்கிரகங்களை ஒவ்வொருவருக்கும் அளிக்கிறோம்.என் எட்டு சீடர்களுக்கும் என் விக்கிரகங்களை அளித்து எட்டு மடங்களை உருவாக்குகிறேன்.

இந்த விக்ரகங்களை பூஜித்து மத்வ மதத்தைப் பிரச்சாரம் செய்து சத்தியத்தை நிலைநாட்டுங்கள்.
மத்வர்;பத்மநாபா,வா இந்த விகிரகத்தைப் பெற்றுக் கொள்.

நரஹரி வா, மாதவா வா  (எட்டு சீடர்களும் விக்ரகங்களை பயபக்தியுடன் பெற்றுக் கொள்கின்றனர்.)
மத்வர்;இனி இந்த உடுப்பி கிருஷ்ணரை இரண்டாண்டுக்கு கொருமுறை நீங்கள் முறை போட்டுப் பூஜிக்க வேண்டும்.நம்மால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஸ்ரீகிருஷ்ணர் அனைவருக்கும் சொந்தமானவர்.பர்யாய முறைப்படி நீங்கள் பூஜை செய்யவேண்டும்.
சீதேகள்(வணங்கியபடியே)அப்படியே குருவே.

                              காட்சி---14










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 26 Jan 2017 at 12:42
Subject: மத்துவாச்சாரியார் (தொடர்ச்சி)
To: <anandanrao@yahoo.com>


                                                 காட்சி --11
(சீடர்களுக்கு ஆனந்த தீர்த்தர் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அங்கே குரு வருகிறார்..அனைவரும் எழுந்து நின்று வணங்குகின்றனர்.குரு அமர்க்கிறார்.)
குரு;ஆனந்த தீர்த்தா, எவ்வளவு எளிமையாக அந்த புத்திசாகர பண்டிதனை வென்று விட்டாயப்பா.எனக்கே தோன்றாத பல செய்திகளை நீ சொல்லக் கேட்டேன்.
ஆனந்த தீர்த்தர்;ஸ்வாமி, எல்லாம் சத்யம்.  சொன்னதெல்லாம் சத்யம் ஸ்வாமி.
குரு;ம்ஹும்.....
ஆனந்த தீர்த்தர்;(மெதுவாக) ஸ்வாமி,
குரு; ஏன்  தயங்குகிறாய்?நினைப்பதைச் சொல்.
ஆனந்ததீர்த்தர்; ஸ்வாமி நான்  வேண்டுவதைத்  தாங்கள்  அருளவேண்டும் 

குரு (சிரித்து)  மீண்டும் தீர்த்த  யாத்திரை  செல்லவேண்டும் அதுதானே? 

ஆனந்ததீர்த்தர்;ஆம் ஸ்வாமி, பத்திரிநாராயணனை  தரிசிக்க வேண்டும்  ஸ்வாமி.

குரு;(புன்னகையுடன்).சென்று   வா சுபமஸ்து 
                                        
ஆனந்த தீர்த்தர் ;(ஒரு ஓலைச் சுவடியை குருவின் கையில் கொடுக்கிறார்)ஸ்வாமி நான் எழுதிய இந்த பாஷ்யத்தைத் தாங்கள் படித்துப் பாருங்கள்.   

(ஆனந்த தீர்த்தர் குருவை வணங்க அவரது சீடர்கள் அனைவரும் வணங்கி  எழுகின்றனர் )
                                           
                                                        காட்சி---12 

(நான்கு  சீடர்களுடன் வந்தேவந்தயம்சதானந்தம்  வாசுதேவம்  நிரஞ்சனம்என்று பாடியவாறு குன்றுகளின் மேல் நடந்து செல்கிறார்) 
ஆனந்ததீர்த்தர்; சீடர்களே, இருட்டிவிட்டது. இனி இங்கேயே இரவு நேரத்தைக் கழிப்போம். நாளைக்கு காலையில் நமது பயணத்தைக் தொடர்வோம்.(அமர்கிறார்)
சீடர்;அப்படியே ஸ்வாமி..
(அனைவரும் பாறையைச் சுற்றி அமர்ந்து நெருப்பு மூட்டிவிட்டு மாவு உருண்டையை உண்டு நீர்பருகி பின் ஆங்காங்கே குருவைச் சுற்றி படுகிறார்கள் இரவு நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்த ஆனந்த தீர்த்தர் ஓலைச் சுவடியுடன் நடக்கிறார் வெகு தொலைவு சென்று நின்று வான் மலையைப் பார்த்து வணங்குகிறார்.அப்போது அங்கு ஒரு பெரியவர் வருகிறார்.
பெரியவர்;ஆனந்த தீர்த்தா, வந்தாயா, வா ஆசிரமத்திற்குப் போவோம்.
ஆ.தீ;ஸ்வாமி தாங்கள் யார் இங்கு எப்படி...தாங்கள்?
பெரியவர்;ம்ஹும்...ம்..ம்..(சிரித்து) வா.வா.

அவர்பின் செல்ல சற்று தொலைவில் அவர் மறைந்து விட அழகிய மலர்வனமும் இடையே ஆசிரமம் ஒன்றும் தென்படுகின்றன.அருகே 
ஸ்ரீவேத  வியாஸபகவான் அமர்ந்திருக்கிறார்.அவர்முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறார் ஆனந்ததீர்த்தர்.
ஆ.தீ.; ஸ்வாமி அடியேனை ஆட்கொள்ளுங்கள்  தேவா.
வேத வியாசர்;ஆனந்த தீர்த்தா ; பகவத் பக்தியையையும் சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவாயாக.உன் எண்ணங்களையெல்லாம் தெரிந்துகொண்டோம் இதையே மக்களிடமும் பரப்புவாய்.ஆன்மீகநெறியை மக்களிடையேபரப்பி உன் அவதாரநோக்கம்   நிறைவேறிய பின் எம்மிடம்  சேர்வாய்.
ஆனந்ததீர்த்தர்;ஸ்வாமி அடியேனுக்கு உபதேசம் செய்தருளுங்கள்.
(கைகுவித்து அவர்முன் நிற்க வியாசர் உபதேசம் செய்கிறார்)
ஆ ;தீ;தன்யனானேன் ஸ்வாமி. இக்கடமையை நான் ஆற்றுவேன். புறப்படுகிறேன்.(வணங்கி புறப்படுகிறார்)
(வந்துகொண்டிருக்கும் போதே)
சீடன் ;குருவே, எங்கே இருக்கிறீர்கள்?எங்களை  இப்படித் தவிக்கவிட லாமா 
சீடன் 2;ஸ்வாமி எங்கு சென்றுவிட்டீர்கள் ?எங்களைத் தவிக்கவிட்டு எங்கு மறைந்தீர்கள் ஸ்வாமி...ஸ்வாமி ..

ஆ.தீ;(வந்துகொண்டே) மாதவா, பத்மநாபா ஏன் இந்தப் பதற்றம்.நான் வந்துவிட்டேன் வாருங்கள் புறப்படலாம் 
   (செல்கிறார்கள்)

                                                                                   காட்சி---13






--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

வியாழன், 17 அக்டோபர், 2019

Fwd:


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:56 PM
Subject: Fwd:
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 21 Jan 2017 at 14:01
Subject:
To: <anandanrao@yahoo.com>


                                            காட்சி --9
(அச்சுதப்ரக்ஞர் முன் வாசு  அமர்ந்திருக்கிறான்.
 அவனுக்கு  பூர்ணப்ரக்ஞர் என்று நாமகரணம் செய்கிறார்)
ஆச்சாரியார்: வாசு உனக்கு பூரணப்பிரக்ஞர் என்று நாமம் சூட்டுகிறேன் (.பூர்ணப்ரக்ஞர் வாழ்க என சீடர்கள் நான்குபேர் கூவுகின்றனர் ,
அப்போது ஒரு சீடன் வருகிறான் அவன் வணங்கி 
சீஸ்வாமி, பூரணப்ரக்ஞருக்கு ஒரு தம்பி பிறந்துள்ளான்.என்று செய்தி வந்துள்ளது.
வாசு;(மகிழ்ச்சியுடன்)எனக்குத் தம்பி பிறந்துவிட்டான்  ஸ்வாமி இனி நான் சந்நியாசி ஆவதில்  எந்தத்  தடையும் இல்லை .
ஆசான்; பூர்ணப்ரக்ஞா சிறிது காலம் செல்லட்டும் .உனக்கு சந்நியாச தீக்ஷை வழங்குகிறேன்.
(அவரை வாசு வணங்கி எழுகிறான்.)
                                                 காட்சி-10
  (அச்சுதப்ரக்ஞர் அமர்ந்திருக்க அவர்முன் காவி உடையுடன் கையில் தண்டம் ஏந்தி பூர்ணப்ரக்ஞர் நிற்கிறார்.குருவைசீடன் வணங்கி அவர்முன் பவ்யமாக அமர்கிறான்.பின்புறம் அபிஷேக மந்திரம் ஒலிக்க(ஸஹஸ்ர சீர்ஷா புருஷக ) கங்கா தீர்த்தத்தை பூர்ணபிரக்ஞரின் தலையில் மெதுவாக  
ஊற்றுகிறார்.
ஆச்சாரியார்;உனக்கு சந்நியாச தீக்ஷை  தந்தேன்.இனி வேதாந்த ஸாம்ராஜ்யாதிபதியாகி ஆனந்த தீர்த்தர் என்ற திருநாமத்துடன் மக்களின் மத்தியில் பிரகாசிப்பாய்.பக்தியை நாடெங்கிலும் பரப்பிவருவாயாக.
சீடர்கள்;ஆனந்த தீர்த்தர் வாழ்க என மூன்றுமுறை கோஷமிடுகின்றனர்.
(அடுத்த காட்சியில் ஆனந்த தீர்த்தர் சற்று வளர்ந்தவராக குருவை வணங்கி நிற்கிறார்.)
 அங்கு வந்த சீடன் ;, நம்முடன் வாதிட அத்வைத  குரு வந்துள்ளார்.புத்தி சாகர பண்டிதர்  அமர்க்களமாக வருகிறார்.அவரை உள்ளே அழைக்கலாமா 
ஸ்வாமி?
ஆச்சாரியார்; இங்கு எம்மைத் தேடி வந்தது மிகவும்  மகிழ்ச்சி அழைத்துவா. (அங்கு புத்திசாகர பண்டிதர் வருகிறார்.)
பண்டிதர்.;உங்களுடன் வாதிட வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;எங்கள் சீடர்  ஆனந்த தீர்த்தர் உங்களுடன் வாதிடுவார்.அமருங்கள்.

(ஆனந்த தீர்த்தர் அவ்விடம் வந்து வணங்கி அமர பண்டிதர் சற்று நேரம் கேள்விகள் கேட்க பின் ஆனந்ததீர்த்தர் அவரிடம் கேள்விகள் கேட்க பதில் சொல்ல முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு வேகமாக அவ்விடம் விட்டுச் செல்கிறார்.)

ஆச்சாரியார்;மிகநன்றாக வாதம் புரிந்தாய் நமது பெருமையை நிலைநாட்ட நீயே சிறந்தவன்.நல்லாசி வழங்குகிறேன்.


(வணங்கி அவ்விடம் விட்டுச் செல்கிறார் ஆனந்ததீர்த்தர்.)


                                                                                     காட்சி-11













--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 8:57 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu, 19 Jan 2017 at 16:13
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>













                           காட்சி----7
(மாணவர்கள் அமர்ந்திருக்கின்றனர்.இவர்கள் நடுவில் வாசு அமர்ந்திருக்கிறான் ).

ஆசான்;(பாடம் நடத்துகிறார்)

கவ்யாசம் புண்டரீகம் என்ற சுலோகத்துக்கு குரங்கின் பின்பகுதி தாமரை போல சிவந்துள்ளது என்று பொருள்.

(அப்போது உள்ளே ஒரு பெரியவர் வருகிறார்)
பெரியவர்;மன்னிக்கணும் சரியான பொருள் சொல்லுங்கள்.அதற்குப் பொருள் அப்படியல்ல.கவ்யாசம் என்பது சூர்யக்கிரணங்கள் அந்த சூரியக்கிரணங்களால் தாமரை மலர்ந்து காணப்படுகின்றது.என்பதே சரியான பொருள்.
வாசு;(மகிழ்ந்து)ஆஹா மிகப் பொருத்தமான பொருள் தாமரை போன்ற சிவந்த கண்களையுடைய இறைவன் என்ற பொருள் மிகச் சிறப்பாக இருக்கிறதே.

ஆசான்;நீங்கள் சொன்னதே சரியென்று வைத்துக் கொண்டால் எங்கள் ஆசான் சொன்னது தவறா?
வாசு;ஸ்வாமி, சரியான பொருள் சொல்வது முக்கியமில்லையா?
பெரியவர்;நீங்கள் கோபிப்பது சரியல்ல.
ஆசான்;நீங்கள் சொன்னதேசரி.(கோபத்துடன்)
பெரியவர்;இது நான் சொல்லவில்லை.ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜர் கூறியது.
ஆசான்;ம்ஹும் அப்படியானால் நீரே பாஷ்யம் எழுதும்.(கோபத்தோடு செல்கிறார்)
மாணவர்கள் கலைந்து செல்ல  சிந்தனையுடன் வீடு வருகிறான் வாசு.)
 
(தனிமையில் அமர்ந்திருக்க தந்தை சொன்னது காதில் ஒலிக்கிறது.திரிவிக்கிரம பண்டிதராகவோ அச்சுதப்ரக்ஞராகவோ அல்லது சந்நியாசியாக இருக்கவேண்டும்.)
சிந்தனையுடன் எழுகிறான்)
                                                                                                      காட்சி-8

(உறங்கிக்கிகொண்டிருக்கும்  தாய்தந்தையரை பாதம் தொட்டு வணங்கியபின் வீட்டின் வெளியே நின்று வீட்டை வணங்கி வேகமாக வெளியே நடக்கிறான். நேராக அச்சுதப்ரக்ஞரிடம் வந்து சேர்ந்து ஆசிரம வாயிலில் அமர்ந்து கொள்கிறான் வாசு.)
தூங்கியெழுந்த அச்சுதப்ரக்ஞர் கராக்ரே வராதே லட்சுமி கரமத் யே சரஸ்வதி என்றபடி வாயிலுக்கு வருகிறார்.அமர்ந்தபடியே  தூங்கி க் கொண்டிருக்கும் வாசுவைப் பார்க்கிறார்.

ஆச்சாரியார்;குழந்தாய், இங்கு என்ன செய்கிறாய்?எப்போது இங்கு வந்தாய்?
வாசு; ஸ்வாமி நான் வாசுதேவன்.மத்யகேக பட்டரின்  மகன்.நான்சந்நியாசியாக விரும்பி தங்களை நாடி வந்துள்ளேன்.
ஆச்சாரியார்;இந்த சிறிய வயதில் உனக்கு ஏனப்பா இந்த எண்ணம் வந்தது? உன்பெற்றோருக்குத் தெரியுமா?
(அப்போது பட்டர் உள்ளே நுழைகிறார்)
பட்டர்;ஸ்வாமி, நமஸ்கரிக்கின்றேன்.என் மகன், ஒரேமகன், வாசு.அவனைத் தேடித்தான் வந்தேன்.
ஆச்சாரியார்;பட்டரே , உங்கள் மகன் இதோ இருக்கிறானே.

வாசு;அப்பா, நான் சந்நியாசியாகப் போகிறேன்.
பட்டர்;வாசு நான் உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.நீ சந்நியாசியானால் நான் கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.
வாசு;(தன துண்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை கௌபீனமாகக் கட்டிக்க கொண்டு )அப்பா நான் சந்நியாசி ஆவதென்று முடிவு செய்து விட்டேன்.உலகபந்தங்களை விட்டேன்.இதோ என் கௌபீனம் தரித்துக் கொண்டேன்.நான் சொன்னபடி செய்து விட்டேன்.நீங்கள் சொன்னபடி செய்யுங்கள்  அப்பா.
பட்டர் ;(துயரத்துடன்)வாசு அப்படியாவது உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள மாட்டாயா என்ற எண்ணம்தான்.
வாசு; உங்களால் முடியாதென்று தெரியும்.
பட்டர்;உன் தாய் இதற்குச் சம்மதிக்க மாட்டாள்.தாயின் அனுமதியின்றி நீ எப்படி சந்நியாசியாவாய்?
(அப்போது வேதவதி ஓடிவருகிறாள்)
வேதவதி;மகனே வாசு, இது என்ன கோலமடா?
வாசு; இது சந்நியாசிக் கோலமம்மா. நான்  சந்நியாசியாக .நீங்கள் அனுமதிக்க வேண்டும்.
வேதவதி;இல்லை எனக்கு இருப்பவன் நீ ஒரேமகன் என் வம்சம் தழைக்கவேண்டும்.உன்னை சந்நியாசியாக விடமாட்டேன்.தயவு செய் மகனே.    
(வணங்குகிறாள் )

வாசு; அம்மா, எப்போதாகிலும் உன்மகனை நீபார்க்கவேண்டுமானால் சந்நியாசியாக அனுமதி கொடு.இல்லையேல் எப்போதும் உன் மகனை நீ பார்க்கவே இயலாது.அத்துடன் மகனை வணங்கவேண்டுமெனில் அவன் சந்நியாசியாக இருக்கவேண்டும். இதோ நீங்கள் வணங்கி விட்டீர்கள்.
வேதவதி ;(துக்கத்துடன்) இல்லையப்பா, எங்கிருந்தாலும் நீ நன்றாக வாழ்ந்தால் போதும்
வாசு; அம்மா, உங்களுக்கு ஒரு மகன் பிறப்பான்.அதுவரை நான் சந்நியாசியாக மாட்டேன்.இது சத்தியம். போய்வாருங்கள் என்றபடியே
அச்சுதப்ரக்ஞரை வணங்குகிறான் அவர் பின்னே செல்கிறான் வாசு 
   (பட்டருக்குவேதவதியும் துக்கத்துடன் செல்கின்றனர்.)

                                                                                     காட்சி-9









--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

Fwd: மத்துவாச்சாரியார்


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed 19 Sep, 2018, 9:07 PM
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Wed, 19 Sep 2018 at 20:59
Subject: Fwd: மத்துவாச்சாரியார்
To: Jayanthi Rangarao <jarangarao@gmail.com>




---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Sat, 14 Jan 2017 at 19:18
Subject: மத்துவாச்சாரியார்
To: <anandanrao@yahoo.com>


                                      
                                                             காட்சி --5  


(கேகயபட்டர்     கையில் சொம்பும் தோளில் துண்டுமாக புறப்படுகிறார்.அப்போது அங்கே வாசு வருகிறான் ) 

வாசு; அப்பா, நீங்கள் நான்கு தீர்த்தங்களை நாடி வெளியே எங்கும் செல்ல வேண்டாம்.நமது வீட்டு கேணியிலேயே புண்ணிய தீர்த்தங்கள் கலந்துள்ளன.
பட்டர் ( சிரித்தவாறே )குழந்தாய்,நம் வீட்டுக் கிணற்றில் எப்படியடா புனிதநீர் கலந்திருக்கும்?
வாசு ; அப்பா நான்கு நாட்களுக்கு முன் நான் தலைகீழாக நட்டுவைத்த மரம் துளிர்த்துள்ளதா பாருங்கள். பிறகு நம்பலாமா வேண்டாமா என சிந்தியுங்கள்  வாருங்கள் அப்பா.
(தந்தையின் கரம் பற்றி அழைத்துச் செல்கிறான்.)
பட்டர்'; அப்படியா சரி வாபார்க்கலாம்.
வாசு; பாருங்கள் அப்பா, இந்த மரம் சிறியதாக இலை  விட்டிருப்பதைப் பாருங்கள்
பட்டர்;(ஆச்சரியத்துடன் பார்த்து)
ஆமாம் வாசு நீ சொன்னது நிஜம்.

வாசு;பார்த்தீர்களா தினமும் புனித நீர் வார்த்ததால்தான் தலைகீழாக நட்ட ஆலமரம் வேரிலிருந்து துளிர் விட்டு வளர்ந்துள்ளதைப் பாருங்கள் அப்பா.
பட்டர்;(மகிழ்ச்சியுடன்) ஆமாம் வாசு.நீ சொன்னதுதான் சரி.நம் கேணியில் எல்லா தீர்த்தங்களின் புனித நீரும் கலந்துதான் இருக்கின்றன என்பதை இப்போது நான் நம்புகிறேன்.இனி இந்த கேணியை வாசுதேவ தீர்த்தம் என்றே கூறுவோம்.
(மகிழ்ச்சியுடன்)இதோ நம் வாசுதேவ தீர்த்தத்தில் குளித்துவிட்டு ஒரு நொடியில் வருகிறேன்.
                               காட்சி---6
(எட்டு வயது பாலகன் வாசு குருகுலத்திலிருந்து ஓலைச் சுவடிகளுடன் வருகிறான்.ங்கே அமர்ந்திருக்கும் பட்டர் அவனைப் பார்க்கிறார்.)
பட்டர்;வாசு அதற்குள்  முடிந்துவிட்டதா?சீக்கிரமே வந்து விட்டாயே?
வாசு; ஆமாம் அப்பா.கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்பது சலிப்பாக வருகிறதப்பா.தனியே அமர்ந்து அதற்கடுத்த பாடத்தைப் படித்துவிட்டு வருகிறேன்.
பட்டர்;(தனக்குள் ) நீஇரண்டாண்டுக்குமுன் கடனுக்காகக் கொடுத்த  புளியங்கொட்டையைப் பெற்றுக் கொண்ட   வியாபாரி இன்று கடனைத் திருப்பிக் கொடுத்தால் வாங்க மறுக்கிறான்.காரணம் கேட்டால் உங்கள் மகன் கொடுத்த 
புளியங்கொட்டை வந்த நேரம் நான் பெரும் தனவந்தனாகிவிட்டேன். உங்கள் கடன்  தீர்ந்துவிட்டது என்கிறான். தலைகீழாக  மரத்தைநட்டு துளிர்க்கச் செயது விட்டான்.இது என்ன மாயமோ அனந்தேஸ்வரா, என் ஒரே மகனைக் காப்பாற்று. என்றபடியே  அமர்கிறார்.
அங்கே வாசு வருகிறான்.)
வா;வாசு,, நீ குழந்தையாக இருக்கும்போதே ஒரு முறைக்கு மேல் கேட்காமல் அடுத்த பாடத்தைக் கேட்பாய். ஆசானிடமும் அப்படியேவா?
வாசு;(சிந்தனையுடன்) அப்பா, நேற்று நீங்கள் சொன்ன ராமாயண ஸ்லோகத்திற்கு உண்மையான விளக்கம் சொன்னது தவறா அப்பா?
பட்டர் ;இல்லை குழந்தாய்.ஒரு தவறும் இல்லை.
வாசு; பின் ஏன் ஆசான் மட்டும் கோபித்துக் கொள்கிறார்?
பட்டர் ;என் சொல்லையும் உன் சொல்லையும் யார் மதிப்பார்கள் குழந்தாய்?அச்சுதப்ரக்ஞராகவோ திருவிக்ரமபண்டிதராகவோ அல்லது சந்நியாசியாகவோ இருக்கவேண்டும்.வா,வா(.போகிறார் )
(வாசு சிந்தனையுடன் செல்கிறான்)




















--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 


--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

Fwd: madhwachariyar.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Mon 23 Sep, 2019, 5:47 PM
Subject: madhwachariyar.
To: <rukmani68sayee.avva@blogger.com>



                                                                                                 மத்வாச்சாரியார்.
         உலக நன்மைக்காகப் பிறவி எடுத்து உலக மக்களை உய்விக்க வந்த ஒவ்வொருவரும் மகான்களே. செயற்கரிய செய்வர் பெரியர் என்ற வாக்கிற்கிணங்க செய்தற்கு அருமையான செயல்களைச் செய்து தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. இங்கு அவதரித்து மக்களுக்கு நல்லுபதேசம் செய்த மகான்களின் வரிசை மிக நீண்டது.அது காலத்திற்குக் காலம் வேறு பட்டாலும் உலக நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது.அப்படிப்பட்ட மகான்களின் வரிசையிலே பதினான்காம் நூற்றாண்டிலே அவதரித்த மகான் மத்வாச்சாரியார் என்னும் புனிதர்.
         கர்நாடகத்தின் தெற்குப் பகுதியிலிருக்கும் உடுப்பி என்னும் க்ஷேத்திரத்திற்கு அருகே ஏழாவது மைலில் உள்ள "பாஜக" என்னும் இடத்தில்தான் இம்மகான் பிறந்தார். இங்குதான் இவர் ஓடியாடி விளையாடி லீலைகள் பல புரிந்தார்.இவரது லீலைகளே இவர் ஒரு அவதார புருஷர் என்பதற்குச் சான்றாக அமைந்திருந்தன.
         திரேதாயுகத்தில் அஞ்சனாதேவியின் புத்திரன் ஆஞ்சநேயனாக அவதரித்து தன் பராக்ரமத்தைக் காட்டி ராமகாதையில் பெரும் பங்கு வகித்தார்.அடுத்து த்வாபர யுகத்தில் குந்திதேவிக்கு மகனாக அவதரித்து பீமசேனன் என்ற பெயர் தாங்கி கிருஷ்ணனுக்கு உற்ற தோழனாக இருந்து தருமருக்கு சிறந்த சகோதரனாகவும் திகழ்ந்தார். கலியுகத்தில் பக்தியைப் பரப்பவும் தீய எண்ணங்களை ஒழிக்கவும் கிருஷ்ண ஆராதனையின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றவும் மத்வாச்சாரியாராகத் தோன்றி த்வைதமதத்தையும் ஏற்படுத்தினார். வாயு தேவரே இந்த மூன்று அவதாரங்களாகத் தோன்றினார் என்பதற்கு அவர்களது புஜ பல பராக்ரமமே சாட்சியாக நிற்கிறது. ஆஞ்சநேயனும் பீமசெனனும் ஆற்றிய அருஞ்செயல்களை இராமாயண, மகாபாரதக் காவியங்களின் மூலம் அறிந்துள்ளோம் மத்வரின் வாழ்க்கை வரலாற்றிலும் அத்தகைய பல செயல்களை நாம் காணலாம்.
மூன்று வயதுக் குழந்தையாக இருக்கும்போதே ஒரு பானை நிறைய வேகவைத்த கொள்ளை உண்டு ஜீரணித்தவர்.
நான்கு பேறாகத் தூக்கினாலும் தூக்க முடியாத கல்லாலான பலகையை அநாயாசமாகத் தூக்கி தயிர்ப் பானையை மூடியது.பால் பானையை பெரும் பாறையால் மூடியது. போன்ற அதிசயங்களை இவர் நிகழ்த்தியதால் இவர் பீமனின் அவதாரம் என்று நிரூபித்தார். ஒரு முறை பாம்பு ரூபத்தில் வந்த அசுரன் இவரை வழிமறிக்க அவனது தலையைத் தன் காலில் வைத்து அவனை நசுக்கிக் கொன்றார்.இப்போதும் இந்த அடையாளங்கள் எல்லாம் "பாஜக" க்ஷேத்திரத்தில் காணலாம்.
              வாயு தேவரின் மூன்று அவதாரங்களாக அனும பீமா மத்வா என த்ரேதா யுகம், த்வாபரயுகம், கலியுகம் என்ற மூன்று யுகங்களிலும் நிகழ்ந்ததாக நம்பப் படுகிறது.
              சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் உடுப்பி அனந்தேஸ்வரரின் அருளால் திரு மத்யகேகய பட்டருக்கும் 
வேதவதி தேவிக்கும் மகனாக அவதரித்தவர் மத்வாச்சாரியார்.வாசுதேவன் என்ற திருநாமம் சூட்டப்பெற்றார். திருமணம் முடித்து இல்லற வாழ்க்கையிலிருந்து துறவறம் செல்லாமல் திருமணத்தன்றே துறவறத்தை நாடிப் புறப்பட்டுவிட்டார். "பூரணப் பிரக்ஞர்" "ஆனந்த தீர்த்தர்" முதலிய பல பெயர்களைப் பெற்றுத் திகழ்ந்தார்.சிறந்த ஹரிபக்தியில் திளைத்தார்.பிரகல்லாதனைப் போல் பக்தி செலுத்தி அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினார்.ஒவ்வொரு த்வாதசியன்றும் அருகிலிருந்த குஞ்சாறு என்ற குன்றைச் சுற்றியிருந்த நான்கு தீர்த்தங்களில் நீராடி வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் மத்தியகேகய பட்டர். அன்று அவரால் சென்று தீர்த்தமாட முடியவில்லை. அதனால் வருத்தத்துடன் காணப்பட்டார்.இதைப் பார்த்த மத்வர் தன் தந்தைக்காக நான்கு தீர்த்தங்களின் புனிதம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து தங்களின் வீட்டின் பின்புறமே "வாசுதேவ தீர்த்தத்தை"
நிர்மாணித்தார்.அதன் புனிதத்தை நிரூபிக்கும் பொருட்டு அங்கிருந்த ஆலமரத்தைப் பெயர்த்து தலைகீழாக நட்டு இந்த தீர்த்தத்தின் நீரை விட்டு வர வேரிலிருந்து துளிர் விட்டு கிளைகள் விழுதுகள் எனப் படர்ந்து வளர்ந்தது.அந்த மரமும் வாசுதேவ தீர்த்தமும் இன்றும் சாட்சியாக உள்ளன.
               இவர் சிறுவனாக இருந்த போது தந்தையின் கடனைத் தீர்க்கும் பொருட்டுக் கடன்காரருக்குப் புளியங் 
கொட்டையைக் கொடுத்தாராம். அவரும் அதை எடுத்துச் சென்றார். சில நாட்களிலேயே அவர் பெரும் தனவந்தர் ஆகிவிட்டதாகக் கூறி மகிழ்ந்து மத்திய கேகய பட்டருக்கு மரியாதை செய்தாராம்.இப்படிப் பல லீலைகளைப் புரிந்த 
மத்வர் உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ண விக்ரகத்தை பிரதிஷ்டை செய்த வரலாற்றையும் பார்ப்போம்.
மல்ப்பே கடற்கரை அழகும் செழுமையும் நிறைந்தது.வரலாற்றுப் பெருமை மட்டுமல்லாது ஆன்மீகச் சிறப்பும் கொண்டது. அது ஒரு இயற்கைத் துறைமுகமாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. படகுகளும் சிறு கப்பல்களும் 
சூராவளியினின்றும் தப்பிக்க இந்தத் துறைமுகத்தில்தான் ஒதுங்குவது வழக்கம். அப்படிப்பட்ட கடற்கரையில் மத்வாச்சாரியார் தியானத்தில் அமர்ந்திருந்தார்.அப்போது பெரும் சூறாவளி ஏற்பட்டது. கடலில் வந்த சிறிய கப்பல் ஒன்று அந்தச் சூறாவளியில் சிக்கித் தடுமாறியது. கடற்கரை நோக்கி நகரமுடியாதபடி  பெரும் காற்று அந்தக் கப்பலை அலைக்கழித்தது. மூழ்கி விடும் போலத் தள்ளாடியது கப்பல்.
             அதில் பயணம் செய்த வணிகர்கள் உயிருக்குப் பயந்து பெரும் கூச்சலிட்டனர். வெகு தொலைவில் கரையையும்  அங்கு அமர்ந்திருக்கும் ஒரு சந்நியாசியையும் கண்டனர். கப்பலில் இருந்த பலரும் அவரை நோக்கிக் காப்பாற்றும் படி கூவினர். கண்களைத் திறந்த மத்வர் நிலைமையைப் புரிந்து கொண்டார். காற்றுக்கு அதிபதி வாயுதேவர்.அவரை எண்ணி வாயுஸ்துதி செய்தார் மத்வர். தனது காவி வஸ்திரத்தை அசைத்தார். காற்றும் நின்றது கப்பலும் கரையை அடைந்தது.அந்தக் கப்பலிலிருந்த வணிகர்கள் மத்வரைப் பணிந்து காணிக்கை கொடுக்க முன் வந்தனர் ஆனால் அதை ஏற்காத மத்வாச்சாரியார் அவர்கள் கப்பலைத் தாங்குவதற்காக சுமைக்காக வைக்கப் பட்டிருந்த கோபிச்சந்தனக் கற்களைத் தருமாறு கேட்டார்.
           அவரது விருப்பப் படியே அந்தக் கட்டிகளைக் கொடுத்தார் கப்பல் தலைவர்.மத்வர் அந்தக் கட்டியை உடைக்க அதற்குள் கையில் மதத்துடன் நிற்கும் கிருஷ்ணா விக்கிரகம் காட்சியளித்தது.அந்த விக்கிரகத்தை அனந்தேஸ்வரர் கோயிலின் அருகே பிரதிஷ்டை செய்தார்.அந்த இடம் இன்று உடுப்பி என்ற புண்யக்ஷேத்திரமாக விளங்குகின்றது.(தொடரும்)





Fwd: மத்வாச்சாரியார்.


---------- Forwarded message ---------
From: Rukmani Seshasayee <rukmani68sayee@gmail.com>
Date: Thu 5 Jan, 2017, 10:32 PM
Subject: மத்வாச்சாரியார்.
To: <anandanrao@yahoo.com>


                                                              ( காட்சி--1)

 (அழும் குழந்தையை கல்யாணி  மடியில் வைத்துக் கொண்டு சமாதானம் செய்கிறாள்.)

கல்யாணி ;  அழாதேடா குழந்தாய். அம்மா வந்துவிடுவாள். பசிக்கு பால் தருவாள்.அழாதே வாசு.

இரு உனக்கு தின்ன ஏதாவது தருகிறேன்.(குழந்தையைக் கீழே விட்டுவிட்டு உள்ளிருந்து ஒரு பாத்திரத்திலிருந்து வேகவைத்த பயறு கைப்பிடி எடுத்துத் தருகிறாள். அதைக் குழந்தை மடியில் வைத்துத் தின்கிறான். அழுகை நின்றபின் கல்யாணி உள்ளே செல்கிறாள் பயறு தின்ற பின் மீண்டும் பாத்திரத்திலிருந்து பயறை எடுத்துத் தின்கிறான். பின் பாத்திரத்தோடு தின்றுவிட்டு பாத்திரத்தை உருட்டிவிடுகிறான்.)
வேதவதி ; (வந்துகொண்டே)குழந்தாய் வாசு பசிக்கிறதா?ரொம்ப நேரமாகிவிட்டதா, இரு பால் தருகிறேன் வா. குழந்தையைநெருங்கிப் பார்த்து அவன் சிரிப்பதைப் பார்த்து அதிசயத்துடன் நின்றவள் பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து துடிக்கிறாள்.
ஐயோ இதிலிருந்த பயறு என்னவாயிற்று? கல்யாணி! சீக்கிரமாக வா.இதிலிருந்த பயறு என்னவாயிற்று?

கல்யாணி ஓடி வருகிறாள் 
ஐயோ அம்மா தம்பி முழுவதையும் தின்று விட்டானம்மான்ன செய்வேன்.

வேதவதி;குழந்தைக்கு வயறு வலிக்காமல் இருக்கவேண்டுமே அப்பனே அனந்தேஸ்வரா நீதான் துணை.(குழந்தையின் வயிற்றைத் தடவிக்கொடுக்க அவன் சிரித்துக் கொண்டே வெளியே ஓடுகிறான்.)

                                                               (காட்சி--2)

(வேதவதி நீர்தெளித்து இலைபோட்டு பலகையை போட்டுக் காத்திருக்கிறாள்.அங்கு  வாசு வருகிறான்)

வாசு;அம்மா, எனக்குப் பசிக்கிறது அப்பா எங்கேயம்மா?
வேதவதி ; குழந்தாய். உணவு தயாராக இருக்கிறது போய்  அப்பாவை அழைத்து வா. சாப்பிடலாம் .

வாசு ;இதோ வருகிறேன் அம்மா.(அப்பா என அழைத்தவாறே ஓடுகிறான்.

                                                                   

                                                                  ( காட்சி--3) 
(ஒரு மரத்தடியில் எருது வியாபாரி  அமர்ந்திருக்கிறார்.அருகே மத்ய கேக பட்டர் கவலையுடன் நிற்கிறார்.அவரருகே வந்து கையைப் பற்றுகிறான் வாசு) 

வாசு ;அப்பா, வாருங்கள் சாப்பிடலாம். எனக்கு நிரம்பப் பசிக்கிறது.
பட்டர்; வாசு இந்த மனிதருக்குக கடனைத் திருப்பிக் கொடுத்த பின்னர்தான் நான் சாப்பிடவேண்டும். உனக்குப் பசிக்கும் நீ போய்ச் சாப்பிடு.
வாசு; இல்லையப்பா. நாம் இருவரும் சேர்ந்தேதான் சாப்பிட வேண்டும்.கொஞ்சம் இருங்கள் 
(எருது வியாபாரியிப் பார்த்துக் கூறுகிறான்) 
ஐயா, என் அப்பாவைச் சாப்பிட அனுமதியுங்கள்.அவருடன்தான் நான் சாப்பிடுவேன். எனக்குப் பசிக்கிறது.
வியாபாரி;குழந்தாய், உன் அப்பா எருது விற்ற தொகை ஐம்பது வராகன் தரவேண்டும். அதைக் கொடுத்துவிட்டால் நான் போய்விடுவேன். பிறகு நீ உன் அப்பாவுடன் சேர்ந்து சாப்பிடலாம்.(சிரிக்கிறார்)
வாசு;அப்பா, நீங்கள் உள்ளே செல்லுங்கள். இவர் கடனை நான் தீர்த்துவிட்டு வருகிறேன்.
பட்டர்; நீ குழந்தையல்லவா.நீ எப்படியப்பா இவர் கடனைத் தீர்ப்பாய்?
வாசு;( வியாபாரியின் கையைப் பற்றி சற்றுத் தொலைவு அழைத்துச் செல்கிறான் ) ஐயா, தந்தையின் கடனைத் தீர்ப்பது ஒரு தனயனின் கடமை.இந்தாருங்கள்.(கீழே குனிந்து புளியங்கொட்டைகளைப் பொறுக்குகிறான் அதை வியாபாரியின் கையில் தருகிறான்)
ஐயா, இதைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
வியாபாரி;கனிவுடன் )குழந்தாய் தந்தையின் கடனைத் தீர்ப்பது தனயனின் கடமை என்ற உன் நல்ல உள்ளத்திற்காக இதைப்  பெற்றுச் செல்கிறேன். 
நீ  உள்ளே போய்ச் சாப்பிடு..
(பட்டரைப் பார்த்து )பட்டரே , உங்கள் கடன் தீர்ந்தது என்று எண்ணிக் கொள்ளுங்கள்.நான் வருகிறேன்(போகிறார்)
வாசு;(திகைத்து நின்ற பட்டரின் கைகளை பற்றி )வாருங்கள் அப்பா, சாப்பிடப் போகலாம்.(போகிறார்கள்)
                                                                                  (காட்சி --4)
(வேதவதி கையில் இலையுடன் வருகிறாள்.அப்போது வாசு ஓடிவருகிறான்.)
வாசு; அம்மா, எனக்குப் பசிக்கிறது.சீக்கிரம் சாதம்  பரிமாறுங்கள அம்மா. அப்பா எங்கேயம்மா?
வேதவதி; வாசு சற்று நேரத்தில் அப்பா வந்துவிடுவார். பொறு.
வாசு; அப்பா எங்கேயம்மா.
வேதவதி; அவர் பரசு தீர்த்தம், தனுசு,பண தீர்த்தம், கட தீர்த்தம் ,அனைத்திலும் ஸ்நானம் செய்துவிட்டு வர சற்று நேரமாகும் அதுவரை நீ பொறுமையாக இரு.
வாசு; அம்மா, இந்த குஞ்சார் மலையைச் சுற்றியுள்ள அத்தனை தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு வர நேரம் மட்டுமல்ல ரொம்ப சிரமமும் அல்லவா?
வேதவதி ;ஆனால் உன் தந்தை அந்தத்தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யாமல் வரமாட்டார்.சாப்பிடவும் மாட்டாரே.
(அப்போது ஈரத்துண்டுடனும் கையில் சொம்பில் நீருடனும் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லியபடியே உள்ளே வருகிறார் மத்ய கேக பட்டர்.)
வாசு;அப்பா நான்கு தீர்த்தங்களில் நீராடி வருவது உங்களுக்கு சிரமமாக இல்லையா அப்பா.
(.பட்டர் சிரிக்கிறார்)
பட்டர்; இருந்தாலும் அந்த தீர்த்தங்களில் ஸ்நானம்சரிசெய்வது என் வழக்கமாகிவிட்டதப்பா.தீர்த்த ஸ்நானம்  செய்தபின்னர் சாப்பிட்டால்தான் என் மனம் திருப்தியடைகிறது.
வாசு; ஏனப்பா நமது வீட்டின் பின்புறம் இருக்கும் கேணியில் அந்த நான்கு தீர்த்தங்களின் புனித நீரும் இருக்கிறது என்றால் அதில் குளித்தால் போதுமல்லவா.
பட்டர்; போதும்தான் ஆனால் கேணிநீரில் புனித தீர்த்தம் கலந்துள்ளது என்பதை எப்படி ஒப்புக் கொள்வது?
வாசு;என்னுடன் வாருங்களப்பா (அவர் கையைப்பிடித்து பின்புறம் அழைத்துச் செல்கிறான்.)(ஒரு ஆலமரத்தைக் காட்டி)
அப்பா இந்த ஆலமரத்தை தலைகீழாக நட்டு அதைஇந்த நீரை விட்டு வரலாம். நான்கு நாட்களில் இந்த மரம் துளிர்விட்டு வளர்ந்தால் அப்போது இந்த கேணியில் புனிதநீர் இருக்கிறது என்று நம்புவீர்களா அப்பா?
பட்டர்; (சிரித்து)என்னப்பா சொல்கிறாய்?தலைகீழாக நட்ட ஆலமரம் துளிர்விட்டு வளர்வதாவது.உன் விளையாட்டை உன்போன்ற பிள்ளைகளிடம் வைத்துக் கொள்ளடா.
வாசு; இல்லையப்பா. உண்மையாகச் சொல்கிறேன்.இதோபாருங்கள்.(அங்கிருக்கும் ஒரு சிறிய மரத்தைப் பிடுங்கி  தலைகீழாக .
நடுகிறான்.கேணி நீரைக் கொண்டு வந்து ஊற்றுகிறான்.
அப்பா இன்னும் இரண்டு நாட்களில் இந்த மரம் துளிர்க்கும்.அப்போது நான் சொன்னதை நம்புங்கள்.இப்போது சாப்பிடப் போகலாம் வாருங்கள்.(அவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறான் வாசு.)
ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com